1) தேவனுடைய ராஜ்ஜியத்தை குறித்த உவமைகள்

தேவனுடைய இராஜ்யத்தை குறித்த உவமைகள்.
(மத் 10:3).

மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் பரலோக இராஜ்யத்தைப் பற்றிய உவமைகள் தரப்பட்டுள்ளன. 
அவை நற்செய்தி அறிவிப்பதனால் வரும் பலன்களைக் கூறுகின்றன.
மேலும், 
*பரலோக இராஜ்யத்தின் வெளிப்பாடாகக் காணப்படும் திருச்சபைகளின் ஆவிக்குரிய நிலை,*
கடைசி காலம் வரை பூமியில் எப்படி இருக்குமென்று வெளிப்படுத்துகின்றன. 

1) இவற்றில் பெரும்பாலான உவமைகளில் இயேசு கிறிஸ்து கற்பித்ததாவது: 
 இயேசுவின், மனிதர் காணக்கூடிய, வெளிப்படையான இராஜ்யத்தில், காலம் முழுவதும் நன்மையும், தீமையும் இருக்கும்.
அவருடைய நாமத்தை அறிக்கை செய்யும் மக்கள் மத்தியில் அவர்களை விசுவாச மறுதலிப்புக்கு வழிநடத்தும் உலக பழக்க வழக்கங்களுக்கு ஒத்துப் போகும் உலக சுபாவமும், அதே வேளையில் நித்திய ஜீவனுக்கு வழி நடத்தும் தெய்வபக்தியும், உண்மையும், விசுவாசமும், கீழ்ப்படிதலும் கூடக் காணப்படும். கடைசிக் காலத்தில் அக்கிரமக்காரர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
(மத் 13:41,49;). "அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்ஜியத்திலே சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்"(மத் 13:43).

2) இயேசு இந்த உவமைகளை எல்லாம் தம்முடைய உண்மையான சீஷர்கள் விழிப்படையவும், தேவனுடைய இராஜ்யத்திலும் கூடத் தீமை இருக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றும், சாத்தான், அவனுடைய சேனைகள் இவற்றின் தாக்குதலை எதிர்த்து மேற்கொள்வது எப்படி என்றும் கற்பிப்பதற்காகக் கூறுகிறார்.
இதை செய்வதற்குரிய ஒரே வழி, அவர்கள் கிறிஸ்துவின் மீது தங்கள் முழு மனதோடும் காண்பிக்கும் பய பக்தியும்,
(மத் 13:44,46;), நீதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கைகளுமாகும்.
(மத் 13:43; வெளி அதி 2,3,) இவற்றில் திருச்சபைக்குள்ளேயே நன்மையும், தீமையும் இருப்பதைக் காணலாம். இவை தேவனுடைய இராஜ்யத்தில் காணப்படும். 

3) அன்றாட உலக வாழ்வில் அனுபவத்தில் உள்ள சிறு நிகழ்ச்சிகளே ஊமைகளாகக்
கூறப்படுகின்றன. 
இவை சில குறிப்பிட்ட ஆவிக்குறி உண்மைகளை உணர்த்துகின்றன. சில விசுவாசிகள் 
அவிவிசுவாசிகளுக்குத் தாங்கள் விசுவாசிகள் என்று காட்டிக் கொள்வதில்லை.
இந்த உவமைகள் அவர்களுக்கு உண்மையை வெளிப்படுத்தி காட்டுவதில் உள்ள தனித்தன்மை உள்ளதாக இருக்கிறது.
(மத் 13:11)
சில சமயங்களில் இது உவமைகள் ஒரு தீர்மானத்தை எதிர்பார்க்கும். 
(லூக் 10:30-37).

இது ஒரு முன்னுரையாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 
அதிகாரம் முழுவதும் அடுத்தடுத்த நாள் தொடர்ச்சியாக நீங்கள் வாசிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
98 41 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை