அவர்களை ஆசீர்வதித்தார்.

*இயேசு கிறிஸ்து தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.*
(லூக்கா 24:50)

தம்மைப் பின்
பற்றுகிறவர்களின் வாழ்க்கைக்கு தேவனுடைய ஆசீர்வாதம் அவசியம் தேவை. 
தேவனுடைய ஆசிர்வாதத்தைப் பற்றி பரிசுத்த வேதாகமம் பல காரியங்களைப் போதிக்கிறது.

1)*"ஆசிர்வாதம்"* என்னும் சொல் (கிரே. யூலோஜியா கீழ்க்கண்ட பொருட்களைக் கொண்டது.)
அ) நம் வேலைகளை வெற்றியடையச் செய்யும் தேவனுடைய கிருபை வரம்.
(உபா 28:12)

ஆ) தேவனுடைய சமூகம் நம்மோடுயிருத்தல்.
(ஆதி 26:3)

இ) தேவன் தம்முடைய வல்லமை, பலம், உதவிகளை தருதல். 
(எபே 3:16; கொலோ 1:11)

ஈ) தேவன் நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்து நன்மையை உண்டு பண்ணுதல். (பிலி 2:13)

2) பழைய ஏற்பாட்டில் 
*"ஆசிர்வாதம்"*என்னும் பொருள் கொண்ட, இது சார்பான வார்த்தைகள் 400க்கும் மேற்பட்டு உள்ளன. 
மனித இனத்திற்கு தேவன் செய்த முதல் காரியம் அவர்களை ஆசீர்வதித்ததாகும். 
(ஆதி 1:28)
தேவன் ஆசீர்வதிப்பதன் மூலம் தமது கிரியையை நீடிக்கச் செய்கிறார். 
(எசே 34:26)
தேவனுடைய மக்களின் வாழ்க்கையும், வரலாறும்,*ஆசீர்வாதம்,*சாபம் இவை இரண்டாலும் பாதிக்கப்பட்டிருந்தன. 
(உபா 11:26).

3) புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பணி முழுவதையும் 
*"உன்னை ஆசீர்வதிப்பதற்காகவே தேவன் அவரை உன்னிடத்தில் அனுப்பியிருக்கிறார்."*என்னும் வாக்கியத்தில் சுருக்கி கூறலாம். (அப் 3:26)
*அவருடைய ஆசிர்வாதம் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டதை அறிவோம்.*
(மாற் 10:13-16)
அவர் பூமியிலிருந்து பரமேறுவதற்கு முன் தம்மைப் பின்பற்றினவர்களை 
*ஆசீர்வதித்தார்.*
(லூக்கா 24:50,51)
அப்போஸ்தலர்களுடைய வாழ்க்கையிலும் 
*"ஆசீர்வாதம்"*முக்கிய பங்கு வகித்தது. 
(ரோம 15:29).

4)*தேவனுடைய ஆசீர்வாதம் நிபந்தனைக்குட்பட்டது. தேவனுடைய பிள்ளைகள் ஒரு தீர்மானம் செய்ய வேண்டும். கீழ்படிந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வதா? கீழ்ப்படியாமையிலிருந்து சாபத்தைப் பெற்றுக் கொள்வதா?
(உபா 30:15-18;எரே 17:5,7).

5) நாம் தேவனுடைய ஆசிர்வாதத்தை எப்படிப் பெற்றுக் கொள்கிறோம்?

அதற்கு மூன்று காரியங்கள் தேவை
1} நம்முடைய ஊழியம், வேலை, குடும்பம் ஆகியவை ஆசீர்வதிக்கப்பட நாம் எப்போதும் கிறிஸ்துவையே நோக்கிப் பார்க்க வேண்டும்.
(எபி 12:2)
2} நாம் அவரை விசுவாசித்து, நேசித்து அவருக்குக் கீழ்படிய வேண்டும்.
(மத் 5:3-11;24:45,46;வெளி 1:3;
16:15; 22:7)
3} ஆசிர்வாதத்தைத் தடை செய்கிற அனைத்தையும் நம் வாழ்க்கையிலிருந்து நீக்கி போட வேண்டும்.
(ரோம 13:12; எபே 4:22; எபி 12:1)

6) தேவனுடைய ஆசீர்வாதத்தை, உம்முடைய தனிப்பட்ட பொருளாதார லாபங்கள் அல்லது நம் வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாமல் இருத்தல் ஆகியவற்றோடு சம்பந்தப்படுத்த கூடாது. 
(எபி 11:37-39;வெளி 2:8-10)

ஆசிர்வாதங்களை பெற்றுக் கொள்வதற்கு தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை நேசித்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டாலே போதுமானது. ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை