பரிசுத்த ஆசாரிய கூட்டம்.

 பரிசுத்த ஆசாரிய கூட்டம்.


பழைய ஏற்பாட்டில் முறையான தகுதியினை உடைய ஒரு சிறு கூட்டத்தினரே ஆசாரியகளாய் காணப்பட்டார்கள். அவர்களுக்கென்று நியமிக்கப்பட்ட பிரத்தியட்சமான வேலை என்னவெனில், ஜனங்களின் சார்பாக தேவனிடத்தில் பலிகளை செலுத்துதல் மற்றும் தேவனோடு நேரடியாக உரையாடுதல் ஆகியவைகளே ஆகும்.

(யாத் 28:1; 2நாளா 29:11)

ஆனால் இப்பொழுதோ இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒவ்வொரு விசுவாசியும் தேவனுக்கு முன்பாக பிதாவாகிய தேவனை நேரடியாக தொழுது கொள்ளும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறது.

இந்த சிலாக்கியத்தை வைத்துக் கொண்டு நாம் அதற்காக ஆசாரியர்களாக எண்ணி விடக்கூடாது. 


1)ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருகையின் போது எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் தான், தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாக்கப்படுவார்கள். 

(வெளி 1:6; 5:10;20:6 ஐ வாசித்தால் உண்மை தெளிவாகும்) 

சிலர் இப்பொழுதே ஆசாரியர்களும் நாங்களே 

ராஜாக்களும் நாங்களே என்று பாடுகிறார்கள். 

ஆனால் இயேசு கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 

(1தெச 5:23 இல் சொல்லப்பட்டது போல)

இன்னும் ஒரு சிலருக்கு பரலோகத்திற்கு போன பின்பு என்ன நடக்கும் என்பதை அறியவில்லை, அறிந்து கொள்ளவும் விரும்பவில்லை, ஆகையால் தான்  உலக இன்பத்தையும் உலகத்தில் வருகிற சந்தோஷத்தையும் விரும்புகிறார்கள், 

தேவன் இவர்களுக்காக உண்டு பண்ணி வைத்ததை இவர்கள் அறிய விரும்பவில்லை. (1கொரி 2:9)

ஆகையால் விசுவாசிகள் இயேசு கிறிஸ்து மூலமாக பிதாவாகிய தேவனை நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும். 

(புனிதர்கள் வழியாக மற்றும் பூமியிலுள்ள ஊழியர்கள் மூலமாக தொடர்பு கொள்ள முடியாது, தொடர்பு கொள்ளவும் கூடாது.

தேவனுக்கு மட்டுமே நீங்கள் பங்காளர்களாக இருக்க வேண்டும்)


2) இந்த ஆசாரியத்துவத்தில் பங்கு பெற விரும்புகிறவர்கள், 

பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும். இது அனைத்து விசுவாசிகளிடமும் தேவன் எதிர்பார்க்கிறார். 

தீட்டுள்ள ஒன்றும் அதில் பிரவேசிக்காது. 

(வெளி 21:27)


3) தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாக விரும்புகிறவர்கள், 

அனைத்து விசுவாசிகளும் தேவனுக்கு "ஆவிக்குரிய பலிகளை"  செலுத்துதல் வேண்டும்.

அதாவது....

அ) இப்பிரஞ்சபத்திற்கு ஒத்த 

வேஷந்தரியாமல் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழுதல்.(ரோமர் 12:1-2)


ஆ) கிறிஸ்து இயேசு இயேசு மூலமாக தேவனிடத்தில் ஜெபித்தல் மற்றும் அவரைத் துதித்தல்.(சங் 50:14;எபி 13:15)


இ) முழு இருதயத்தோடும், முழு மனதோடும் தேவனைச் சேவித்தல்,(1நாளா 28:9;எபே 5:1-2; பிலி 2:17)


ஈ) நற்கிரியைகளை செய்தல் 

(எபி 13:16)


உ) உலகப் பொருட்களை தேவனுக்குக் கொடுத்தல் .

(ரோமர் 12:13; பிலி 4:18) மேலும்...

ஊ) நீதியின் ஆயுதமாக அல்லது கருவிகளாக நம்முடைய சரீரங்களை தேவனிடத்தில் அர்ப்பணித்தல். (ரோமர் 6:13,19) ஆகியவையாகும்.


4) அனைத்து விசுவாசிகளும் ஒருவருக்காய் ஒருவர் மற்றும் எல்லா தேவ ஜனங்களுக்காகவும் தேவனிடத்தில் பரிந்து பேச வேண்டும்.

(கொலே 4:12; 1தீமோ 2:1 வெளி 8:3)


5) அனைத்து விசுவாசிகளும் வேத வசனத்தைப் பிரசித்திப் படுத்தி அதன் பலனுக்காக ஜெபித்தல் வேண்டும். 

(1பேது 2:9; 3:15;அப் 4:31;1கொரி 14:26; 2தெச 3:1)


6) அனைத்து விசுவாசிகளும் ஞானஸ்நானத்தினாலும், கர்த்தருடைய பந்தியிலும் பங்கு பெறுதல் வேண்டும். 

(மத் 28:19;  லூக்கா 22:19).


உயிர்த்தெழுதலில் பங்கு பெற வேண்டுமானால் மேலே👆 சொல்லப்பட்ட எல்லாவற்றையும் நாம் கடைபிடிக்க வேண்டும்.

அதுமாத்திரமல்ல இந்த கிறிஸ்துவ வாழ்க்கையில் முடிவு பரியந்தமும் நிலைநிற்க்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்தெழும்போது 

நம்மை இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாக, ராஜாக்களாக ஆக்குவார். 

கிறிஸ்துவுக்குள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லது வாழ விரும்பும் ஒவ்வொருவரும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டும். 

அவருடைய திரு விருந்தில் நாம் பங்கு பெற்று இருக்க வேண்டும். 

அவரோடு கூட ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும். 

இயேசு கிறிஸ்துவின் பெயரால் பிதாவாகிய தேவனோடு நேரடியாக உறவு கொண்டிருக்க வேண்டும். 

முழு இருதயத்தோடும் முழு மனதோடும் அவரை துதித்து மகிமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 

ஒவ்வொரு நாளும் நாம் பரிசுத்தம் ஆகி கொண்டே இருக்க வேண்டும். 

இப்படி இருந்தால் மாத்திரமே நாம் வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவோம். 

ஆகையால் உங்கள் வாழ்வை ஆராய்ந்து பாருங்கள். 

நம்மை சரி படுத்தும் படி கர்த்தர் நீண்ட ஆயுளை தந்து இருக்கிறார். என்பதை நினைவு கூறுங்கள். 

என்றோ மரிக்க வேண்டிய நாம் இன்னும் வாழ்கிறோம் என்றால் நம்மை சரி செய்யவே என்பதை புரிந்து கொள்ளுங்கள். கீழ்படிந்து நடங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை