கிறிஸ்துவ மீடியா ஊழியங்கள்.
கிறிஸ்துவ மீடியா உலகில் அதிக மக்களை தன் பக்கம் திருப்பிய பாடகர் மற்றும் போதகர் ஒருவர், பண ஆசை மற்றும் பெண்ணாசையில் விழுந்து போனதை தற்போது நாம் அறிவோம்.
அவருடைய பாடல் பிரபலமாகி பல திருச்சபைகளிலும் பல மக்கள் மனதிலும் ஆழமாய் பதிந்ததை நாம் மறுக்க முடியாது
அது மாத்திரமல்ல அவரோடு கூட இன்னும் அநேக பிரபல ஊழியர்கள் இணைந்து பாடுவதை விரும்பி அவர் மூலமாக தங்களையும் தங்கள் பாடல்களையும் பிரபலப்படுத்திக் கொண்டார்கள்.
தற்போது அவருடைய நிலை என்ன ?
என்பதை அநேகர் அறிய முயற்சிக்கிறார்கள். மீடியாவிலும் சில ஆதாரங்களை முன்வைத்து விமர்சனம் பண்ணுவதையும் நம்மால் அறிய முடிகிறது.
ஒருவருடைய வீழ்ச்சிக்கு முதல் காரணம் பணம்.
1) பணம் எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது.
பணம் எதையும் தைரியமாக செய்ய தூண்டுகிறது.
பணம்" உடன் பிறந்த சகோதரன் யோசேப்பை விற்க தைரியம் கொடுத்தது.
(ஆதி 37:27)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை 30 வெள்ளி காசுக்காக காட்டிக் கொடுப்பதற்கு யூதாஸை உற்சாகப்படுத்தி தைரியப்படுத்தியது.
(மத் 26:15)
பணத்தினால் விழுந்து போன தீர்க்கதரிசிகளையும், அப்போஸ்தலர்களையும், இன்றைய கால ஊழியர்களையும் வேதம் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.
*பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.*
*நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.*
(1 தீமோ 6:10-11)
உண்மை ஊழியன் இவைகளை விட்டு ஓட வேண்டும்.
போதும் என்கிற மனது நமக்கு தேவை.
பணம் எவ்வளவு பெருகிறதோ அவன் உயிரோடு செத்தவன் என்று வேதம் சொல்லுகிறது.
2) பெண்களுடன் தொடர்பு
புதிய உடன்படிக்கையின் ஊழியர்களுக்கு பிரதான சத்தியம் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவன் , அதே வேலையில் ஒரே மனைவியை உடையவனாக தன்னை விளங்கப் பண்ண வேண்டும்.
(1தீமோ 3:2)
இந்த பிரபல பாடகனும் பெண் ஆசையில் விழுந்தார்.
தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யும் அளவுக்கு இன்னொரு பெண் நம் வாழ்க்கையில் வரும் பொழுது எவ்வளவு பெரிய துணிகரமான பாவத்தை செய்ய வைக்கிறது.
ஒரு பைத்தியக்கார ஊழியன் இவ்வாறு சொன்னான்.
அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை ஆகையால் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று ,
ஏன் நான் கேட்கிறேன் யோசேப்பு வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டது
போத்திபார் மனைவி. அவன் தேவனுக்கு பயந்து அவ்வளவு பெரிய பொல்லாங்குக்கு உடன்படாமல் ஓடி போனானே.
அவளோடு உல்லாசமாய் இருப்பதை காட்டிலும் சிறைச்சாலையில் தேவனோடு துன்பத்தை அனுபவிப்பதற்காக அவன் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான்.
இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் இழப்பவன் ஊழியன்.
இயேசு கிறிஸ்துவை இழப்பவன் ஊழியன் அல்ல.
சிலர் தைரியமாக சொல்லுகிறார்கள் கர்த்தர் அவனை மன்னித்து விடுவார் என்று....
கர்த்தர் யாரை மன்னிப்பார் ?
எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:26-27
*26சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,*
*27நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.*
என்று வேதம் எச்சரிக்கிறது.
3)புகழ் உச்சிக்கு கொண்டு போய் கீழே தள்ளி விடும் என்பதை அநேகர் அறியவில்லை.
ஒரு தேவ ஊழியன் கூடுமான அளவு மற்றவர்கள் புகழ்ச்சியை விரும்பக் கூடாது.
புகழ்ச்சி ஆபத்தானது.
இயேசு கிறிஸ்துவை மக்கள் புகழ்ந்தார்கள். பின்பு அதே மக்கள் அவரை ஒரு மலையின் உச்சியிலிருந்து தள்ளிவிட வந்தார்கள்.
ஆகையால் புகழ்ச்சியை விரும்புகிறவனுக்கு ஐயோ என்று ஆண்டவர் கூறினார்.
அந்தப் பாடகனுடைய வாழ்க்கையில் அநேக ஊழியர்கள் இப்படி ஒரு பாடலை பாட முடியுமா ? எத்தனை கிருப கிருப கிருப கிருப கிருப கிருப என்று சொல்லி தேவனை மகிமை படுத்தாமல் அந்த ஊழியனை தோளின் மேல் தூக்கி சுமந்து இயேசுவை கீழே தள்ளி அவனை உயர்த்தி
இன்னைக்கு அவனுடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
அந்தோ பரிதாபம் ...
நீடு புது அவதாரம் எடுப்பான் அவன்
கண்டிப்பாக இதே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
அன்று அவனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் கிறிஸ்துவம் இன்னும் தூசிக்கப்படும்.
இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களை தூக்கி எறியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments