இயேசு கிறிஸ்துவின் ஜெபங்கள்
இயேசு கிறிஸ்துவின் ஜெபங்கள்.
இயேசு கிறிஸ்து ஜெபிக்க வேண்டுமா ?
இயேசு கிறிஸ்து ஜெபித்ததினால் பரலோக தேவனுக்கு கீழானவரா ?
தம்மை பின்பற்றி வருகிறவர்களுக்கு ஒரு (அடிச்சுவடுகள்)முன்மாதிரியை தான் வாழ்ந்து செய்து காட்டினார்.
(யோவா 13:15; ரோம 15:6; 1பேதுரு 2:21)
மற்ற நற்செய்தி நூல் எழுத்தாளர்களை விட அதிகமாக லூக்கா இயேசுவின் வாழ்க்கையிலும், ஊழியத்திலும்"ஜெபம்" அதிகமாக இடம்பெற்றிருப்பதைச் சுட்டி காட்டுகிறான்.
1)யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவியானது அவர் மேல் இறங்குகிறது ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்.
(லூக் 3:20,21)
விளைவு:
வானம் திறந்தது. ஆவியானவர் புறாவை போல் இறங்கி வந்தார்.
பிதாவாகிய தேவன் இவர் நேசக்குமாரன் என்றார்.
2) அநேக தடவைகளில் இயேசு கிறிஸ்து
ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியாக பிரிந்து சென்று ஜெபம் பண்ணினார்.
(லூக்கா 5:16)
விளைவு:
வியாதிகளை குணமாக்கத்தக்கதாக கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது.
3) தமக்குப் 12 சீஷர்களை தெரிந்து கொள்வதற்கு முன் இரவு முழுவதும் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்.
(லூக் 6:12)
விளைவு:
பொழுது விடிந்த பொழுது தம்மை காட்டிக் கொடுக்கிறவனையும் சேர்த்து 12 பேரை தெரிந்து கொண்டார்.
4) தம்முடைய சீஷர்களிடத்தில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்பதற்கு முன் தனியாக ஜெபம் பண்ணினார்.
(லூக் 9:18)
விளைவு:
பேதுரு பிரதியுத்தரமாக,
நீர் தேவனுடைய குமாரன்.
*இன்னைக்கு நம்முடைய ஜெபம் நம்முடைய சபையில் இருக்கும் எண்ணிக்கையுள்ள ஜனங்களாயிருந்தாலும், அவர்கள் பிதாவையும் குமாரனையும் அறிகிற அறிவையடைய நாம் ஜெபிக்க வேண்டும்.*
5) ஜெபம் பண்ணுவதற்கு மலை மேல் ஏறினார்.
அவர் ஜெபம் பண்ணுகையில்
அவருடைய முகரூபம் மாறிற்று.
(லூக்கா 9:28,29)
விளைவு:
முக ரூபம் மாறியது.
மோசே, எலியா சம்பாஷனை.
இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்கு செவிக்கொடுங்கள்.
6) தம்முடைய சீஷர்களுக்கு கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் ஜெபித்தார்.
(லூக் 11:1)
விளைவு:
பரலோக ஜெபம்.
7) கெத்செமனேயில் மிகவும் உருக்கமாக ஜெபம் செய்தார்.
(லூக்கா 22:42,44)
விளைவு:
தேவ தூதன் அவரைப் பலப்படுத்தினான்.
8) சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது மற்றவர்களுக்காக ஜெபம் பண்ணினார்.
(லூக் 23:34)
விளைவு:
சிலுவையில் அறையப்பட்ட ஒரு குற்றவாளி மனந் திரும்பினான்.
(லூக்கா 23:40,42,43)
9) தம் மரணத்தின் முன் அவர் பேசிய வார்த்தைகள் ஒரு ஜெபமாயிருந்தது.
(லூக்கா 23:46)
விளைவு:
நூற்றுக்கு அதிபதி மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரன். என தேவனை மகிமைப்படுத்தினான்.
10) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னரும் ஜெபித்ததாக லூக்கா எழுதுகிறான்.
(லூக்கா 24:30)
விளைவு:
அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள்.
இயேசு கிறிஸ்து தம்முடன் இருக்க ஜனங்களை அழைப்பதற்கு முன் ஜெபித்தார்.
(மத் 11:25-28)
எனது பிரசங்கத்தில் ஒன்று
இயேசு கிறிஸ்துவின் ஜெபம்.
இயேசு கிறிஸ்து தந்த அடிச்சுவடுகளில் ஒன்று ஜெபம்.
இயேசு கிறிஸ்து ஜெபித்ததினால் அவர் அதிகாரத்தில் குறைந்தவர் என்று யோகோவா சாட்சிகள் கூறி வருகின்றனர்.
ஒரு மனிதன் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை அழகாக தன்னுடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்தார்.
(யோவா 6:45)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
தொடர்ந்து எங்கள் ஊழியங்களுக்காக, ஜெபித்துக் கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள். நன்றி.
Comments