ஜெயம் கொள்கிறவர்கள்.
ஜெயம் கொள்கிறவர்கள்.
ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
(வெளி 21:7)
கடந்த ஆண்டில் பலவிதமான போராட்டங்கள், உபத்திரவங்கள், இழப்புகள், நஷ்டங்கள், தோல்விகள், ஆவிக்குரிய வாழ்க்கையில் வீழ்ச்சிகள், என பல நிகழ்வுகள் நடந்திருக்கலாம்
அல்லது நடக்காமல் கூட இருந்திருக்கலாம்.
ஆனால் இந்த 2025ஆம் வருஷம் நாம் ஜெயம் கொள்ளுகிற வருஷமாக இருக்க வேண்டுமானால்,
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் என்னென்ன தேவையோ அதை சுதந்தரிக்க வேண்டும்.
நான் சொல்வது உலக வாழ்க்கைக்கு தேவையான நன்மையை சொல்லவில்லை
அதை ஏற்கனவே பிதாவாகிய தேவன் உங்கள் தேவைகளை அறிந்திருக்கிறார். அது நிச்சயமாக அனுதினமும் தருவார். ஆமென்.
(மத் 6:32,33).
1) நம்மை நாமே ஜெயிக்க வேண்டும்.
அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாமே தடுத்து நிறுத்தி விடுகிறோம்.
அ) நம்முடைய சரீரத்தை ஒடுக்கி ஆள வேண்டும்.
(1கொரி 9:27).
சரீரத்தை அடக்கி ஆள்வது என்பது நம்முடைய உடல் மற்றும் மனதை நாம் விரும்பும் விதத்தில் கட்டுப்படுத்துவதைக் குறிக்கிறது. இது ஒரு ஆன்மிக மற்றும் தத்துவ சிந்தனையாக இருந்தாலும், நடைமுறை வாழ்க்கையில் நம்மை சிறப்பாக நடத்திக்கொள்ள உதவும் ஒரு முக்கியமான கருத்து.
சரீரத்தில் அடக்கி ஆள வேண்டியவை:
* இச்சைகள்: உணவு, பணம், பொருள், ஆசை போன்ற பல்வேறு இச்சைகள் நம்மை ஆட்டி வைக்கலாம். இந்த இச்சைகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
* கோபம்: கோபம் நம்மை கெடுக்கும் ஒரு சக்தி. கோபத்தை கட்டுப்படுத்தி, அமைதியை பேணுவது அவசியம்.
* ஆணவம்: தன்னை உயர்வாக நினைத்து மற்றவர்களை இழிவுபடுத்துவது ஆணவம். ஆணவத்தை விட்டு விட்டு, எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும்.
* பொறாமை: மற்றவர்களிடம் உள்ளதை நாம் விரும்பி, அவர்களைப் பொறாமைப்படுவது நம்மை மனரீதியாக பாதிக்கும்.
* மாயை: உலகின் மாயைகளில் சிக்கித் தவிப்பதை விட, உண்மையான வாழ்க்கையை நோக்கி நகர வேண்டும்.
* மனக்குறைகள்: கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வருந்துவது அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவது நம்மை மனதளவில் பாதிக்கும்.
* பழக்கவழக்கங்கள்: புகைபிடித்தல், மது அருந்துதல், பாலியல் செயல்,போன்ற பழக்கவழக்கங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
சரீரத்தை அடக்கி ஆள்வதன் நன்மைகள்:
* மன அமைதி
* உடல் ஆரோக்கியம்
* நல்ல உறவுகள்
* வாழ்க்கை நிறைவு
* ஆன்மிக வளர்ச்சி
சரீரத்தை அடக்கி ஆள்வதற்கான வழிகள்:
* வசன தியானம்
* உடற்பயிற்சி
* நல்ல புத்தகங்கள் வாசித்தல்
* நல்ல ஆவிக்குரிய நண்பர்களுடன் பழகுதல்
* பரிசுத்தவான்களின் வழிகாட்டுதல்
முடிவு:
சரீரத்தை அடக்கி ஆள்வது என்பது ஒரு தொடர்ச்சியான பயணம். இதற்கு நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இது நம்மை ஒரு சிறந்த மனிதனாக மாற்றி, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும்.
ஆ) நாவை அடக்க வேண்டும்.
(யாக் 3:8; 1:26; 1பேது 3:10).
இ)கண்களை அடக்க வேண்டும்.
(மத் 6:22,23; யோபு 31:1; வெளி 3:18).
ஈ)மாம்ச சிந்தையை ஜெயிக்க வேண்டும்.
(ரோம 8:6,7; கொலே 3:5; பிலி 2:5)
உ)செவியை காத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல வார்த்தைகளை கேட்பதற்கு தீவிரம் காட்ட வேண்டும்.
(எபே 4:25;யாக் 1:19,22,25;).
2) உலகத்தை ஜெயிக்க வேண்டும். (யோவா 16:33)
பிசாசு இயேசு கிறிஸ்துவுக்கு இந்த உலகத்தையும், சகல இராஜ்ஜியங்களையும், அவைகளின் மகிமையையும் அவருக்கு காண்பித்தான்.
அது மாத்திரமல்ல தன்னை வணங்கும்படி சொன்னான்.
இயேசு சொன்னார்
உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக... என்று சொல்லி அப்பாலே போ சாத்தானே என விரட்டினார்.
(மத் 4:8-10)
இயேசு கிறிஸ்துவுக்கு உலகத்தை சுற்றி காட்டின சாத்தான்.
உங்களுக்கும் சுற்றிக்காட்டுவான்.
உலகப் பிரகாரமான ஆசை வார்த்தைகளை கூறுவான்.
ஏவாளுடைய வாழ்க்கையில் ஆசை வார்த்தைகளைக் கூறி அவளை நிர்வாணமாக்கினவன்.
(ஆதி 3:4-6)
இந்த உலகத்தின் அதிபதி பிசாசு 😈
இயேசு கிறிஸ்துவுக்குள் உலக ஆசையை உண்டாக்கி ஆதனால் தேவனுடைய மீட்பின் திட்டத்தை தடுத்து விடலாம் என நினைத்தான்
அது முடியவில்லை.
(யோவா 14:30; 16:11.)
இன்று தேவனுடைய பிள்ளைகளாகிய உங்கள் மேல் தனது கவனத்தை வைத்து இருக்கலாம்.
(1பேதுரு 5:8)
பிசாசு உங்களில் உள்ள ஆசையை மட்டுமே தூண்ட முடியும். ஆனால்
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
(கலாத்தியர் 5:24)
இந்த உலகத்தில் நாம் பிறக்கும் போது ஒன்றும் கொண்டு வந்ததில்லை.
அதேபோல் இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு இங்கிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை.
(1 தீமோத் 6:7; யோபு 1:21;பிரசங் 5:15)
போதுமென்கிற மனது தேவை
அதுவே தேவப்பக்தி
அதுவே நமக்கு ஆதாயம்.
(1தீமோ 6:8)
ஆனால் நாம் பிசாசு நம்முடைய இருதயத்தை தூண்டும்போது....
நம் ஆசை பேராசையாக மாறிவிடுகிறது.
இன்னும் ஆசீர்வாதம் இன்னும் இன்னும் என்று சொல்லி அதற்காகவே நம்முடைய காலத்தையும் நேரத்தையும் வீணடித்து ஆவிக்குரிய ஜீவியத்தை இழந்து விடுகிறோம்.
லூக்கா 12:15-22 வரை வாசித்து பாருங்கள்.
மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த பணக்காரனிடமிருந்தது.
தேவன் அவனைப் பார்த்து மதிகேடனே என்றார்.
ஏற்கனவே இருப்பது போதும் என்று அவன் நினைக்கவில்லை.
இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் அவனுக்கு இல்லை.
சுயநலமான பேராசை அவனுடைய வாழ்க்கையிலே பிசாசு விதைத்து விட்டான்.
தேமா தேவனுக்காக நன்றாக ஊழியம் செய்தவன்.
(கொலே 4:14;பிலே 1:24)
ஆனால் திடீரென்று அவருடைய வாழ்க்கையில் மாற்றம்.
உலக ஆசை அவனுக்குள்ளே வந்து விட்டது.
பின்பு பரிசுத்தவான்களை விட்டு அவன் விலகிப் போனான்.
(2 தீமோத் 4:10 ).
ஆகையால் தான் தேவனுடைய பிள்ளைகள் இந்த உலகத்தை நாம் மேற்க்கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை ஜெயித்தது போல நாமும் ஜெயிக்க வேண்டும்.
அப்போதுதான் தேவனுடைய பிள்ளை என்கிற அந்தஸ்து நமக்கு உண்டு.
விரிவாக எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். நேரம் இல்லாமையால் பின்பு தொடர்கிறேன்.
தொடர்ந்து ஜெபியுங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments