ஆசாரிப்புக் கூடாரம்

ஆசாரிப்புக் கூடாரம்

யாத்திராகமம் 25 ஆம் அதிகாரத்தில் ஆசாரிப்புக் கூடாரம் பற்றிய அறிவுரைகளை தேவன் கொடுத்தார். 
வரலாற்று அடிப்படையில், ஆவிக்குரிய நிலையிலும் வடிவமைப்பு மாதிரியிலும் 
'ஆசாரிப்பு கூடாரம்' என்றால் 
அது பரிசுத்த வேதாகமம் அதைப்பற்றி என்ன கூறுகிறதோ அதன் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். 

1) ஆசரிப்புக் கூடாரம் ஒரு பரிசுத்தஸ்தலம். (யாத் 25:8)
அங்கு தேவன் வாசமாயிருந்து தமது மக்களை சந்திக்கும் அவருடைய வாசஸ்தலம். 
(யாத் 25:22; 29:45,46;எண்5:3;எசே 43:7,9;) 
இரவும் பகலும் கர்த்தருடைய மகிமை ஆசாரிப்புக் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தது. அங்கிருந்து தேவனுடைய மகிமை நகரும்போது இஸ்ரவேலர் பயணம் செய்ய வேண்டும். பாலைவனத்தில் இம்முறையில் தான் தேவன் அவர்களை வழி நடத்தினார். 
(யாத் 40:36-38;எண் 9:15-16).

2) அது ஒரு"சாட்சியின் வாசஸ்தலம்"(யாத் 38:21) அதாவது அதில் 10 கற்பனைகள் பாதுகாக்கப்பட்டிருந்தது. பத்து கற்பனைகள் எப்போதும் தேவனுடைய பரிசுத்தத்தையும், அவர் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கிறார் என்பதையும் நினைவூட்டுவதாய் இருந்தது. அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிதலும் தேவனோடுள்ள உறவும் ஒருபோதும் ஒன்றுக்கொன்று பிரிந்திருக்க முடியாது.

3) இரத்தபலியின் மூலம் பாவம் நிவாரணத்தை தேவன் அருளித் செய்த இடம் அதுவே.
(யாத் 29:10-14) இவ்வாறு அது மனித இனத்தின் பாவத்திற்காக இயேசு கல்வாரிச் சிலுவையில் இறுதியாக பலியானதை நினைவுபடுத்துகிறது.
(எபி 8:12; 9:11-14)

4) அது  மோட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது ஒரு பரலோக ஆசாரிப்புக் கூடாரம். அதில் நமது நித்திய பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து, என்ற நமக்காக வேண்டுதல் செய்யும்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார். 
(எபி 9:11,12, 24-28)

5) புதிய வானமும், புதிய பூமியும் தோன்றும் தேவனின் இறுதியான மீட்பை அது சுட்டிக் காட்டுகிறது. அதாவது
'வாசம் செய்யும் இடம்', சொல் 
பொருளின்படி ஆசாரிப்புக் கூடாரம். தேவனுடைய இந்த இடம் மனுஷர் மத்தியில் உள்ளது. அவர்கள் அவருடைய சொந்த ஜனமாய் இருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருப்பார். 
(வெளி 21:3)

ஆசாரிப்புக் கூடாரம் தேவன் வாசம் பண்ணுகிற பரிசுத்த ஸ்தலம் ஆகும். 
இந்த ஆசாரிப்புக் கூடாரம் இந்த கடைசி காலத்தில் நாமே என்று ஞான அர்த்தமாய் சொல்லப்பட்டிருக்கிறது. 
நாமே தேவனுடைய பரிசுத்த ஸ்தலமாய் இருக்கிறோம். நமக்குள் தேவன் வாசம் பண்ணுகிறார். நாம் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து பயத்தோடு நடுக்கத்தோடு அவரை சேவித்து வாழ வேண்டும். 
கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை