ஊழியத்தின் மதிப்பீடு

இன்றைய ஊழியர்களின் , ஊழியங்களின் மதிப்பீடு ‌.

பெட்டி கடை. மளிகை கடை, 
மொத்த வியாபார கடை, 
டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆன்லைன் ஷாப்பிங், என பல இருக்கிறது. 

இந்த மாதிரி தான் சபைகளும் பிரிக்கப்படுகிறது. 

பெட்டி கடை சபை .
மளிகை கடை சபை. 
மொத்த வியாபார சபை.
டிபார்ட்மெண்ட் சபை. 
ஆன்லைன் சபை.

ஒவ்வொரு வியாபாரக் கடையும் ஒவ்வொரு வியாபாரக் கடையையும் மதிப்பதில்லை. 
நம்ம வியாபாரத்தில் மண்ணள்ளிப் போட்டுடானே என்ற புலம்புகிறார்கள். 
இதே போல தான் சபையும் புலம்புகிறது.

ஆரம்ப கால ஊழியம் பெட்டிக்கடை போலானது. 
அன்று ஒரு ஆள் வந்தாலே பெட்டி கடைக்காரருக்கு ரொம்ப சந்தோசம். 
இதே போல தான் பரலோகம்.
(லூக்கா 15:7 ல்) இயேசு 
மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

பெட்டிக்கடை 
மளிகை கடையாக மாறும் போது கொஞ்ச கஷ்டமர். 
(கொஞ்ச விசுவாசிகள்)
(கலாத்தியர் 2:2ல்)
பவுல்...... நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.
இது எண்ணிக்கையுள்ள ஊழியம்.
70 பேர் அல்லது 120 பேர்கள் 
(லூக்கா 10:1; அப் 1:15)

மளிகை கடை 
மொத்த வியாபார கடை..
இதில் அதிக கஷ்டமர். சுமார் 3000 பேர். (அப் 2:41)
3000 பேரை கொண்ட சபை. 
மொத்த சபை என்பது 
உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தேவையான எல்லாமே கிடைப்பது. 
வருகின்ற காணிக்கைகள் பொதுவாக இருந்தது. 
வியாதிகளை குறித்த கவலை இல்லை. 
நிழல் பட்டாலே சுகம். 
யாருக்கும் எந்த குறைவும் இல்லை. 

இந்த மொத்த மளிகை கடை 
அடுத்த லெவல் 
அதாவது டிபார்ட்மெண்ட் ஸ்டோர். 
கவர்ச்சியான கடை 
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எல்லாரும் போயிருப்போம். அட அட என்ன லைட் எவ்வளவு அழகாக கவர்ச்சியாக செட்டப்புகள். 
நாமே எல்லா பொருட்களும் எடுத்துக் கொண்டு போய் பில்லு கட்டுவது.
உள்ளே நாம் இளைப்பாறுவதற்கும், சுற்றி பார்ப்பதற்கும், lunch, snacks, tea coffee, parking, walking ground, 
சி சி டிவி கேமரா, லிப்ட் வசதிகள், நகரும் படிக்கட்டுகள், எல்லா பொருட்களும் ஒரே இடத்தில்.
செம கூட்டம். 
நாம பொருள் வாங்கினால் வாங்கலாம், இல்லாவிடில் வந்துவிடலாம், 
காத்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. 
நாமே பொருளை எடுத்துவிட்டு பணம் கட்டி வந்து விடலாம். அனைத்து பேங்க் வசதிகளும் உண்டு. 

இவர்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று கடைகளை மதிப்பதில்லை. 
இப்படி கூட்டம் அலைமோதுகிற சபைகள் மற்ற திருச்சபைகளை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. அந்த கடை நடத்தும் நிர்வாகியையும் மதிப்பதில்லை. 

இதை விட என்னொன்று இருக்கிறது. 
ஆன்லைன் கடை. 
கடையின் மென்பொருள் மொபைலில் டவுன்லோடு செய்தால் போதும். 
என்ன வாங்க போகிறோமோ அதை மொபைலில் பார்த்து ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வந்துவிடும். 
இவர்களும் மற்ற மூன்று சபைகளை மதிப்பதில்லை. 
 கடைகளுக்கு போய் வாங்காமல் வீட்டிலிருந்து ஆர்டர் செய்து சாப்பாடு முதல் கொடுகாட்டில் எரிக்கும் வறட்டி வரை ஆன்லைனில் கிடைக்கிறது. 
வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் வழியாக செய்தியை கேட்பார்கள். 
காணிக்கை போட்டு விடுவார்கள். 
சபையின் முக்கியத்துவம் என்னவென்று அறியாமல் போய்விடுவார்கள். 
இவர்கள் இறந்த பிறகு தான் சபையின் மதிப்பு தெரியும் என்று நான் நினைக்கிறேன்.

உண்மையாகவே இது வியாபாரமாக இருக்கிறதா ?
அல்லது ஆவிக்குரிய ரீதியாக பரலோக தேவனுக்கு மகிமை உண்டாவதாக நடக்கிறதா என்பதை? 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரும் போது தான் தெரியும். 
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருக்கும் பொழுது திருச்சபை வியாபார வீடாக இருந்தது. 
அவர் சவுக்கை உண்டு பண்ணி எல்லாவற்றையும் உடைத்து அடித்து நொறுக்கி சபையை சுத்தம் செய்தார். 

இன்றைக்கு திருச்சபைகளில் இயேசு கிறிஸ்து இருக்கிறாரா ?
இல்லையா? 
இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் நிச்சயமாக தெரியும். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.








Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை