சாலமோனின் மரணத்தின் போது
சாலொமோனின் மரணத்தின் போது எபிரேயரின் தேசம், இரண்டு தேசங்களாக பிரிந்தன.
1) இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்ட வடதேசம் முதலில் யெரொயாமினால் ஆட்சி செய்யப்பட்டது.
(1,இரா 12:20)
யூதா என்று அழைக்கப்பட்ட தென் தேசம் முதலில் சாலொமோனின் மகனான ரெகொபெயாமினால் ஆளப்பட்டது.
(1இரா 12:17)
கி.மு.722இல் ஆசீரியர் வந்து பத்துக் கோத்திரங்களையும் சிறை பிடிப்பது வரை இந்த பிரிவினை நீடித்தது.
தென் தேசமாகிய யூதா கி.மு.586 இல் பாபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்டது. இந்த இரு தேசங்களின் வரலாறு
(1இராஜா 12 முதல் 22 வரை உள்ள அதிகாரங்களிலும்
2 இராஜா 1 முதல் 25 வரை உள்ள அதிகாரங்களிலும்,
2 நாளாகமம் 10 முதல் 36 வரை உள்ள அதிகாரங்களிலும், எழுதப்பட்டுள்ளது.
2) இஸ்ரவேல் யூதா என்னும் இரு தேசங்களின் வரலாறு அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையை மீறியதைக் காட்டுகிறது. வட தேசத்திலுள்ள அரசர்கள் அனைவரும் கர்த்தருடைய பார்வையில் பொல்லாப்பானதைச் செய்து வந்தார்கள் என்று பரிசுத்த வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது.
(உ.ம் 1இராஜா 16:25,30;25:52;
2இராஜா 3:3; 10:29)
யூதாவின் ராஜாக்களில் பெரும்பாலானவர்களும், தேவனுடைய உடன்படிக்கையை மீறியவர்களே, யூதாவின் ராஜாக்களில் ஒரு சிலர் மட்டும், குறிப்பாக எசேக்கியா
(2இராஜா 18:1-20; 21) யோசியா (2 இரா 22:1-23:29) ஆகியோர் "கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்தார்கள்"
(2இரா 18:3; 22:2)
*என்னாலே இந்த காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார்.*
(1 இரா 12:24)
தேவனுடைய மக்களின் தேசத்தை இரண்டாகப் பிரித்தது தேவனுடைய செயல். தேசம் இரண்டாகப் செயல்படுவதை அவர் திட்டமிட்டார். ஏனென்றால்
1) அவர்களுடைய விக்கிரக ஆராதனைக்கு தண்டனை.
2) யூதாவின் மூலமாக தேவனிடத்தில் விசுவாசம் உள்ள நீதியான மக்களை பாதுகாப்பதற்காக.
(1 இரா 11:13) இஸ்ரவேல் முழுவதும் தேவனை விட்டு விலகிச் சென்றிருந்த போதிலும், யூதயாவில் சில தேவனுடைய மக்கள் தேவனிடத்திலும் அவருடைய உடன்படிக்கையிலும் உண்மை உள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் மூலமாக தேவன் தமது வாக்குத்தத்தங்களையும், இரட்சிப்பின் திட்டத்தையும் நிறைவேற்ற சித்தங் கொண்டார்.
வடதேசம், தென் தேசம், எதனால் பிரிந்தது என்பதை சுருக்கமாக நாம் பார்த்தோம்.
அதேபோல் தேவன் தம்முடைய சித்தத்தை செய்வதற்காக என்ன செய்தார் என்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.
தொடர்ந்து வேதத்தில் துணை கொண்டு வாசிப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
ajcsiluvairaja@gmail.com
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments