ஸ்திரீகளும்.... தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும்...

ஸ்திரீகளும்....   தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும்.... தங்களை அலங்கரிக்க வேண்டும்.*
( 1தீமோ 2:10)

கிறிஸ்தவ பெண்கள் அடக்கமாக தெளிந்த புத்தியோடு தகுதியான உடை உடுத்திக் கொள்வது தேவனுடைய சித்தம். 

1) தகுதியான என்ற வார்த்தை (கிரேக்க மொழியில். எய்டோஸ்) சரீரத்தை வெளியே காட்டுவதில் உள்ள ஒரு வித வெட்கக்கேட்டை குறிக்கிறது. அது சரீரத்துக்கு நேராய் மற்றவர்கள் கவனத்தை இழுக்கும் படி பாயும். உடைக்கென்று சரியாக நியமிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறியும் உடை உடுக்க மறுப்பதைக் குறிக்கிறது. அடக்கத்தின் ஆரம்பம் ஒரு நபரின் இருதயத்தில் அல்லது உள்ளான குணாதிசயத்தில் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், அடக்கமானது, 
*ஒரு உள்ளத்தின் தூய்மையை வெளியே காண்பிக்கும் தன்மையாகும்.*

2) அடக்கமில்லாமல் உடுத்துவது மற்றவர்களில் அசுத்தமான ஆசைகளைத் தூண்டிவிடும். ஆகவே அது விபசார ஆசையை தூண்டிவிடும் தவறைப் போன்றதே. வேறு ஒருவரில் இச்சையை தூண்டிவிடும் வன்மம் சரீரத்தை வெளியே காட்டக்கூடிய அடக்கம் இல்லாத ஆடை அணிவதை எந்த செயலோ அல்லது நிலைமையோ நியாயப்படுத்த முடியாது 
(கலா 5:13;எபே 4:27;தீத் 2:11-12;
மத் 5:28)

3) அடக்கமான உடை அணிய வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுவதை கவனிக்காமல் உலகத்தின் வழக்கங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் எந்தச் சபையானாலும் அது பரிதாபத்துக்குரியது. 
பாலுறவு சுயாதீனமுள்ள இந்த நாட்களில் அடக்கம், தூய்மை, தெய்வபயத்துடனுள்ள கட்டுப்பாடு ஆகியவற்றின் மேலுள்ள ஆவியானவரின் விருப்பத்தைப் புறம்பே தள்ளி,
கேலி செய்யும் சீர்கேடான சமுதாயத்திலிருந்து வித்தியாசமாக சபை செயல்பட்டு ஆடை அணிய வேண்டும். (ரோம 12:1-2).

நன்றாக சிந்தித்துப் பாருங்கள் தேவனுடைய ஜனமே. தற்காலத்தில் மீடியாவில் வரும் கிறிஸ்துவ ஆண்களையும், பெண்களையும் பார்த்து நீங்களும் வஞ்சிக்கப்பட வேண்டாம். நீங்கள் உங்களை காத்துக் கொண்டு தகுதியான ஆடையை அணிந்து தேவனுக்கு பிரியமாக வாழ்ந்து காட்டுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை