தாவீதும் அவன் அறியாமையும்.
தாவீதும் அவன் அறியாமையும்.
அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு விரோதமாக பேசக் கூடாதா ?
இதற்க்கு
தாவீது மற்றும் சவுல் உதாரணங்களை மட்டுமே மேற்கோள் காட்டுகிறார்கள்.
தாவீது தான் அபிஷேகம் பண்ண பட்டவருக்கு விரோதமாக கை போடக்கூடாது என்று கூறுவதை 1சாமுவேல் 26 ஆம் அதிகாரத்தில் வாசிக்க முடிகிறது.
அதை போல் பல சங்கீதங்களில் இதைக் குறிப்பிடுகிறார்.
ஆனால் தாவீது சில காரியங்களை அறியாமல் இருக்கிறார்.
சவுலை தேவன் ராஜாவாக்கின பிரதான நோக்கம்
அமலேக்கியரின் கை கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாயிருந்தபடியால், அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார். இந்த அமிலேக்கியர்கள்
முதன் முதலில் இஸ்ரவேலரை எதிர்த்தார்கள்.
(யாத் 17: 8-13)
ஆகையால்
அமலேக்கியர்களை அழிப்பதற்காகத்தான் சவுலை தேவன் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்.
(1சாமு 15:1-4)
அமலேக்கியர்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதே தேவசித்தமாக திட்டமாக இருந்தது.
அமலேக்கியர்கள் தீய சக்திக்குப் பிரதிநிதியாக இருந்து, தேவனையும், அவருடைய மக்களையும், அவருடைய சத்தியத்தையும் எதிர்த்தார்கள்.
அவர்களை எதிர்த்து முறியடிக்க வேண்டிய கடமை சவுலுக்கு இருந்தது.(1சாமு 15:3)
சமய வைராக்கியம் என்ற போர்வையில், அவன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியவில்லை.
அமலேக்கியரை எதிர்த்து முறியடிக்கவில்லை. இந்த காரணத்தினால் அவன் இராஜ பதவியிலிருந்து தேவனால் நீக்கப்பட்டான்.
(1சாமு 15:18--23)
(அவன் ராஜாவாயிராதபடிக்கு அவனைப் புறக்கணித்து தள்ளினார் என்று வாசிக்கிறோம்.)
எந்த மனிதனால் சவுலை அபிஷேகம் பண்ணினாரோ அதே மனிதனால் தேவன் அவனை புறக்கணித்தார்.
1சாமு 15:35 ல் அவனை ராஜாவாக ஏற்படுத்தியதற்கு கர்த்தர் மனஸ்தாபட்டார்.
கர்த்தர் அவனை விட்டு விலகினார். அவருடைய அபிஷேகமும் அவனை விட்டு விலகிற்று.
பொல்லாத ஆவி அவனை பிடித்தது.
(1சாமு 16:14; 18:10; ஐ வாசிக்க)
எப்போது ஒரு மனிதன் தேவ சித்தத்திற்கும் தேவ சத்தத்திற்கும் கீழ்ப்படியாமல் போகும்போது பாவம்,பிசாசு நமக்குள் வந்து விடுகிறது.
எந்த அமலேக்கியரை அழிப்பதற்கு சொன்னாரோ அதற்கு கீழ்படியாமல், அவர்களை காப்பாற்றினான்.
அவன் எவர்களை காப்பாற்றினானோ அவர்கள் கையாலே சவுல் மடிந்து போனான்.
(2சாமு 1:8,13ல் வாசிக்க)
தாவீது அறியாத சில ......
சவுலை விட்டு கர்த்தர் விலகினதை அறியாதிருந்தான்.
கர்த்தர் அவனை விட்டு விலகும் போது அவனுடைய அபிஷேகம் அதாவது ராஜாவுக்குரிய அபிஷேகம் தாவீதுக்கு கொடுக்கப்பட்டது என்பதை அறியாதிருந்தான்.
கர்த்தர் விலகின பின்பு பொல்லாத ஆவி அவனைப் பிடித்துக் கொண்டது.
அபிஷேகம் பண்ண பட்டவனுக்குள் அசுத்த ஆவி எப்படி வரும் என்பதை புரிந்து கொள்ளாத நிலையில் தாவீது இருந்தான்.
சவுலுக்குள் இருந்த பொல்லாத ஆவியை தாவீது தேவனுடைய இசையினால் துரத்தின போதும் சவுல் தாவீதை தான் கொல்ல நினைத்தான்.
தாவீது கடைபிடிப்பதை சவுல் ஏன் கடைபிடிக்கவில்லை என்பதை தாவீது அறியவில்லை.
ஒரே ஒரு காரியத்தை மட்டுமே முக்கியப்படுத்துகிறார் கர்த்தர் அபிஷேகம் பண்ணி விட்டார். கை போடக்கூடாது, அவருக்கு விரோதமாய் பேசக்கூடாதென்று ஊழியர்கள் தான் துணிகரமாக பாவத்தை செய்கிறவர்கள், இந்த வார்த்தை தான் பயன்படுத்துகிறார்கள்.
இதே தாவீது சவுல் மரணம் அடைந்தபோது கில்போவா மலையை சபிக்கும்போது அவன் சொன்ன வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும்.
(2 சாமுவேல் 1:21 ல்)
கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்களும் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; *"சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவன்போல"*
அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
*சவுல் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்படாதவன் போல*அவனுடைய கேடகமும் அவமதிக்கப்பட்டதே
அபிஷேகம் பண்ணப்படாதவனுடைய மரணம் போல.. என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டான்.
உதாரணமாக சொல்லுகிறேன்
அபிஷேகம் பண்ண பட்டவனுக்கு விரோதமாக பேசக்கூடாது என்று நாம் சொல்கிறோம்.
பேதுரு அபிஷேகம் பெற்றவர்.
மேலும் பவுலும் அபிஷேகம் பெற்றவர்.
பேதுரு மாய்மாலம் பண்ணும்போது பவுல் அவரைக் கடிந்து கொண்டாரே அது சரியானதா ?
இயேசு கிறிஸ்து தேவனால் அபிஷேகம் பண்ண பட்டவர்.
அப்படியானால் அவருடைய வார்த்தையை கலப்படமாக தவறாக பேசும் ஊழியர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவுக்கு விரோதமாக பேசுகிறார்களே அது தவறல்லவா ?
ஏன் அப்படிப்பட்ட வியாக்கியானம் கொடுப்பதில்லை ?
எபிரேயர் நிரூபத்தை எழுதிய ஆவியானவர். அவரை மீண்டும் சிலுவையில் அறைகிறீர்கள் என்று சொல்லுகிறாரே அதை எப்போது புரிந்து கொள்வார்கள். (எபி 6:6)
தேமா பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து என்னை விட்டு பிரிந்து போனான்.
தேமா அபிஷேகம் பெறவில்லையா ?
வாழ்வியல் , இறையியல்
இப்படி ஒரு உபதேசம் இருக்கிறது தெரியுமா பிரதர்.
எசேக்கியேல் மூன்றாம் அதிகாரம்
நீதிமான் என்றாலும்
துன்மார்க்கன் என்றாலும்
இருவருடைய தவறையும் அவர்களுக்கு விவரித்து காண்பி.
அப்போது அவர்களுடைய இரத்தப் பழிகளுக்கு நீ விலகி இருப்பாய்.
இல்லாவிடில் அந்த இரத்த பழியை நான் உன்னுடைய கையில் கேட்பேன்.
உண்மையாகவே ஒரு தேவனுடைய ஊழியக்காரன் ஜனங்களுக்கு காவல்காரனாய். அல்லது ஜாமக்காரனாயிருப்பான் என்றால் சில காரியங்களை கேட்டுத்தான் ஆக வேண்டும்.
தேவனிடத்தில் பட்சப் பாதம் இல்லை,
அவருடைய ஊழியக்காரர்களும் அப்படி இருக்க வேண்டும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
தொடர்ந்து வேதத்தை சரியாக தியானித்து போதிக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments