கிரியையில்லாத விசுவாசம் செத்தது.
கிரியையில்லாத விசுவாசம் செத்தது.
(யாக் 2:17;)
உண்மையான இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள தனது பக்தியை தெய்வீகமான நற்கிரியைகளைச் செய்வதன் மூலம் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.
விசுவாசம் இல்ல கிரியைகள் செத்தவை.
கிரியைகள் இல்லாத விசுவாசமும் செத்தது.
உண்மையான விசுவாசம் தன்னை எப்போதும் தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் வெளிப்படுத்துகிறது தன்மையே.
1)சக மனிதன் தன்னுடைய பிரச்சனைகளை, அல்லது தேவைகளை சொல்லும்போது சமாதானத்துடன் போங்கள் என்று சொல்வது விசுவாசமாக இருக்கலாம்.
ஆனால் குளிர் காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும் சரீரத்துக்கு வேண்டிய அல்லது உடல் நலத்துக்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் உங்கள் கிரியைகள் செத்தவைகள்.
விசுவாசம் செத்தவைகள்.
(யாக் 2:14,15,16,17; வாசிக்க)
உண்மையாகவே நீங்கள் மனந்திரும்பி உங்கள் இரட்சிப்புக்கேற்ற விசுவாசத்தை காண்பிக்க வேண்டும்.
(யாக் 2:22; ரோமர் 1:5).
2) கிறிஸ்துவின் மீதும், அவர் இரத்தம் சிந்தி சம்பாதித்த பாவ நிவாரணத்தையும் விசுவாசிப்பதாகும்.
இதுவே தங்கள் இரட்சிப்புக்கு தேவையானது என்று கூறி திருச்சபை மக்களுக்குக் கெதிராக யாக்கோபு தனது போதனையைத் திருப்புகிறார். இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று தனி நபராக ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிதலுள்ளவர்களாய் அவருடன் இணைந்திருப்பது தேவையற்றது விசுவாசித்தார்கள்.
இத்தகைய விசுவாசம் செத்தது. அது இரட்சிப்பையோ, அல்லது வேறு எந்த நன்மையுமே தரப்போவதில்லை என்று யாக்கோபு கூறுகிறான்.
(யாக் 2:14-16; 20-24;) "அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்"
(கலா 5:6).
3) அதே நேரத்தில் இன்னொரு விதமாகச் சொல்லப்போனால், நாம் இரட்சிப்புக்கேற்ற விசுவாசத்தை நம்முடைய சொந்த முயற்சியால் பாதுகாக்க முடியும் நினைக்கக் கூடாது. தேவனுடைய கிருபையும், நம்முள் வாசமாயிருக்கும் பரிசுத்த ஆவியும், நமக்காக கிறிஸ்து ஏறெடுக்கும் பரிந்து பேசும் மன்றாட்டும் (எபி 7:25) நமது வாழ்க்கையில் கிரியை செய்து ஆரம்பம் முதல் முடிவு வரை விசுவாசத்தின் மூலம் தேவனுக்கு பிரியமாய் வாழ நமக்கு உதவுகின்றன.
(ரோம 1:17) தேவனுடைய கிருபையையும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும் நாம் எப்போதாவது பெற்றுக்கொள்ள தவறி விடுவோமானால் அப்பொழுது நம்முடைய விசுவாசம் செத்துவிடும்.
விதைக்க வேண்டிய இடத்தில் விதையுங்கள். உங்கள் பலனை பெற்றுக் கொள்ளுங்கள்.
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
(லூக்கா 6:38)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
Bro சிலுவை ராஜா
Comments