பரிசுத்த சகோதரரே

... பரிசுத்த சகோதரரே.

இந்தக் கடிதம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்த யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது. 
(எபி 10:32,-39) இக்கடிதத்தை வாசிப்பவர்கள் உண்மையான மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள் என்பது கீழ்க்கண்ட உண்மையிலிருந்து தெளிவாகும். 

1)(எபி 2:1-4; இந்த வசனங்கள் அவர்கள் இரட்சிப்பையும், விசுவாசத்தையும் விட்டு வழுவிப் போகும் அபாயம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

2)(எபி 3:1; இங்கு விசுவாசிகள் அனைவரும் "பரிசுத்த சகோதரரே" என்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பரலோக அழைப்பில் பங்கேற்பார்கள். 

3)(எபி 3:6; இங்கே அவர்கள் 
"தேவனுடைய வீடு"என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த விசுவாசிகள் அனைவரும் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பதற்கு கூடுதல் ஆதாரங்களை கீழ்கண்ட வசனங்களில் காணலாம். 
(எபி 3:12-19; 4:14-16; 6:9-12,18-20; 10:19-25,32-36; 12:1-29; 13:1-6,10-14,20,21).

பரிசுத்த சகோதரரே என்று இந்த கடிதம் கூறுகிறது. அதற்கு பாத்திரவான்களாக நடந்து கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் பெரிய காரியங்களை செய்வார் ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
98 41 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை