கீழ்படியாத தீர்க்கதரிசி 1பாகம்
கீழ்படியாத தீர்க்கதரிசி
1பாகம்
நீ கர்த்தருடைய வார்த்தையை மீறி. (1இரா 13:21-22)
இன்றைய விசுவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்படியாக, பெயர் குறிப்பிடப்படாத கீழ்படியாத ஒரு தீர்க்கதரிசியின் வரலாறு
பரிசுத்த வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(1கொரி 10:1-13)
1) ஒரு விசுவாசியின் வாழ்க்கை குறித்த தேவனுடைய சித்தமே எல்லாக் காரியங்களிலும் அவனால் கீழ்ப்படியப்பட வேண்டியதாகும்.
உலகில் உள்ள புகழ்பெற்ற தேவ ஊழியர்களின் போதனைகளும், வார்த்தைகளும் அல்லது தேவ தூதர்கள் கூறும் வார்த்தைகளும், இயேசுகிறிஸ்து, அப்போஸ்தலர் ஆகியோருடைய
மூல நற்சாட்சி பெற்ற பரிசுத்த வேதாகம போதனைகளுக்கும் தரங்களுக்கும் முரண்பாடாக இருந்தால் அவை, ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது.
(1கொரி 14:29; கலா 1:8,9;1யோவா 4:1;).
2) முதலில் தேவனுக்கு உண்மையுடன் உழைத்து, ஊழியம் செய்திருந்த போதிலும், தேவன் கட்டளைகளுக்கும் கற்பனை வார்த்தைகள் மீறப்பட்டால், அந்த கீழ்படியாமைக்குத் தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும்.(1இரா 13:20-25)
3) ஒரு விசுவாசி கர்த்தருடைய வார்த்தையைக் குறித்து கவலையீனமான மனப்பான்மையோடு இருப்பானானால், அது அவனுடைய அழிவுக்கேதுவான நிலையாகும். தேவனுடைய மக்களில் காணப்படும் தோல்விக்கு இன்னொரு காரணம், தேவனுடைய வார்த்தையை, ஜீவன் அல்லது மரணத்துக்கு ஏதுவானது என்று எடுத்துக்கொண்டு, பயத்துடன் கீழ்படியாததேயாகும்.
(ஆதி 3:4)
4) தம்முடைய வார்த்தைகளைப் பிரகடனப்படுத்த தேவன் நியமித்துள்ள ஊழியர்கள், தேவனுடைய கட்டளைகளுக்கு மிகவும் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
(1தீமோ 3:1-11; தீத் 1:5-9;யாக் 3:1) அவர்கள் தேவனுடைய மக்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
*ஒரு சிங்கம் .... அவனைக் கொன்றது.*
(1இரா 13:24)
கீழ்படியாத தீர்க்கதரிசியைக் ஒரு சிங்கம் கொன்றது.
அந்த தீர்க்கதரிசி மரித்த பின் நித்திய மரணம் அடைந்திருப்பான் என்று நாம் நினைத்து விடக்கூடாது.
அவனுடைய கீழ்ப்படியாமையும், மோசேயின் கீழ்படியாமையும் ஒரே மாதிரியானவை.
(எண் 20:12)
இதை வாசிக்கிற தேவனுடைய பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் கவனிக்க வேண்டியது தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காவிடில், கிறிஸ்துவ வாழ்க்கைக்கு நாம் தகுதியற்றவர்கள். அதேபோல இயேசு கிறிஸ்துவை பிரசிங்கிப்பதற்கும் நாம் தகுதியற்றவர்கள். கோபாக்கினையின் பிள்ளைகளாக நாம் இருப்போம்.
ஆகையால் கீழ்படிந்து அவருக்கு பிரியமானதை செய்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments