செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிறவர்.
செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிறவர்.
(சங் 7:10)
உபத்திரவ காலத்தில் தங்களை விடுவிக்கவும் உதவி செய்யவும் செம்மையானவர்கள் தேவனை எதிர்பார்க்கலாம் என்று பரிசுத்த ஆவியானவர் போதிக்கிறார்.
நம்முடைய சுத்த மனசாட்சி, உண்மையான விடாமுயற்சி அல்லது உத்தம இருதயத்தைக் காத்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் தேவனிடத்தில் வேண்டிக் கொள்ளலாம்.
1)*"கர்த்தாவே, என் நீதியின் படி எனக்கு நியாயஞ் செய்யும்"*
(சங் 7:8;யோபு 29:14) என்று ஜெபிப்பதின் மூலம் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஆவிக்குரிய நேர்மையை வலியுறுத்த முடியும். அது விசுவாசத்தின் மூலம் தேவனுக்காக அன்பினால் சுத்திகரிக்கப்பட்ட, உண்மையான இதயத்திலிருந்து சொல்லப்படுமானால், அப்படிப்பட்ட உரிமை கோருதல் சுயநீதியானதல்ல.
(1யோவா 3:21; யாக் 5:16)
2)மனந்திரும்பிய ஒரு இருதயத்தோடு தேவனுடைய உதவிக்காக ஜெபிப்பது என்ன பாக்கியமான காரியம்.
(சங் 7:6) ஆனால் அதைப் பார்க்கிலும் ஒரு சுத்த மனசாட்சியோடும், யாருக்கும் தீங்கு செய்ததில்லை என்ற உணர்ச்சியோடும் மற்றும் நம்முடைய முழு இருதயத்தோடும் உண்மையாக தேவனில் அன்பு கூற நாடுகிறோம் என்ற அறிவோடும் தேவனை நோக்கி ஜெபிப்போம் ஆனால் மிகவும் நலமானதாயிருக்கும்.
3) அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுவதைக் கவனிக்கவும்:
*"இதனால் நான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்."*
(அப் 24:16; 2கொரி 1:12; 1தீமோ 1:3; 1பேது 3:21). மேலும்
*"நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்று இயேசு கிறிஸ்து உறுதியாகக் கூறுகிறார்."*
(யோவா 15:7)
தொடர்ந்து வாசித்து பயனடையுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591. WhatsApp
Comments