தெயுதாஸ்

தெயுதாஸ்


ஏனெனில் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.

அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டனர்.
(அப்போ 5:36-37),
மேலே வாசிக்கப்பட்ட இந்த வசனத்தின்படி அநேகர் எழும்பி தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை இயேசுவின் பெயரால் சேர்த்துக் கொள்வார்கள். அவர்களுக்குள் தங்களை பெரியவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

மத்தேயு 28: 19,20 ன் படி தேவனுக்கென்று சீஷர்கள் எழும்ப வேண்டும். அவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை இந்த உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தேவ சித்தம் நிறைவேற்றப்படவும், அப்போது மனுஷர் குமாரனுடைய வருகையும், தம்முடைய ஜனங்களை தம்மிடம் சேர்த்துக் கொள்ளவும், இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கவும், தேவனுடைய அரசாட்சி இந்த பூமியில் நடக்கவும், ஆயிரம் வருடம் அரசாட்சி முடிந்த பின்பு சாத்தான் அக்கினி கடலிலே தள்ளப்பட்டது பின்பு, புதிய வானம் புதிய பூமி இறங்கி வரவும், இப்படி தேவனுடைய திட்டங்கள் பரிபூரணப்படவும், 
சுவிசேஷங்களை இந்த உலகம் வந்து கொண்டு செல்வதற்காக தேவன் ஊழியர்களை ஏற்படுத்தினார். 
(மாற் 3:14,15),

இந்த ஊழியத்தில் தேவனுக்கென்று உண்மையும் உத்தமமாக ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்களும் இருக்கிறார்கள். 

அதே நேரத்தில் தங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை ஆயத்த படுத்தவும் அந்த கூட்டத்தின் மூலமாக தங்களை பெரியவர்களாக, பெரிய தீர்க்கதரிசிகளாக, பெரிய அற்புதமாக அடையாளங்களைச் செய்யக்கூடியவர்களாக, கடவுளுடைய ஊழியக்காரனைப் போல நடித்து மக்களை வஞ்சிக்கிற ஊழியர்களும் உண்டு.

இவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம் ?
இவர்களுடைய பிரதான நோக்கம் பணம், பொருள், மண், பெண்ணாசை

தங்கள் ஆடம்பரமான வாழ்க்கைக்கு தேவனுடைய பெயரைச் சொல்லி 
தங்களுடைய திட்டங்களை தேவனுடைய திட்டங்களாக சொல்லி மக்களிடம் பணத்தை வாங்கி தன்னுடைய குடும்பத்துக்காக எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கொள்வார்கள். 
(2 இரா 5:20-27 ;யாக் 5:3;),

பாவம் என்றும் தெரிந்தும் அதை துணிகரமாய் நடந்து கொள்வார்கள். 
பெண்களோடு உல்லாசமாய் வலம் வருவார்கள்.
(2தீமோ 3:7)
மனைவிக்கு துரோகம் செய்வார்கள். 
எவன் ஒருவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியவில்லையோ, அவனுடைய மனைவியோடு வேறு ஒருவன் சயனிப்பான் என்று வேதம் கூறுகிறது. 
(உபா 28:30;)
எனவே தான் வேதம் அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் என்று அறிவுரை கூறுகிறது. 
(எபி 13:7).
இப்படிப்பட்ட சுயநலமான ஊழியர்கள் சீக்கிரத்தில் அழிந்து போவார்கள். 
எவ்வளவு சீக்கிரமாய் துளிர்த்து வளர்ந்தார்களோ அவ்வளவு சீக்கிரமாய் பட்டு போய் விடுவார்கள். 
அப்போது இவர்களைப் பின்பற்றியவர்களும் மெய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல சிதறடிக்கப்படுவார்கள் என்று தேவ வார்த்தை கூறுகிறது.

இது வாசிக்கிற தேவனுடைய ஊழியர்களே, விசுவாச பிள்ளைகளே 
இயேசு கிறிஸ்து சொன்னார்
நானே வழி. 
நானே சத்தியம். 
நானே ஜீவன். 
இயேசு கிறிஸ்து மூலமாகவே நாம் பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை இழந்து விடாதீர்கள். 
மனிதனை பின்பற்றுவதை விட்டு விடுங்கள் .
அவனுடைய ஜீவன் எம்மாத்திரம். அவன் இந்த பூமியில் இருக்கப் போகிற நாட்கள் எத்தனை ?
எனவே இயேசு கிறிஸ்துவை முழு இருதயத்தோடு பின்பற்றுங்கள். 
உங்களுக்கு வேத வசனத்தை போதிக்கும் ஊழியர்களை இரட்டிப்பான கணத்திற்கு எண்ணிக் கொள்ளுங்கள். 
ஆனால் கடவுளே அவர்தான் என்று எண்ணாதீர்கள். 
இயேசுவுக்கு ரசிகர்களாக, அல்லது தொண்டர்களாக, அல்லது பிள்ளைகளாக, இருப்பதற்கும் வாழ்வதற்கும் முயற்சி செய்யுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோடரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.


Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை