ஜெபத்தை உயர்வாய் மதித்த ஒரு மனிதன்
ஜெபத்தை உயர்வாய் மதித்த ஒரு மனிதர்,
"எப்பாப்பிரா"
கொலோசெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் அனுப்பின நிருபத்தின் முடிவில், அவர் இவ்வாறு சொல்கிறார்: “எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவ எல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.”(கொலோ 4:12, 13.)
ஆம், ரோமில், பவுலின் ‘‘உடன் கைதியாய்” எப்பாப்பிரா இருந்தபோதுங்கூட, கொலோசெயிலும், லவோதிக்கேயாவிலும், எராப்போலியிலும் இருந்த தன் மிக நேசமான சகோதரர்களைப் பற்றி அவர் சிந்தித்துக்கொண்டும், அவர்களுக்காக ஜெபித்துக்கொண்டும் இருந்தார்.
(பிலேமோன் 23)
சொல்லர்த்தமாய், ஜெபத்தில் அவர்களுக்காகப் ‘போராடினார்.’
அறிவாளர் டி. எட்மண்ட் ஹீபெர்ட் சொல்லுகிறபடி, இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்கப் பதம், ‘விடாமுயற்சியுடனும் பெரும் தியாகத்துடனும் நடப்பிக்கும் செயலைக்’ குறிக்கிறது; கெத்சமனே தோட்டத்தில் இயேசு கிறிஸ்து ஜெபித்தபோது அவர் அனுபவித்த மன ‘வியாகுலத்திற்கு’ ஒப்பான ஒன்றைக் குறிக்கிறது.
(லூக்கா 22:44)
தன் ஆவிக்குரிய சகோதரரும் சகோதரிகளும், திடநிலையையும் முழு கிறிஸ்தவ வளர்ச்சியையும் அடையவேண்டுமென்று எப்பாப்பிரா உள்ளார்வத்துடன் விரும்பினார். இப்படிப்பட்ட ஆவிக்குரிய மனப்பான்மையுடைய சகோதரன், சபைக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருந்திருக்க வேண்டும்!
‘பிரியமான உடன்வேலையாளன்’ என்று எப்பாப்பிரா அழைக்கப்பட்டதால், உடன்கிறிஸ்தவர் விரும்புமளவாக அவர் நடந்துகொண்டார் என்பதில் சந்தேகமில்லை.
(கொலோ 1:7)
சந்தர்ப்பங்கள் ஏற்படுகையில், சபையிலுள்ள உறுப்பினர் எல்லாரும் உள்ளார்வத்துடனும் அன்புடனும் மற்றவர்களுக்கு உதவியாயிருக்க வேண்டும்.
உதாரணமாக, நோயுற்றவர்களுக்கு, முதிர்வயதானவர்களுக்கு, அல்லது தனிப்பட்ட உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்குக் கவனம் செலுத்தலாம். சபையில் கவனிப்பதற்கு பல்வேறு பொறுப்புகள் இருக்கலாம், அல்லது தேவராஜ்ய கட்டிட ஏற்பாடுகளுக்கு உதவி தேவைப்படலாம்.
எல்லாரும் செய்ய முடிகிற பரிசுத்த சேவையின் ஒரு வகையானது, எப்பாப்பிராவைப்போல் மற்றவர்களுக்காக ஜெபிப்பதாகும். ஆவிக்குரிய அல்லது சரீரப்பிரகாரமான பல்வேறு ஆபத்துகளை அல்லது இக்கட்டுகளை எதிர்ப்பட வேண்டிய நிலையில் இருக்கிறவர்களான தேவனுடைய பிள்ளைகளின் மீது அக்கறையைத் தெரிவிக்கும் சொற்கள் அடங்கியவையாக அத்தகைய ஜெபங்கள் இருக்கலாம். இவ்வகையில் நாம் ஆர்வமாக சுறுசுறுப்புடன் ஈடுபடுவதன்மூலம், எப்பாப்பிராவைப்போல் நாம் இருக்கலாம். கிறிஸ்துவின்
உண்மையுள்ள ஊழியராகிய குடும்பத்தில் ‘பிரியமான உடன்வேலையாளராய்’ நிரூபிக்கும் சிலாக்கியத்தையும் மகிழ்ச்சியையும் உடையோராக நாம் ஒவ்வொருவரும் இருக்கலாம்.
ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்பு
9841711591.
Comments