நம்முடைய அனுதின அப்பம்
நம்முடைய அனுதின அப்பம்.
(லூக் 11:3)
நம்முடைய வாழ்க்கையின் தேவைகளுக்காக விசுவாசிகள் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
(மத் 6:11) இதை நான்கு கொள்கைகளின் அடிப்படையில் செய்ய வேண்டும்.
1) இப்படிப்பட்ட விண்ணப்பங்களை தேவனுடைய சித்தத்தின்படியும், அவருடைய மகிமைக்காகவும் நாம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
(மத் 6:10,33; 1கொரி 10:31; 1யோவா 5:14,15).
2) தேவன் தமது பிதாவின் அன்பை நம்மிடம் காட்டும் படி நாம் ஜெபிக்க வேண்டும்.
(மத் 6:9; 25-34.
3) நாம் வேண்டிக் கொள்ளும் அடிப்படைத் தேவையான பொருட்கள், நமது தேவைகளை சந்திப்பதாகவும், நாம் கிறிஸ்தவ ஊழியம் செய்ய நம்மை தகுதிப்படுத்துபவைகளாகவும் இருக்க வேண்டும்.
( 2கொரி 9:8, 1தீமோ 6:8;எபி 13:5)
4) நாம் மற்றவர்களுக்கும், தேவனுக்கும் உண்மையுடன் கொடுத்த பின்னரே நம்முடைய தேவைகளுக்காக தேவனிடம் ஜெபிக்க வேண்டும்.
(2கொரி 9:6; 8:12;).
எங்கள் அனுதின ஆகாரத்தை எங்களுக்கு தாரும்.
தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் தேவனை சார்ந்து இருக்கும் படியாக நம்முடைய ஜெபம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் தேவனோடு ஜெபம் என்ற உறவு
மூலமாக நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின்
பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments