மூடத்தனம்.
மூடத்தனம்.
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
(நீதி 27:22)
சிலருக்கு என்னதான் வினோதமாக குழல் ஊதினாலும், விவரித்து சொன்னாலும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்கிறார்கள்.
கடைசி வரைக்கும் மூடனாகவேயிருந்து மரித்து விடுவது மாத்திரமல்ல தான் உருவாக்கின சபையையும் மூடனாகவே வளர்த்துவிட்டு சாகிறானே !
தேவனுக்கு பிரயோஜனம் இல்லாமல்.
அநேக வருடங்களாக தேவன் வெளிப்படுத்தியதை சொல்லி வருகிறோம்.
அது என்னவென்றால். ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு அவசியம், சுவிசேஷத்தை அறிவித்தல்
சுவிசேஷத்தை ஒரு மனிதன் தன் காதுகளினால் கேளாமல் அல்லது கேட்டதை விசுவாசியாமல் இரட்சிப்பு எந்த ஒரு மனிதனுக்கும் வராது.
சுவிசேஷத்தை கேட்டு விசுவாசிக்கும் பொழுது அவன் இரட்சிக்கப்படுகிறான்.
இயேசு கிறிஸ்து 12 சீஷர்களை உருவாக்கியது புறப்பட்டு போகத்தான்.
ஆனால் கள்ள ஊழியர்கள் நீ போக வேண்டாம்.
என்னோடு கூட ஜெபித்தால் போதும்.
இந்தியா, தமிழ்நாடு , உலக நாடுகள் எல்லா இரட்சிக்கப்பட்டுவிடும்.
கடைசி கால எழுப்புதலை நீங்கள் பார்க்க வேண்டுமானால், ஜெப மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள். என்னோடு ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்.
இதுவரை என்ன நடந்தது என்பதை சிந்திக்கவும். அதை உணரவும் இங்கு ஆட்கள் இல்லை.
காரணம் மூடர்கள் அதிகம்.
மூடர்கள் உருவாக்கின மூடர்கள் இன்னும் அதிகம்.
இந்தக் கள்ள ஊழியர்கள் தேவ சித்தத்தின் படி ஜெபிக்க மாட்டார்கள். (ரோம 8:26,27)
மாறான ஜெபங்கள் எல்லாம் கர்த்தர் எனக்கு தரிசனத்தின் மூலமாக தந்தார் என்று பொய் சொல்ல கூடிய சாத்தானுடைய ஊழியர்கள்.
1)பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.
(தீமோ 1:15)
ஜெபம் செய்து ஒருவன் இரட்சிக்கப்பட்டு விட்டால் இயேசு கிறிஸ்து ஏன் மனிதனாக பூமிக்கு வர வேண்டும். ஏன் அவர் இவ்வளவு பாடுகளை, வேதனைகளை, அனுபவித்து தம்முடைய கடைசி சொட்டு இரத்தம் முழுவதையும், ஏன் சிந்த வேண்டும். ஏன் அடக்கம் பண்ணப்பட வேண்டும். ஏன் அவர் திரும்ப உயிர்த்தெழ வேண்டும்.
அவர் பரலோகத்திலிருந்து
ஜெபம் செய்து, அல்லது தம்முடைய அதிகாரத்தினால் நம்மை மனந் திரும்ப பண்ணியிருக்கலாமே ?
(மத் 28:18)
ஏன் அப்படி செய்யவில்லை. அவர் அப்படி செய்திருந்தால் பூமியில் ஊழியக்காரர்கள் தேவையில்லையே !!!
அவர்களுக்கு அதிகாரம் வல்லமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
(மத் 10:2-5)
அவர்களுக்கு அபிஷேகம் தேவையில்லை (அப் 2:4)
அவர்களை புறப்பட்டு போங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
(மத் 28:19,20)
உண்மையாகவே நீங்கள் தேவனுடைய ஊழியர்களா?
அல்லது இயேசு என்ற பெயரில் வியாபாரம் பண்ண வந்த வணிகர்களா ?
தினமும் வேதத்தை வாசித்து புரிந்து கொண்டவர்களா ?
அல்லது
வாக்குத்தத்தங்களையும், ஆசிர்வாதங்களை எடுத்துக்கொண்டு நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று சொல்லுகிற
கோடாங்கிளா ?
அல்லது வேதத்தை வாசிக்காமல், தியானிக்காமல், ஜெபம் மட்டும் செய்கிற மந்த புத்தி உள்ளவர்களா ?
வேதத்தை வாசித்து அதை தியானித்து ஜெபிக்கும் போது தான் தேவனுடைய இருதயத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும்.
இல்லாவிடில் மூடனை போல நான் ஜெபித்தேன் கர்த்தர் எனக்கு தரிசனம் கொடுத்தார். என்று சொல்லி மக்களையும் ஏமாற்றுவோம் கர்த்தரையும் ஏமாற்றி நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் விழ வேண்டிய இடத்தில் சீக்கிரமாய் விழுந்து விடுவோம்.
2)கர்த்தராகிய இயேசுவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். என்று வேதம் சொல்லுகிறது.
(அப் 16:31)
எப்பொழுது விசுவாசம் வரும் ? அவரைக் குறித்து கேள்விப்பட்டால் தானே !
அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்?
அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?
பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?
(ரோமர் 10:14-15)
திருச்சபை சுவிசேஷர்களை உருவாக்க வேண்டும்.
அல்லது சீஷர்களை உருவாக்க வேண்டும்.
ஜெபம் பண்ணிக்கிட்டே இருக்கிறோம் பிரதர். இதைவிட மாயமலம் உலகத்தில் எதுவுமே இல்லை.
சோம்பேறிகள் சொல்லுகிற பதில் என்பதை நான் நன்கு அறிவேன்.
ஜெபிக்கிறவன் ஜெபத்தை பற்றி பேசுவதில்லை அதை தன்னுடைய செயல்பாட்டில் விளங்கப்பண்ணுகிறான்.
3) ஒரு மனிதனுக்கு வருகிற இரட்சிப்பு தேவனுடையது.
தனி மனிதனால் உண்டானது அல்ல,
அதைக் குறித்து
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
(எபேசியர் 2:9)
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
(எபேசியர் 2:8)
இது
உங்களால் உண்டானதல்ல
என்பதை திரும்பத் திரும்ப நீங்கள் வாசிங்கள்.
(இஸ்ரயேல் அல்லது இந்தியா இரட்சிக்கப்பட வேண்டியது என்னுடைய ஜெபமாய் இருக்கலாம்.)
ஆனால் இஸ்ரயேலோ அல்லது இந்தியாவோ சுவிசேஷத்தை அறிவிக்காமல் இரட்சிக்கப்படுமா ?
ஒருவேளை நாம் சுவிசேஷத்தை அறிவித்து முழு உலகமும் இரட்சிக்கப்பட்டாலும் நாம் மேன்மை பாராட்டு ஒன்றுமில்லை. ஏனென்றால் இது தேவனுடைய ஈவு.
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
(1 கொரி 9:16)
அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
(லூக்கா 17:10)
மேலே சொல்லப்பட்ட வசனங்களை எல்லாம் நன்றாக வாசித்துப் பாருங்கள். புரியாவிடில் திரும்பத் திரும்ப வாசியுங்கள்.
குழப்பமாக இருந்தால் பரிசுத்த ஆவியானவரை அழைத்து ஞானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா தொடர்புக்கு 98 41 711 591.
Comments