கர்த்தருடைய வேதம்

கர்த்தருடைய வேதம் குறைவற்றது.
(சங் 19:7-11)

இந்த வசனங்கள் தேவனுடைய கற்பனைகள், வார்த்தைகள் இவற்றின் தன்மை, நன்மை, மதிப்பு இவற்றைப் பற்றி கூறுன்றன. அதில் அடங்கிய ஐந்து உண்மைகளாவன:

1) கர்த்தருடைய வேதத்தின் 
"விதி" -கர்த்தருடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்தி காட்டும் ஒரு பொதுவான சொல். 
கர்த்தருடைய வேதம் மனிதனுக்கு அவன் தேவனோடு சரியான உறவு கொள்ளும் வழியைக் காட்டுகிறது.(சங் 19:7)

2)"சாட்சிகள்"-இது தேவனுடைய மெய்யான வார்த்தைகள், அவருடைய குணாதிசயங்களுக்கும், சித்தத்துக்கும் சாட்சி பகர்கின்றன.(1 யோவா 5:9).
இதைப் படிப்பதன் மூலம் மனிதன் ஞானத்தை பெறுவான்.(சங் 19:7)

3)"போதனைகள்"-தேவ பக்தி உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நீதியான வாழ்க்கை வாழ்வதற்குரிய தேவனுடைய திட்டவட்டமான நெறிமுறைகளை இவை காட்டுகின்றன. (சங் 19:8)

4)"கட்டளைகள்"-தேவனுடைய வழிகளை தேடுகிற விசுவாசிகளுக்கு வழிகாட்டும் ஒளியாக அதிகாரமுள்ள தேவனுடைய கட்டளைகள். 
(சங் 19:8;அப் 26:18). தேவனுடைய கட்டளைக்குக் கீழ்படிவதே அவருக்கு பயப்படும் பயமாகும் இது பாவ வாழ்க்கையில் இருந்து விடுதலை தருகிறது.
(சங் 19:9).

5)"நியமனங்கள்"-உலகில் நியாயமான முறையில் நேர்மையோடு வாழ்க்கை வாழ வழிகாட்டும் சமுதாய விதிகள். (சங் 19:9).

தொடர்ந்து வேதத்தை வாசித்து நம்மை சரி செய்வோம் கர்த்தர் பெரிய காரியங்களை நம்முடைய வாழ்க்கையிலும் செய்வாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை