சாலோமின் இராஜாவான மெல்கிசேதேக்கு.
சாலோமின் இராஜாவான மெல்கிசேதேக்கு.
(ஆதி 14:18
மெல்கிசேதேக்கு (என்றால் நீதியின் ராஜா என்று பொருள்) ஆபிரகாமின் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன். 'சாலோம்(எருசலேமின் பழைய பெயராயிருக்கலாம்)
தேசத்தின் ராஜாவாக"வும்,
"உன்னதமான தேவனின் ஆசாரியனாக"வும் இருந்தான்.
அவன் ஆபிரகாமைப் போல உண்மையான ஒரே தேவனைத் தொழுது கொண்டான்.
இவன் கானானிய பட்டணமாகிய சாலேமின் ராஜாவாகவும், தேவனுடைய ஆசாரியனாகவும் இருந்தான்,
(ஆதி 14:18)
இவனும் யோபுவைப் போல, இஸ்ரவேலர்யல்லாத ஒரு தேவபக்தன்.
மெல்கிசேதேக்கு, இயேசு கிறிஸ்துவின் இராஜரீகத்துக்கும், நித்திம ஆசாரியத்துவத்துக்கும்
முன்னடையாளமாயிருந்தான்.(சங் 110:4; எபி 7,1,3)
கிறிஸ்துவின் ஆசாரிய தத்துவம் மெல்கிசேதேக்கின் முறைமைப்படி உள்ளது.
(எபி 6:20)
இவனுக்கு ஆபிரகாம் தசமபாக காணிக்கைகளை செலுத்தி அவனால் ஆசீர்வதிக்கப்பட்டான். என்பது குறிப்பிடத்தக்கது. நியாயப்பிரமாணம் மோசேயின் காலத்தில் கொடுக்கப்பட்டது, தசம பாகம் நியாய பிரமாணத்திற்கு முன் கொடுக்கப்பட்டது, அதுவும் கிறிஸ்துவுக்கு முன் அடையாளமாகயிருந்த ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கு கொடுக்கப்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும்.
பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாம் ஊழியம் செய்கிறோம் என்பதை நினைவு கூறவும்.
(எபி 7:2-7)
*ஒவ்வொன்றிலும் பத்தில் ஒன்று என்ற தசமபாகத்தை
அவனுக்கு கொடுத்தான்.*
(ஆதி 14:20,)
தேவனுடைய உதவிக்கும், கிருபைக்கும், நன்றி கடனாக, தன் கொள்ளைப் பொருளிலிருந்து (அபிராம்)ஆபிரகாம் பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தான்.
(எபி 7:4).
*வேதத்தில் தசம பாகம் பற்றி முதன் முதலில் குறிப்பிடப்படும் இடம் இதுவே.*
*இவன் தகப்பனும், தாயும் இல்லாதவன்.*
இப்படி கூறுவதால் மெல்கிசேதேக்குக்கு உண்மையிலே தாயும் தகப்பனும் இல்லை, அவன் ஒரு தேவ தூதன் என்று நினைத்து விடக்கூடாது. இப்படி கூறப்படுவதன் காரணம் வேதகாமத்தில் அவனுடைய வம்ச வரலாறு குறிப்பிடப்படவில்லை. அதனால் தெரியவில்லை என்பதே. அவனுடைய வாழ்க்கையின் ஆரம்பம் பற்றியும், முடிவு பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அவன் நித்திய கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியை போல இருக்கிறான்.
இயேசு கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்துக்கு முடிவில்லை.
(எபி 7:24,25)
*அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால்.*
(எபி 7:11)
ஏனெனில் லேவியரின் ஆசாரியத்துவம் பூரணமானதல்ல. (எபி 10:4)
அந்த ஊழியம் பாவ மனிதர்களால் செய்து நிறைவேற்றப்பட்டது.
(எபி 7:27,28)
இந்த ஊழியம் பரிபூரண ஆசாரியரும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிறிஸ்து ஒரு பரிபூரண ஆசாரியன். அவர் முழுக்க முழுக்க நீதியின் சொரூபமாயிருந்தார். அவர் ஒரே தரம் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். அவர் நமக்கு நித்திய பிரதான ஆசாரியராக பரலோகத்தில் பிதாவின் முன்னிலையில் செயல்படுகிறார். அவர் என்றென்றும் வாழ்கிறார்.
(எபி 7:24-28) எனவே அவர் தன் மூலமாக தேவனைக் கிட்டிச் சேருகிறவர்களை என்றென்றுமாக பூரணமாகக் காக்க வல்லவராயிருக்கிறார்.
(எபி 7:25) ஆமென்.
வேதத்தின் துணை கொண்டு வாசித்து பயனடையுங்கள்.
வாசிக்கிறவர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments