2) மீட்பு
*மீட்பு:*
"மீட்பின்" (கிரேக்க மொழியில் அப்போலுது ரோசிஸ் )
மூல அர்த்தம் விலைக்கிரயம் கொடுத்து பரிகாரம் செய்தலாகும்.
இந்த சொற்றொடர் எந்த மூலதனத்தை வைத்து இரட்சிப்பு சம்பாதிக்கப்பட்டது. அதாவது, எந்த பரிகாரம் செலுத்தப்பட்டது என்பதைக் குறிக்கிறது. மீட்பின் உபதேசத்தைக் கீழ்க்கண்டவாறு சுருக்கமாக பார்க்கலாம்.
1) நாம் எப்படிப்பட்ட பாவ நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறோம்: மனிதர் தேவனை விட்டு விலகி
(ரோம 3:10-18) சாத்தானின் வல்லமையான ஆதிக்கத்தின் கீழ் சிறையாகி (அப் 10:38; 26:18;) பாவத்திற்கு அடிமைகளாகி (ரோம 6:6; 7:14;) அதில் குற்ற உணர்ச்சி, தண்டனை, வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய அவசியமுடையவர்களா யிருக்கிறார்கள் என்று புதிய ஏற்பாடு கூறுகிறது.
(அப் 26:18; ரோம 1:18; 6:1-18,23;
எபே 5:8;கொலோ 1:13; 1பேது 2:9;).
2) அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலை செய்யும்படி கொடுக்கப்பட்ட விலைக் கிரயம்: கிறிஸ்து தம்முடைய இரத்தத்தை சிந்தி, ஜீவனைக் கொடுத்ததால் விலைக்கிரயம் கொடுத்து நம்மை மீட்டார்.(மத் 20:28;மாற்
10:45; 1கொரி 6:20;எபே 1:7;தீத் 2:14; எபி 9:12; 1பேது 1:18-19).
3) மீட்கப்பட்டவரின் முடிவான நிலை: கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட விசுவாசிகள், இப்போது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும், குற்றவுணர்ச்சியிலிருந்தும், பாவத்தின் வல்லமையிலிருந்தும் விடுதலை அடைந்திருக்கிறார்கள்.
(அப் 26:18;ரோம 6:7,12,14,18;
கொலோ 1:13). இவ்வாறு பாவத்திலிருந்து விடுதலை பெற்ற போதிலும் நாம் தேவனுக்கு சொந்தமானவர்களாகி இருப்பதால், நாம் விரும்பியதை மனம் போன போக்கில் செய்ய அப்படியே விட்டு விடப்படவில்லை.
பாவத்திலிருந்து விடுதலை பெற்றதால், நாம் மனமுவந்து தேவனுடைய அடிமைகள் ஆகும்படி நம்மை (அப் 26:18;
ரோம 6:18,22; 1கொரி 6:19-20;
7:22,23;) ஒப்புக்கொடுக்கிறோம்.
4) பழைய ஏற்பாட்டின்படியுள்ள மீட்பு, புதிய ஏற்பாட்டின் போதனைப்படியுள்ள மீட்புக்கு நிழலாயிருக்கிறது.
பழைய ஏற்பாட்டிலுள்ள மிகப்பெரிய மீட்பின் சம்பவம், எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாகும்.
(யாத் 6:7; 12:26;) மேலும் பலியிடும் முறையின் படியாக, மிருகங்களின் இரத்தம் பாவத்துக்குப் பரிகாரமாக கொடுக்கப்பட்ட விலைக் கிரையமாயிருந்தது.
(லேவி 9:8).
தொடர்ந்து தேவன் தருகிற மீட்பை வேதத்தின் துணை கொண்டு பரிசுத்த ஆவி நிறைவோடு வாசியுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா தொடர்புக்கு 98 41 711 591.
Comments