ஸ்திரீகள் தங்கள் புருஷர்களிடத்திலும்,

ஸ்திரீகள் தங்கள் புருஷர்களிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களாயிருக்க வேண்டும்.*
(தீத் 2:4,5)

தாய்மை, குடும்பம், வீடு இவற்றில் பெண்கள் மீது தேவன் ஒரு திட்டமான நோக்கம் வைத்துள்ளார். 

1) ஒரு மனைவி அல்லது தாய் மீது தேவனுடைய விருப்பம், அவளுடைய முழுக் கவனமும், கரிசனையும் அவளது குடும்பத்தின் மீது இருக்க வேண்டும் என்பதே. 
ஒரு கிறிஸ்தவ தாயின் உலகத்தின் மையம், அவளுடைய வீடு, கணவன், பிள்ளைகள் இவைகளாகத்தான் இருக்க வேண்டும். அவள் தேவனுடைய வார்த்தையைக் கணப்படுத்தும் முறை இதுவே.
(உபா 6:7;நீதி 31:27; 1தீமோ 5:14).

2) தன்னுடைய குடும்பத்தை பொறுத்தவரையில் ஒரு பெண்ணுக்கு தேவன் கொடுத்துள்ள திட்டமான வேலை 
அ) அவளிடம் தேவனால் ஒப்படைக்கப்பட்டுள்ள அவருடைய பிள்ளைகளை பராமரித்துப் பாதுகாத்தல்.
(தீத் 2:4; தீமோ 5:14) இதை ஆண்டவருக்குச் செய்யும் ஊழியமாக கருத வேண்டும். 
(சங் 127:3;மத் 18:5;லூக்9:48;)

ஆ) தன்னுடைய கணவனுக்கு ஏற்ற துணையாகவும், உதவி செய்பவளாகவும் இருக்க வேண்டும். (தீத் 2:4,5;ஆதி 2:18).
இ) தகப்பன் தன் பிள்ளைகளை தெய்வ பக்தியிலும் உலக வாழ்க்கையில் தேவையான திறமைகளை வளர்ப்பதிலும் பயிற்சி அளிக்க தாய் உதவி செய்ய வேண்டும். 
(உபா 6:7;நீதி 1:8,9;கொலோ 3:20; 1தீமோ 5:10)

 ஈ) தாய் விருந்து உபசரிக்கும் தன்மை உள்ளவளாயிருக்க வேண்டும்.(எசா 58:6-8;லூக் 14:12-14;1தீமோ 5:10)

உ) வீட்டிற்கு தேவையான அனைத்தையும் பெறுவதற்கு தன் முழு திறமையையும் பயன்படுத்த வேண்டும். 
(நீதி 31:13,15,16,18,19,22,24;)

ஊ) வீட்டில் உள்ள தன் வயது முதிர்ந்த பெற்றோர்களைக் கவனித்து பராமரிக்க வேண்டும். (1தீமோ 5:8; யாக் 1:27)

3) சில தாய்மார் தங்கள் வாழ்க்கையில் தங்கள் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை தேவனுடைய திட்டத்தின் படி நிறைவேற்ற விரும்புவார்கள். ஆனால் குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலைக் காரணமாக பிள்ளைகளை விட்டு பிரிந்து போற இடத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தங்கள் பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் போகும். அப்படிப்பட்ட வேளைகளில் தன் சூழ்நிலைகளை ஆண்டவரிடம் சமர்ப்பித்துத் தன் பிள்ளைகளுடன் சேர்ந்து குடும்ப பொறுப்புகளை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு ஆண்டவரிடம் தினமும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும்.
(நீதி 3:5,6; 1தீமோ 5:3;எபே 5:21-23)

அன்பு சகோதரிகளே முயற்சி செய்து பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 
ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை