உன்னை திரும்ப சேர்த்துக் கொள்வார்.

உன்னை சிதறடித்த எல்லா தேசங்களிலிருந்தும் உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளுவார்.(உபா 30:3)

மோசே தீர்க்கதரிசனமாக இஸ்ரவேலர் மனம் திரும்பி, தேவனிடம் திரும்பிச் சேர்ந்தால், அவர்கள் சிறை மீட்கப்பட்டு, இழந்த ஐஸ்வர்யங்களைத் திரும்பவும் பெற்று, (உபா 30:2,3,4;) மீண்டும் தங்கள் தாய் நாட்டுக்கு வந்து சேர்வார்கள். 
(உபா 30:5;) அவர்களுடைய ஆவிக்குரிய எழுப்புதலும், புதுப்பித்தலும், 
(உபா 30:6;) செழிப்பும், ஆசிர்வாதமும், 
(உபா 30:7-10;) அவர்களுக்கு வந்து சேரும் என்று கூறினான். இஸ்ரவேலரின் இறுதி சிறை மீட்பு என்பது 

1) அகில உலகினின்றும், இஸ்ரவேலில் மீதியானவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். 
(உபா 30:3,5; எசா 10:21-23; 11:11,12; எரே 30:24; 31:1,8,10; எசே 39:25,28;)

2) மனந் திரும்புதலும், மேசியாவிடம் திரும்புதலும், 
(உபா 30:2,8,10;ஏசா 11:10,12; எரே 23:5-8; எசே 37:21-25; ஒசி 5:15; 6:1-3; ரோம 11:25-27;
மேலும் மத் 23:39ன் குறிப்பை பார்க்கவும்).

3) ஆவிக்குரிய எழுப்புதல். 
(உபா 30:3-6;எரே 32:37-41;எசே 11:17-20;).

4) இஸ்ரவேலுக்கு ஆசிர்வாதம். 
(எரே 31:8,10,12-13,28;எசே 28 :25,26; ஆமோ 9:11-15;).

5) இஸ்ரவேல் தேசங்களில் தேவனுக்காக ஊழியம் செய்தல். 
(எசா 49:5,6; 55:3-5; 60:1-5; 61:5,6);

6) இஸ்ரவேலின் மேல் நியாயத் தீர்ப்பு.
(எசே 20:34-38; மல் 3:2-5; 4:1)
தேசங்களின் மேல் நியாயத் தீர்ப்பு.
(எரே 25:29-33; தானி 2:44,45;யோவே 3:1,2,12-14;
மத் 25:32;).

7) மகா உபத்திரவத்துக்குப் பின் கிறிஸ்துவின் நியாயத் தீர்ப்பு முடிந்தபின் நீதியாக இருப்பவர்களுக்குப் பெரிய ஆசீர்வாதம்.
(ஏசா 19:22-24; 49:5; மீகா 4:1-4;
சகரி 2:10-12; வெளி 20:1-4;மத் 25:32);

8) இஸ்ரயேல் நிரந்தரமாகத் தேசத்தைச் சமாதானத்துடன், பாதுகாப்புடனும், சுதந்தரித்துக் கொள்ளுதல்.
(எரே 32:37-41);

9) கடைசி நாட்களில் மீட்டுக் கொள்ளப்படுதல். 
(ஒசி 3:4,5)

10) கிறிஸ்துவும் பரிசுத்தத் திருச்சபையும் இஸ்ரேலின் மேலும் தேசங்களின் மேலும் ஆட்சி செய்தல். 
(வெளி 20:4).

இஸ்ரேலுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் எப்படி எல்லாம் நிறைவேறுகிறது என்பதை இந்த வசனத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். அதேபோல் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட நமக்கும், ஆண்டவர் பல வாக்குத்தத்தங்களை தந்திருக்கிறார். அவைகள் நிச்சயமாக நிறைவேறும் இந்த நம்பிக்கையும் விசுவாசமும் நமக்கு போதுமானதாக இருந்தால் போதும்.
கர்த்தர் நம்மைஆசீர்வதிப்பார் 
ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை