இயேசு கிறிஸ்துவே நம்முடைய வாக்குத்தத்தம்.

இயேசு கிறிஸ்துவே நம்முடைய வாக்குத்தத்தம்.

இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு சட்டத்தையும் தீர்க்கதரிசனகளையும் நிறைவேற்றும்போது, ​​அவர் வேதம் எதிர்பார்த்ததை உண்மையாக்கி, தேவன் வாக்குறுதி அளித்ததையும் முன்னறிவித்ததையும் அடைகிறார் (மத். 5:17; 11:13; லூக்கா 16:16; 24:44). உண்மையாகவே வேதத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் கிறிஸ்துவில் "ஆம்" (2 கொரி. 1:20), மேலும் பிதாவாகிய தேவன் விசுவாசிகளுக்கான ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அவரில் (இயேசு கிறிஸ்துவில்)உறுதிப்படுத்துகிறார் (கலா. 3:14; எபே. 1:3).

இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு பிதாவாகிய தேவனுக்கு பிள்ளைகளானவர்களுக்கு பிரதான வாக்குத்தத்தமே
" இயேசு கிறிஸ்து மாத்திரமே"
என்கிற சத்தியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லா வாக்கு தத்தங்களும் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேறி உள்ளது என்பதை நாம் முதலாவது புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பயன்படுத்த முடியும்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நாம் பயன்படுத்தாமல் நம்முடைய ஜெபமோ, பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களோ நம்முடைய வாழ்க்கையில் ஒருபோதும் நிறைவேறாது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

*இயேசு கிறிஸ்துவே நம்முடைய வாக்குத்தத்தம்.*

1) ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும்,
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும், 
இந்த உலகத்தின் முடிவு பரியந்தமும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று ஆயுள் வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்.
(மத் 28:19,20;)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு கூட இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்பதை இன்றைக்கும் அநேகர் அறியாமல் இருக்கிறார்கள்.
ஆகையால் தான் மாதந்தோறும் வாக்குத்தத்தம் என்ற பெயரில் ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறவர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.

2) இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் ஜெபிக்கும்போது பிதாவாகிய தேவன் குமாரன் மகிமையடையும் படியாக அதை நமக்கு தருவார். என்று இயேசு கூறினார்.
(யோவா 14:13-14; 15:16; 16:23-24,26)
உங்கள் சந்தோசம் நிறைவாய் இருக்கும் படிக்கு பெற்றுக் கொள்வீர்கள்.

3) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாம் கூடும்போது அவர் அங்கே நம்மோடு இருக்கிறார்.
(மத் 18:20)

4) இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே
வியாதிகளை குணமாக்குதல், பிசாசுகளை துரத்துதல்,
நவமான பாஷைகளை பேசுதல்,
(மாற் 16:17)

5)அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
(லூக்கா 24:47)

6) அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படிக்கு இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
(யோவா 20:31)

7) அவரை விசுவாசிக்கிறவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பு பெறுவான் என்று அறிந்திருக்கிறோம்.
(அப் 10:43)

8) அவருடைய நாமத்தினாலே அனுப்பப்படுகிற பரிசுத்த ஆவியானவர்.
(யோவா 14:26)

9) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரிக்கிறோம்.
(எபே 5:20;கொலே 3:17)

10) அவருடைய நாமத்தினாலே நமக்கு பலத்த பாதுகாப்பு.
(யோவா 17:11,12)

இதற்கு மேல் ஒரு கிறிஸ்தவனுக்கு என்ன வேண்டும். ?

!!!!!!!!!!!

இப்படிப்பட்ட வாக்குத்தத்தமாகிய
இயேசு கிறிஸ்து நாமத்தை பயன்படுத்தி பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தும் போது எவ்வளவோ மகிமையான காரியங்களை நாம் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை