இடறல்
இடறல்
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, *இடறல்கள் வருவது அவசியம்,ஆனாலும் எந்த மனுஷனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ!*
(மத்தேயு 18:6-7)
தேவனிடத்தில் விசுவாசம் இருக்கிறவர்களுக்கு மிகப்பெரிய இடறல் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆகையால் தேவனுடைய பிள்ளைகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் நம்முடைய ஆவிக்குரிய ஓட்டத்தில் ஓட வேண்டும்.
ஆட்டுத்தோலை போர்த்துக் கொண்ட ஓநாய்கள் சபையில் பெருகி இருக்கிற காலம்.
இவர்கள் தன்னை தீர்க்கதரிசி என்றும், தன்னை உண்மையுள்ளவன் என்றும் காட்டிக் கொள்வார்கள்.
ஆனால் உள்ளத்தில் பட்சிக்கிற ஓநாய்கள்.
(மத் 7:15)
தேவனோடு இந்த வேத புத்தகத்தோடும் நேரத்தை சரியாக செலவிடுகிறவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் இடறி விழுவதில்லை. ஆகையால் ஊழியர்களை நேசிப்பதை காட்டிலும் இயேசு கிறிஸ்துவை அதிகமாக நேசியுங்கள்.
தேவ பக்தியின் வேஷத்தை தரித்துக்கொள்வார்கள்.
இன்று சபைகளில் சினிமா படத்தில் வேஷம் போடுவது போல வேஷம் போடுகிற ஒரு பெரும் கூட்டம் சபையில் பெருகிக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் தலையில் டை அடிப்பதை வெறுத்தவர்கள் என்று தலைக்கு டை போடுகிறார்கள். முகத்துக்கு பவுடர் போடாதவர்கள் இன்று நன்றாக மேக்கப் போடுகிறார்கள். ஆனால் இதைவிட தன்னை ஒரு ஆவிக்குரியவனாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் இரட்டை வேடம் போடுகிறாகள். மேடையில் ஒரு வாழ்க்கை உலகத்தில் ஒரு வாழ்க்கை.
மேடைக்கு வரும் பொழுது பரிசுத்தம், ராஜா வருகிறார்,
உலகத்தில் சாக்கடையில் வாழ்வது, பிறருடைய மனைவியுடன் உல்லாசம். சொந்த மனைவியை டைவர்ஸ் செய்வது, பாடல் சூப்பர், ஆராதனை சூப்பர், நடனம் சூப்பர், ஆனால் அவருடைய வாழ்க்கையை பாருங்கள் அசிங்கம் சாக்கடை, (பிரசங் 8:11,)ன்படி கடவுள் அவர்களுக்கு தண்டனையை தாமதமாக கொடுக்கிறார் என்பதை அறியாத உண்மை கிறிஸ்தவர்கள் இடறிகிறார்கள்.
ஆனால் இந்த வேஷதாரிகள், பணத்திற்காகவும், புகழுக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், வாழ்கிற இவர்கள் உயிரோடு செத்தவர்கள்.(1தீமோ 5:6) பக்தியின் வேஷத்தை போட்டுக் கொண்டவர்கள் என்பதை சபை அறிந்து கொள்ள வேண்டும் அப்போது இடறி விழுவதில்லை.
(2தீமோ 3:5)
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
(2 பேதுரு 1:10)
இன்று அநேகர் இடறி விழுவதற்கான காரணம். தனக்கு பிடித்த ஊழியர்களை பார்த்து அவர்களைப் பின்பற்றுவது, அவர்களிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளுதல், ஒரு பிரபல ஊழியர் இருந்தார், அவரிடம் அநேக ஊழியர்கள் வேலையை பார்த்தார்கள், அவரிடம் வேலையை பார்த்த அனைத்து ஊழியர்களும் அவரை விட்டு வெளியே வந்த பிறகு அவரிடம் கற்றுக் கொண்ட வித்தையை பயன்படுத்தி இன்று மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த குறைவும் இல்லை.
*பல நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்தாலும் நோக்கம் பணத்தை சம்பாதிப்பதே, தேவனுக்காக ஆத்துமாவை அல்ல!!!*
இன்று
பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக, தொழில் அதிபர்களாக, வர்த்தகத் தலைவர்களாக வலம் வருகிறார்கள், இவர்களோடு கைகோர்த்துக் கொண்டவர்கள் எல்லாம் கிருபை என்று சொல்லுகிறார்கள், ஐசுவரியவானுடைய நிலைதான் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.
இவர்கள் ஒரு நாள் வாழ்வை இன்பமென்று எண்ணி வாழ்கிறவர்கள். நித்திய வாழ்வை நெருங்க முடியாதவர்கள்.
தேவனுடைய பிள்ளைகளோ தேவனோடு சஞ்சரிப்பதை விரும்புங்கள். வேதத்தோடு நேரத்தை செலவிடுங்கள். அவரை அறிகிற அறிவில் வளர்ந்து விருத்தி அடையுங்கள். தேவ பக்தி உள்ளவர்களாக தேவ சித்தம் செய்து முடிப்பவர்களாக நாம் எப்பொழுதும் தேவனுடைய விசுவாசிகளாக தேவனுடைய பிள்ளைகளாக இருப்போம் ஒரு நாளும் நாம் இடறி விழுவதில்லை.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments