விபச்சாரம் செய்யாதிருப்பாயாக
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக
(யாத் 20:14)
விபச்சாரத்தைத் தடை செய்யும் ஏழாம் கற்பனை, (லேவி 20:10;
உபா 22:22).
எல்லா வகையான, ஒழுக்க நெறி தவறிய எல்லாப் பாலியல் தீமைகளையும் கண்டிக்கிறது.
(மத் 5:27-32; 1கொரி 6:13-20)
விபசாரம் அதாவது (கணவன், மனைவியர் ஒருவருக்கொருவர் உண்மை இல்லாதபடி நடத்தல், பிறருடன் உடலுறவு கொள்ளுதல்)
கர்த்தருக்கு அருவருப்பான செயல். இதனை பரிசுத்த வேதாகமம் எல்லா இடங்களிலும் கண்டனம் செய்கிறது. விபசாரம் குறித்து
பரிசுத்த வேதாகமம் போதிப்பவை:
1) இது தேவன் தந்த ஒழுக்க நெறியாகிய பத்து கற்பனைகளில் ஒன்றை மீறுகிறது.
2) பழைய ஏற்பாட்டுச் சட்டத்தின் படி விபசாரம் செய்தவன் கொலை தண்டனை பெற வேண்டும்.
(லேவி 20:10;உபா 22:22)
3) விபசாரம் நிரந்தரமான, கொடிய விளைவுகளை தருகிறது. (2 சாமு 11:1-17;12:14;எரோ 23:10,11; 1கொரி 6:16-18) விபசாரம் செய்கிற ஒருவன் அல்லது ஒருத்தி தன் வாழ்நாள் முழுவதும் வெட்கம் அனுபவிக்க வேண்டும்.
(நீதி 6:32,33;).
4) தேவனுடைய மக்களின் தலைவர்கள் (ஊழியர்கள் அல்லது தலைமை போதகர்கள்) விபசாரம் செய்தால் அது ஒரு மகா பயங்கர பாவமாகும். அவர்கள் அப்படிச் செய்வது ஆண்டவருடைய வார்த்தையையும், ஆண்டவரையுமே வெறுத்து ஒதுக்கி விடுவது போலகிறது.
( 2சாமு 12:19-10).
கற்பில்லாதவர்கள் திருச்சபைத் தலைவர்களாகவும், கண்காணிகளாகவும் இருக்க தகுதி இல்லாதவர்கள்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில்,
தேவனற்ற கள்ளத் தீர்க்கதரிசிகளாலும், ஆசாரியர்களாலும் விபசாரம் தேசமெங்கும் பரவிற்று.
(எரோ 23:10-14; 29:23;).
5) விபசாரமும், தகாத உடலுறவுகளும், தலைவர்கள் மத்தியிலும், தேவனுடைய மக்களிடத்திலும் காணப்பட்டால் அவர்களுடைய ஆவிக்குரிய விபச்சாரத்தின் விளைவே அவை.
அதாவது தேவனுக்கு உண்மையற்றிருத்தல்,
(ஓசி 4:13-14; 9:1).
6) இருதயத்தில் ஒரு ஆசை என்ற நிலையில் விபசாரம் ஆரம்பிக்கிறது. அந்த ஆசை பெருகி தகாத சரீர உறவில் ஈடுபடச் செய்து, விபசாரம் செய்ய வைக்கிறது. மாம்ச இசை என்பது ஒரு பாவம் என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுகிறது.
(யோபு 31:1,7; மத் 5:28).
7) விபசாரம் என்பது, குற்றமற்றவருக்குக் கூட விவாகரத்து என்ற திருமணம் முறிவு ஏற்படும் வகையில் மாபெரும் பாதக விளைவைத் தரக்கூடிய கொடிய பாவம்.
(மத் 19:9; மாற் 10:11;).
8) திருச்சபையில் தகாத உடலுறவு ஒழுக்கக்கேடு நேராதபடி எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அதை ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது.
( 1கொரி 5:1-13).
9) விபசாரம் செய்துவிட்டு அதற்காக மனஸ்தாபப்படாதவர்களுக்கு, தேவனுடைய இராஜ்யத்தில் பங்கில்லை. அவர்கள் தேவனுக்கான வாழ்வு, இரட்சிப்பு ஆகியவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு விடுகிறார்கள்.
(1கொரி 6:9;கலா 5:19-21).
10) விபசாரமும், வேசித்தனமும் விசுவாசத்தை மறுதலிக்கும் மாய்மாலமான திருச்சபையை விளக்க பயன்படும் சொற்கள்.
அத்திருச்சபையில் அருவருப்பான,
அவலட்சணமான அக்கிரமச் செயல்கள் நிறைவாய் நடைபெறும்.
(வெளி 17:1-5; 17:1).
இந்த அநேக போதகர்கள் இப்படிப்பட்ட பாவத்தில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சிக்கிக் கிடக்கிறார்கள்.
திருச்சபை மக்கள் போதர்களுக்கான ஜெபங்கள் அதிகமாக ஒவ்வொரு ஆராதனைகளிலும் ஏறெடுக்கப்பட வேண்டும்.
திருச்சபைக்கு மிகப்பெரிய அவமானத்தை கொண்டு வருவதும் இந்த ஏழாம் கட்டளையான பாவம்.
இந்த பாவம் உடல் ரீதியாகவும், கண்கள் ரீதியாகவும் வருகின்றன.
இப்படிப்பட்ட பாவங்களில் திருச்சபை மக்கள், போதகர்கள் விழுந்து போகாதபடிக்கு தன்னை காத்துக் கொள்ள தேவனைச் சார்ந்தே வாழ வேண்டும்.
பரிசுத்த ஆவியில் நிறைந்து அவரால் ஒவ்வொரு நாளும் வழிநடத்தப்பட வேண்டும்.
நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் கர்த்தருடைய ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் ஜெயம் பெற முடியும்.
தொடர்ந்து ஜெபியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments