கீழ்படியாத தீர்க்கதரிசி. 2பாகம்.
கீழ்படியாத தீர்க்கதரிசி.
2பாகம்.
*இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை.*
(எண் 20:12)
மோசே தேவனுடைய கட்டளைக்குச் சரியாகக் கீழ்படியாததால், இஸ்ரவேலரைக் கானான் தேசத்துக்குள் அழைத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.
(எண்ணாகமம் 20இல் 8ஆம் வசனத்தையும் 11 வது வசனத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும்)
இஸ்ரவேல் மக்களின் ஆவிக்குரிய தலைவன் மோசே. அவன் மூலமாகவே தேவன் 10 கட்டளைகளைக் கொடுத்தார்.
அவனுடைய பதவியும், புகழும் உயர்ந்த நிலையிலிருந்தபடியால் அவன் இன்னும் அதிகமாக தேவனுடைய கட்டளைகளுக்குப் பயந்து கீழ்ப்படிய வேண்டும்.
(யாக் 3:1)
1) மோசே செய்த பாவங்கள் இரண்டு.
முதலாவதாக தேவனுடைய மகிமையும், வல்லமையும் தன்னிலும், ஆரோனிலும் குடி கொண்டிருப்பதாக எண்ணி, மோசே மிகவும் ஆவேசமாகப் பேசினான். (எண் 20:10;சங் 106:33)
இரண்டாவதாக, மிகவும் கோபத்துடனும், ஆத்திரத்துடனும் கன்மலையை இரண்டு முறை அடித்தான். தேவன் உரைத்தபடி அதனிடம் அவன் பேசியிருக்க வேண்டும்.
(எண் 20:11)
2) மிகவும் ஆத்திரத்துடன் பேசிச் செயல்பட்டதால் மோசே தேவனைப் பூரணமாக நம்பவில்லை என்பதைக் காட்டினான்.(எண் 20:12)
இவ்வாறு தேவனுடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தான்.(எண் 20:24)
அந்த நெருக்கடியான வேளையில் மோசேயிடம் விசுவாச குறைவும், கீழ்படியாமையும் காணப்பட்டது. தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு நாம் காட்ட வேண்டியது விசுவாசமும், கீழ்ப்படிதலுமே.
(உபா 9:23;1சாமு12:15; 1இரா 13:21; 2இரா 17:14; சங் 106:33)
மேலும் மோசே தேவனைப் பரிசுத்தமான, உன்னதமான கர்த்தர் என்று அறிக்கையிடத் தவறினான். அவருக்கு மட்டுமே அவன் பயந்து கீழ்ப்படிய வேண்டும் என்பதை மறந்தான்.
3) இந்த வசனங்கள் மூலமாக உலகின் எல்லா ஊழியர்களையும், போதகர்களையும், அவர்களுடைய பதவி செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக தேவனுக்குக் பயந்து கீழ்படியவேண்டிய
தன் அவசியத்தை
உணரச் செய்கிறார்.
மோசே தேவனுடைய மக்களை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்துக்கு அழைத்துச் செல்லும் உரிமையைத் தன் கீழ்படியாமையினால் இழந்தது போல, இன்றைய ஊழியர்களும், திருச்சபை தலைவர்களும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத தன்மையினால்
தங்கள் திட்டங்களைச் செய்து
நிறைவேற்றும் தகுதியை இழந்து விடுவார்கள்.
(1தீமோ 3:1-7)
மோசேயின் கீழ்படியாமையினால் அவன் கானானுக்குள் மக்களை வழிநடத்திச் செல்ல முடியவில்லை அவனும் செல்ல முடியவில்லை.
தேவன் கொடுத்த ஊழியத்தை முழுமையாக செய்து முடிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது . என்பதை உணர வேண்டும்.
சில அறிஞர்கள் மோசே கானானுக்குள் பிரவேசித்து கானானுக்குள் மரித்திருந்தால் அங்கே அவனை கடவுளாக மாற்றி இருப்பார்கள். கோயில்களை கட்டியிருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள்.
மோசேயை இங்கே அடக்கம் பண்ணின தேவன். அங்கேயும் யாருக்கும் தெரியாமல் அடக்கம் பண்ண வல்லவராக இருக்கிறார். என்பதையும் நாம் அறிய வேண்டும்.
ஆகையால் கீழ்படிந்து தேவனுடைய சித்தம் செய்வோம். நம்முடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments