சிலர் விசுவாசத்தை

சிலர் விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள். 
(1தீமோ 4:1)
கடைசி காலங்களில் இயேசு கிறிஸ்துவிலுள்ள தனிப்பட்ட விசுவாசத்திலிருந்தும், வேத வாக்கிய சத்தியத்திலிருந்தும்
விடுதலிருக்கும் என்று பரிசுத்த ஆவியானவர் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
(2தெச 2:3;யூதா 3-4)

1) சபைகளில் அதிக வரங்களோடுள்ள தேவனால் வல்லமையாக அபிஷேகிக்கப்பட்ட ஊழியக்காரர் தோன்றுவார்கள். சிலர் தேவனுக்காக பெரிய காரியங்களைச் சாதித்து, சுவிசேஷ சத்தியங்களை வல்லமையோடு பிரசங்கிப்பார்கள். ஆனால் அவர்கள் விசுவாசத்தை விட்டு விலகி படிப்படியாக கறை படுத்தும் ஆவிகளுக்கும் தவறான உபதேசங்களுக்கும் திரும்பி விடுவார்கள். 
அவர்களுடைய முந்திய அபிஷேகத்தினாலும், தேவன் பேரிலுள்ள, முந்திய வாஞ்சையினாலும் அநேகரை அவர்கள் தவறாக வழி நடத்துவார்கள்.

2) அநேக விசுவாசிகள் விசுவாசத்திலிருந்து விழுந்து விடுவார்கள், ஏனென்றால் சத்தியத்தின் மேலுள்ள அன்பிலிருந்து விலகி,
(2தெச 2:10) கடைசி நாட்களில் வரக்கூடிய பாவ சோதனைகளுக்கு எதிராக போரிடத் தவறி விடுவார்கள்.
(மத் 24:5,10-12; 2தீமோ 3:2-3)
ஆகவே எதற்கும் ஒத்துப் போகும் ஊழியக்காரரும், கல்வி நிபுணரும் போதிக்கும் மாறுபட்ட சுவிசேஷத்திற்கு அநேக சபைகளில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்பட மாட்டாது.
(1தீமோ 4:1; 2தீமோ 3:5;4:3; 2கொரி 11:3)

3) வேத வசனங்களுக்கு முரணான போதகங்கள் புகழடைவதற்கு முக்கிய காரணம், தேவனுடைய வேலைக்கு எதிராக மிகவும் பலமாக சாத்தான் தன் அசுத்த ஆவிகளின் சேனைகளை ஏவி விடுவதே. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக சாத்தானின் கொள்கை, ஆவிகளின் கொள்கை, பில்லி சூனியம், அசுத்த ஆவியினால் பிடிக்கப்படுதல், பிசாசின் ஏமாற்றுதல்கள் ஆகியவை உலகத்திலும் சபையிலும் அதிகமான அளவில் இருக்கும்.
(எபே 6:11-12;)

4) அப்படிப்பட்ட ஏமாற்றுதலுக்கு விசுவாசி காக்கப்பட வேண்டுமென்றால், அவன் தேவனிடத்திலும், அவரால் அருளப்பட்ட வசனத்திலும் உண்மையான விசுவாசமாயிருக்க வேண்டும். மேலும் வல்லமையோடு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற மக்களும் கூட ஏமாற்றப்பட்டு, உண்மையும், பொய்யும் கலந்த தங்கள் கலப்பினால் மற்றவர்களையும் ஏமாற்ற முடியும் என்ற அறிவும் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்.
இந்த தெளிவான அறிவுள்ள நிலையோடு தேவனுடைய சித்தத்தை செய்யவும் (யோவா 7:17) நீதியுடன் தேவபக்தியுடன் நடக்கவும் விசுவாசி தன் இருதயத்தில் உண்மையான விருப்பம் கொண்டிருக்க வேண்டும். (சங் 25:4-5;12-15).

5) கடைசி நாட்களில் சபையில் விசுவாச மறுதலிப்பு பரவியிருப்பதால் உண்மையான எழுப்புதல் ஏற்படாது என்றோ அல்லது புதிய ஏற்பாடு திட்டப்படி சுவிசேஷம் அறிவிக்கப்படுவது வெற்றியடையாது என்றோ உண்மை விசுவாசிகள் நினைக்கக் கூடாது.
"கடைசி நாட்களில்"அவருடைய நாமத்தை நோக்கி கூப்பிடும் எல்லாரையும் இரட்சித்து, அவர்களை இந்த கெட்டுப்போன தலைமுறையினரிடமிருந்து வேறு பிரித்து 
(அப் 2:16-21,33,38-40;3:19),
அவர்கள் மேல் தம் ஆவியை ஊற்றுவதாக தேவன் வாக்களித்திருக்கிறார்.

ஒரு விசுவாசத்தை காத்துக் கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 
ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை