ஜெபிக்கும் போது கவனிக்க வேண்டியவை
*_ஜெபிக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்..._*
```1.அதிக வற்புறுத்தலால் ஜெபம் கேட்கப்படும் என்று நினைப்பது தவறு.
நாம் ஜெபிக்கும் விஷயத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமலே ஜெபித்தல் கூடாது.```
```( உதாரணமாக ( i ). தீயபழக்கத்தை விட்டு விட ஆசையில்லாமலே அதற்காக ஜெபித்தல்)```
```2. பிரார்த்தனைகள் திட்டவட்டமாய் இருத்தல் வேண்டும் .👍🏻```
```(உ.தாரணம் ( i ). நாங்கள் பாவிகள் எங்களை மன்னியும் என்று கேட்பது எளிது, ஆனால் நமது பாவங்களை ஒவ்வொன்றாய் அறிக்கை செய்தல் வேண்டும்.
( ii ). எல்லா ஈவுகளுக்கும் நன்றி என்று சொல்லாமல், அவற்றை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு நன்றி செலுத்துதல் நல்லது ).```
```3. பிரார்த்திக்கும் போது நாம் ஒருவர் மாத்திரமே இந்த உலகத்தில் இருப்பது போல நினைத்துக் கொண்டு சுயநலமுள்ள ஜெபத்தை ஏறெடுக்கக் கூடாது. நம் ஜெபத்தால் மற்றவர்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமா என்பதை கவனிக்க வேண்டும்.```
```( உ.தா ( i ) ஒரு😄☝🏻 குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக மழையை நிறுத்தச் சொல்லி ஜெபித்தல்
( ii ). நாம் தாமதமாக கிளம்பிவிட்டு, அதற்காக ரயில் தாமதமாக புறப்பட வேண்டும் என்று ஜெபித்தல் )```
```4. என் விசுவாசம்😷 அதிகமாயிருப்பதால் ஜெபத்திற்கு நான் எதிர்பார்த்த பதிலே கிடைக்கும் என்று நினைத்தல் தவறு. சில காரியங்களுக்காக நாம் ஜெபிக்காமலும் இருக்க வேண்டும்.
வேதத்தில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட விஷயங்களுக்கு ஜெபித்தல் ஆகாது.```
```(உ.தாரணம் ( i ). அவிசுவாசிகளுடன் திருமண உறவு வேண்டாம் என்று வேதம் சொல்லும் போது,
வேண்டும் என்று சொல்லி ஜெபித்தல் கூடாது).```
```5. நியாயமில்லாத😥📖 செயலுக்காக ஜெபித்தல் தவறு.
(உ.தா ( i ). ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிவிட்டு யாரிடமும் மாட்டி விடக்கூடாது என்று ஜெபித்தல் தவறு) ......```
```6. முதலாவது👍🏻👍🏻 தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள் என்பது, ஜெபத்திற்கே முதலில் பொருந்தும்
தேவனுடைய ராஜ்யத்திற்கு ஏற்றவைகளை மாத்திரம் ஜெபித்தல் நல்லது.
(உ.தா , 1. கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று ஜெபித்தல் ஒன்றுக்கும் உதவாது)```
```7. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம் புரிந்து ஜெபித்தல் நல்லது.
(உ.தா , i. பகைவரை சினேகிக்க வேண்டி ஜெபித்தலை விட்டு சபித்தல் ஆகாது.```
```ii. பழைய ஏற்பாட்டின் பொருத்தணை ஜெபம் புதிய ஏற்பாட்டில் ஒரு போதும் செல்லாது
என்பதை மனதில் கொள்க.```
```iii. பழைய😄 உடன்படிக்கையில் நமக்காக ஆசாரியன் ஜெபித்த போது, புதிய உடன்படிக்கையில்
நாமே ஆசாரியர்கள் என்பதை மறக்கக் கூடாது.```
```iv. 👮🏻👷🏻இஸ்ரயேல் ஜனங்கள் தேவாலயத்தில் வந்து ஜெபித்த போது விசேஷித்த பலனைப்
பெற்றார்கள். ஆனால் இப்போதோ நாமே தேவனுடைய ஆலயமாய் இருக்கிறோம். இடம்
ஒரு பொருட்டல்ல.)```
```8 😷ஜெபத்தின் மூலம் பக்கத்தில் உள்ளவருக்கு உபதேசிப்பதைக் காட்டிலும் ஊமையாயிருப்பதே நல்லது.```
```9 . 😫மேடையில் ஒருசிலரை கௌரவிப்பதற்காக, கொடுக்கப்படும் ஜெபம் கழிவறையில் இருக்கும் அசுத்தங்களைக் காட்டிலும் அருவருப்பானது.```
```10. 🙉அதிக சப்தமாய் ஜெபித்தால் தான் ஜெபம் கேட்கப்படும் என்று எண்ணுவது, தேவனை செவிடு என்று எண்ணுவதற்குச் சமமானது.```
```11. 👍🏻👷🏻அதிகாரத்தை பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி ஜெபத்தில் சாதாரணக் காரியங்களுக்குக் கூட தேவனுக்குக் கட்டளை கொடுப்பது அவரை வேலைக்காரராக்குவதற்குச் சமம்.```
```12 . 😡😱😨நம்முடைய சிற்றின்பங்களை நிறைவேற்றுவதற்கு ஜெபமல்ல, நம்மை வெறுப்பதற்கே ஜெபம்.```
```13. 😓சிலுவை பாடுகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஜெபமல்ல, சிலுவையை சுமக்கவே ஜெபம்.```
```14. 😍பிரசங்கம் செய்வதற்காக ஜெபமல்ல, வாழ்வை பிரசங்கமாக்குவதற்கே ஜெபம்.```
```15. 😡😱பிரச்சனைகளை மாற்றுவதற்கு ஜெபமல்ல, பிரச்சனைகள் மூலம் நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதற்கே ஜெபம்.```
```16. 😭😰😥😪அலங்கார வார்த்தைகளா ஜெபம்! அழுகையின் வார்த்தைகளே ஜெபம்.```
```17. 😞விசுவாசமில்லாத ஜெபம் செத்த பிணத்தோடு பேசுவதற்குச் சமம்.```
```18. 📖தேர்விலே தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஜெபத்தை விட, தேர்வுக்காக நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஜெபமே கேட்கப்படும்.```
```19. 😦அடுத்தவர்களுடைய குறையை தேவனுக்குத் தெரியப்படுத்துவதை விட நம்முடைய குறையை தேவன் தெரியப்படுத்த வேண்டும் என்பதே சரியான ஜெபம்.```
```20. 😁நம்மிடம் இல்லாத பொருட்களை தேவனிடம் கேட்பதை விட நம்மிடம் உள்ள பொருள்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துதல் மேன்மையானது.```
```21. 👷🏻மனுஷனுக்கு ஏற்றவைகளைக் கேட்பது பேதுருவின் ஜெபம், தேவனுக்கு ஏற்றவைகளைக் கேட்பது கர்த்தர் இயேசுவின் ஜெபம்.```
```22. மனிதனுக்கு முன்பாக மேன்மையாக வாழ வேண்டும் என்பதற்கு ஜெபமல்ல, தாழ்மையாக வாழ வேண்டும் என்பதற்கே ஜெபம்.```
```23. 👶🏼நடந்த சம்பவங்களை தேவனுக்கு ஜெபத்தில் மீண்டும், மீண்டும் தெரியப்படுத்துகிறவன்(ள்), தேவனை நடக்கத் தெரியாத குழந்தையைப் போல நடத்துகிறான்(ள்).```
```24.👍🏻தேவனுக்கே தேவனுடைய வார்த்தையை சுட்டிக்காண்பிப்பது பழைய ஏற்பாட்டின் ஜெபம். அவர் தமது வார்த்தையை நமக்கு சுட்டிக்காண்பிக்க வேண்டுமென்பது புதிய ஏற்பாட்டின் ஜெபம்.```
```25. 🙇🏻வரத்தினால் கூட செய்ய முடியாத ஊழியத்தை ஜெபத்தினால் செய்ய முடியும்.```
```26. 🔨🔪ஜெபத்தினால் தீட்டப்படாத கோடாரி எந்த இதயமாகிய மரத்தையும் வெட்ட முடியாது.```
```27. நம்முடைய இதயக் கதவின் திறவுகோலே ஜெபம்.```
```28. 💖நம் இதய சிந்தனைகளையெல்லாம் தேவனுக்கு எடுத்துக் கொடுக்கும் கரமே ஜெபம்.```
```29.👉🏻 மற்றவர்களிலிருக்கும் பிசாசை துரத்துவதற்கு மாத்திரம் ஜெபமல்ல, நம் வாழ்கையில் எந்த ஒரு இடத்திலும் பிசாசுக்குப் பிரியமானதை செய்யாமல் இருக்கவே ஜெபம்.```
```30☝..கடைசியாக, உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும் என்று ஒப்பு கொடுத்து ஜெபித்துவிட்டு😇.
உங்கள் ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேறாத பட்சத்தில்!?
முகத்தை தொங்கவைத்து கொண்டு மிகவும் சலிப்புடன் நடந்து கொள்வது ஜெபமல்ல......❗❓
கல்லெறியும் ⬛ போது ஸ்தேவானைப்போல😊
சிங்ககெபியில் வீசியெரியப்பட்டாலும் 🐅 தானியேல் போல 😊
ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட அக்கினிக்கு முன் 🔥🔥 அனனியா 👮🏻 மீஷாயேல் 👮🏻 அசரியாவைப்போல👮🏻
( இன்னும் பலர்......👉🏽....📖)
கர்த்தராகிய நம் இரட்சகரை தங்கள் வாழ்க்கையில் மறுதலியாமல் அவருக்காக, அவரின் சித்தம் நிறைவேற தங்களையே ஒப்புகொடுத்து ஜெபித்து, ஆண்டவரிடம் நிறைவேற்றி காண்பித்தார்களே இதுதான் ஜெபம் 😇🙏🏻```
```( இன்றைக்கு உங்கள் ஜெபம் எப்படிப்பட்டதாயிருக்கிறது.. ❓)```
கிறிஸ்துவின் பணியில் உங்கள் சகோதரன் .
Comments