உன்னதமான ஊழியர்

இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.*
(அப்போஸ்தலர் 16:17)

உன்னதமான தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்கள் இந்த பூமியில அழிந்து போய் கொண்டிருக்கும் அல்லது ஆத்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் வைத்திருக்கிற இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவிக்க வேண்டியது ஒரு ஊழியக்காரனின் கடமை.
இந்த உண்மை ஒரு ஊழியக்காரனுக்கு தெரியுமோ தெரியலையோ ஆனால் குறி சொல்லுகிற அசுத்த ஆவிக்கு தெரிந்திருக்கிறது.
(நமக்கு தெரிந்திருப்பதெல்லாம் 
நான் ஒரு போப் ஆண்டவர்.
நான் ஒரு பிஷப்.
நான் ஒரு ரெவெரென்ட்
நான் ஒரு அப்போஸ்தலன்.
நான் ஒரு தீர்க்கதரிசி.
நான் ஒரு வரம் பெற்றவன்.
நான் ஒரு சங்கை.
நான் ஒரு நடமாடும் வேதாகமம் கல்லூரி.
நான் ஒரு மேய்ப்பன்.
நான் ஒரு போதகன்.
நான் ஒரு டீச்சர்.
நான் ஒரு ஊழியக்காரன்.
ஆனால் குறி சொல்லுகிற ஆவிக்கு தெரிகிறது.
உன்னதமான தேவனுடைய இரட்சிப்பை மனிதர்களுக்கு அறிவிக்கிற ஊழியர்கள் என்று
ஊழியம் ஒரு பதவியாக அனைவருக்கும் இருக்கிறதே ஒழிய மற்றவர்களுக்கு சேவை செய்து உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அக்கறை அநேகருக்கு குறைவாக காணப்படுகிறது.)

ஏனென்றால் நம்முடைய திறப்பின் வாசல் ஜெபத்தினாலோ,உபவாசத்தினாலோ,ஒரு மனிதனையும் இரட்சிக்க முடியாது. 
(எபே 2:8,9,)
அந்த மனிதனுடைய இரட்சிப்புக்காக சுவிசேஷத்தை அறிவிப்பது தான் நம்முடைய கடமையாகும்.
இரட்சிப்பு கர்த்தருடையது.

அனேகர் சொல்லுகிறார்கள் என் மூலமாகத்தான் இவர் இரட்சிக்கப்பட்டார் என்று...
அப்படியானால் தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் என்றால் என்ன?
இது கிரியைகளினால் உண்டானது அல்ல
அப்படின்னா என்ன?
நம்முடைய கிரிகளினால் உண்டானதா?
அப்படியானால் கிருபை தேவனுடைய ஈவு என்றால் என்ன?

ஒருவரும் இதைக் குறித்து பெருமை பாராட்ட கூடாதபடிக்கு அப்படி செய்தார் என்றால் என்ன?
(2 தீமோத்தேயு 1:9)
அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

எபேசியர் 2:8-9
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்காக சுவிசேஷத்தை உலகமெங்கும் அறிவிக்கிறது தான் சரியான ஊழியம் ஆகும் (மத் 28:19:20)

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்காமல்
800 கோடி மக்களுக்காக ஜெபித்தாலும் அந்த மக்களுடைய வாழ்க்கையில் மாற்றம் வரப்போவதில்லை.
மாற்றம் என்பது கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் மாத்திரமே உள்ளது.
ஆனால் அநேக மத வியாபாரிகள் ஜெபித்தால் போதும் ஜெபம் பண்ணு ஜெபம் பண்ணு தேசத்திற்காய் ஜெபம் பண்ணு பட்டணத்திற்காய் ஜெபம் பண்ணு கிராமங்களுக்காய் ஜெபம்பண்ணு தேசத்தின் தலைவர்களுக்காக ஜெபம் பண்ணு அதிகாரிகளுக்காக ஜெபம்பண்ணு என்று நூதனமான போதனையை செய்கிறார்கள்.
இந்த போதனையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பொருளாதாரத்தை கொடுத்து தாங்களும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.
ஆவியானவர் தெளிவாக சொல்லுகிறார் சபைகளுக்கு காது உள்ளவன் கேட்கக் கடவன்.
கிறிஸ்துவின் சுவிசேஷத்தை 
(ரோமர் 10:14-15ல்)
....விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? 

அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? 

பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?

அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? 

சபை வளர்ச்சி கூட்டம் நடத்துகிற ஊழியர்களே
வேத வசனத்தை கவனிக்கும் போது மாத்திரமே ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடியும்.

இன்று பல சபைகளை நாம் கவனிக்கும் போது இந்த சபையில் இருந்து இன்னொரு சபைக்கு போகிற மாற்றங்கள் நடக்கிறதே ஒழிய உலக மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஏன் மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்றால் அவர்களுக்கு தெளிவான சுவிசேஷத்தின் வெளிச்சத்தை கொடுக்கவில்லை என்பதே உண்மை.

சபை வளர்ச்சிக்கு சீஷர்கள் உருவாக்கப்படவில்லை. சீஷர்கள் உருவாக்கப்பட்டாலும் அவர்கள் அனுப்பப்படவில்லை. ஊழியங்கள் பகிர்ந்து கொடுக்கப்படவில்லை. என்பதே எல்லோரும் அறிந்த உண்மை.

ஆனால் ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்து இடத்திலே அவனை இரட்சியும் இவரை இரட்சியும் தேசத்தை இரட்சியும் பட்டணத்தை இரட்சியும் என்று புறப்பட்டு போங்கள் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று நமக்கு கட்டளை கொடுத்த ஆண்டவருக்கு இந்த ஊழியர்கள் கட்டளை போடுகிறார்கள்.
"பரலோகத்தில் இருந்து தேவன் அவர்களை பார்த்து நகைத்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது" !
தாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை
ஆனாலும் நியாயப்பிரமாணத்தின் போதகர்களாக இருக்க விரும்புகிறார்கள்.
நாம் அதிக ஆக்கினை அடைவோம் என்று நீங்கள் போதகராக ஆகாதிருப்பீர்களாக ஆவியானவர் எழுதி வைத்துள்ளார்.

ஒருவன் போதித்தாலும் ஜெபித்தாலும் தீர்க்கதரிசனம் உரைத்தாலும் அது வேத வசனத்தின் படி இருக்க வேண்டும்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்பு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை