கீழ்ப்படியாத தீர்க்கதரிசி. 3பாகம்

கீழ்ப்படியாத தீர்க்கதரிசி 
3பாகம்

*ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித் தறியுங்கள்.*
(1யோவா 4:1)

ஒவ்வொரு ஆவியையும் சோதித்தறிய வேண்டிய காரணம் (அதாவது ஒரு மனிதன் ஒரு ஆவியினால் அசைக்கப்பட்டிருப்பது அல்லது தூண்டுதல் பெற்றிருப்பது) அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் திருச்சபைக்குள் நுழைந்திருப்பதே.
இது முக்கியமான உண்மை, எப்படியென்றால் பரிசுத்த வேதாகமத்திற்கு புறம்பான உபதேசத்தை சகித்துக் கொள்வது கடைசி காலத்தில் அதிகரிக்கிறது.
(மத் 24:11; 1தீமோ 4:1;2தீமோ 4:3-4; 2பேது 2:1-2 வாசிக்கவும்) 
தங்களைக் கிறிஸ்தவ போதகர்கள், எழுத்தாளர்கள், பிரசங்கிகள், தீர்க்கதரிசிகள் என்று அறிக்கையிடும் எல்லாரையும், தனிப்பட்ட நபர் யாரும் அவனுடைய அல்லது அவளுடைய வேலை அல்லது செய்தி பரிசுத்தாவியினால் வருகிறது என்று உரிமை கோருபவரையும், சோதித்தறிய கிறிஸ்தவர்கள் கட்டளையிடப்
பட்டிருக்கிறார்கள்.
ஒரு ஊழியம் அல்லது ஆவிக்குரிய அனுபவம் தேவனிடமிருந்து வந்தது என்று ஒருவர் கூறுவதால் மாத்திரம் விசுவாசிகள் அதை ஒருபோதும் நம்பி விடக்கூடாது. மேலும் எந்த போதனையோ அல்லது உபதேசமோ அதன் வெற்றி, அற்புதங்கள், அல்லது அபிஷேகம் பண்ணப்பட்டது போல் காணப்படுவதை வைத்து ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது. 
(மத் 7:22; 1கொரி14:29; 2தெச 2:8-10; 2யோவா 7;வெளி 13:4;16:14;19:20).

1) வேத வாக்கியங்களிலுள்ள தேவனுடைய சத்தியங்களைப் பற்றிய வெளிப்பாடுகளோடு ஒப்பிட்டு எல்லா போதனைகளும் சோதிக்கப்பட வேண்டும்.
(கலா 1:9)

2) எந்த ஆவியோடு போதிக்கப்படுகிறது என்பது சோதித்தறியப்பட வேண்டும்.
புதிய ஏற்பாட்டு அப்போஸ்தல போதனையைப் போல் அதே விதமான ஆவியோடும், வற்புறுத்தலோடும் போதிக்கப்படுகிறதா ?
பரிசுத்த வேதாகமத்தின் ஆரோக்கியமான விளக்கங்களால் ஆதரிக்கப்படாத எந்த போதனையும் பரிசுத்தாவினிடமிருந்தோ
அல்லது தேவ தூதனிடமிருந்தோ பெற்றுக் கொள்ளப்பட்டது என்று ஒருவரால் கூறப்பட்டால் எச்சரிக்கையாயிருங்கள்.

3) போதிக்கிறவர்களின் வாழ்க்கையிலே, தேவனற்ற உலகத்தோடுள்ள அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்பதும் 
(1யோவா 4:5 ஐ பார்க்கவும்)
கிறிஸ்துவின் ஆளுகைக்குள்ள அவர்கள் உறவு எப்படியுள்ளது என்பதும் சோதிக்கப்பட வேண்டும். 
(1யோவா 4:2,6;ரோம 10:9)
தேவனுடைய செய்தி என்று பிரசங்கிக்கப்படும் அனைத்து பிரசங்கத்தையும் சோதித்து அறிய வேண்டும் என்பதைக் கட்டுரை விளக்குகிறது.

தொடர்ந்து வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை