உடன்படிக்கையின் இரத்தம்
உடன்படிக்கையின் இரத்தம்
(யாத் 24:8).
இரத்தம் தெளிக்கப்பட்டதன் மூலம், உடன்படிக்கை இஸ்ரவேலரோடு முத்திரையிடப்பட்டது. தேவனோடுள்ள தங்கள் உறவைக் காத்துக் கொள்ள ஒப்புரவாக்குதலின் பலிகள் தேவை என்பதை இது காட்டுகிறது.
1) இரத்தம் சுத்திகரிக்கப்படுவதற்கும், மன்னிக்கப்படுவதற்கும் அடையாளம். தேவனுக்கு ஒரு உயிர் பலியாக கொடுக்கப்படுவதன் மூலம் தான் இது சாத்தியம் . இத்தகைய பலிகள் தேவனோடு நம்மை ஒப்பரவாகச் செய்யும். இந்த விசுவாசத்தில் தான் மக்களின் கீழ்ப்படிதல் உண்டாகும். (ரோம 1:5;எபி 9:19,20;).
2) கிறிஸ்து தமது இரத்தத்தை கல்வாரிச் சிலுவையில் சிந்தி,
புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திய போது "இரத்தத்தின் மூலம் உடன்படிக்கை"என்பதன் முடிவான உட்கருத்து வெளிப்பட்டது.
(மாற் 14:24;எபி 9:11-18). அவருடைய தியாக பலியான மரணம் விசுவாசிகளைப் பாவம் நீங்கச் சுத்திகரிக்கிறது. அவர்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ தீர்மானிக்கும் போது இது நடக்கும்.
(1யோவா 1:7முதல் 2:2 வரை).
3) கீழ்படிதலும் இரத்தமும்
(யாத் 24:7,8;) இவை இரண்டும் எப்போதும் இணைந்தே காணப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவர் தமது மக்களையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் ஏற்றுக்கொள்வார். ஒப்புரவாக்குதலின் இரத்தத்தின் மூலம் மக்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்து, ஆசிர்வாதங்களில் பங்கு கொள்ள முடியும். அதே விதமாக அப்போஸ்தலனாகிய பேதுரு,
(1பேது 1:2)"கீழ்ப்படிதலுக்கும், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும்"தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் என்று எழுதுகிறான்.
அன்பு சகோதர, சகோதரிகளே
உடன்படிக்கை எதற்காக என்பதை நன்கு புரிந்து கொண்டோம் என்று அறிகிறோம்.
உடன்படிக்கை என்பது இரத்தத்தின் மூலமாக தேவனோடு ஒப்புரவாகுதல், பாவமன்னிப்பின் நிச்சயம், தேவனோடுள்ள உறவு புதுப்பித்தல் என அறிவோம்.
தொடர்ந்து தேவ கிருபையில் நிலைத்திருப்போம்.
தேவன் நம்மை ஆசிர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments