கிறிஸ்துவின் ஜெபம்

எல்லா விசுவாசிகளுக்குமான கிறிஸ்துவின் ஜெபம்

(யோவா 17:1)


தம் சீஷருக்காக இயேசு செய்த இந்த கடைசி ஜெபம், முன்னரும், போதுமுள்ள தம்மை பின்பற்றுபவர்கள் மேல் ஆண்டவருக்கிருக்கும் ஆசைகள், ஏக்கங்களைக் காட்டுகிறது. 

எப்படி ஒவ்வொரு போதகரும் தன் சபை மக்களுக்காக ஜெபம் பண்ண வேண்டும் என்றும், ஒவ்வொரு கிறிஸ்தவ பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக ஜெபம் பண்ண வேண்டும் கற்பிக்க ஆவியானவரால் அருளப்பட்ட முன்மாதிரியாகும். 

நம் பொறுப்பில் உள்ள மக்களுக்கு நாம் ஜெபிக்கும் போது நமது பெரிய பாரம். கீழ்க்கண்ட காரியங்களைக் குறித்ததாக இருக்க வேண்டும்.


1) அவர்கள் இயேசு கிறிஸ்துவையும், அவர் வார்த்தையையும் நெருங்கிய அன்போடு அறிந்திருக்கும்படியாகவும் 

(யோவா 17:2-3,17,19,)


2) உலகத்திலிருந்தும், விழுதலிலிருந்தும், சாத்தான், தீமை, தவறான போதனைகளில் இருந்தும் தேவன் அவர்களைப் பாதுகாக்கும் படியாகவும், 

(யோவா 17:6,11,14-17);


3) கிறிஸ்துவின் சந்தோஷத்தை எப்போதும் நிறைவாய் அடையும் படியாகவும். (யோவா 17:13)


4) அவர்கள் சிந்தனையில், செயலில், நடத்தையில் பரிசுத்தமாயிருக்கும் படியாகவும் (யோவா 17:17)


5) அவர்கள் ஒன்றாயிருக்கும் படியாகவும் (யோவா 17:11,21-22;)


6) அவர்கள் மற்றவர்களைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தும்படியாகவும். 

(யோவா 17:21,23);


7) அவர்கள் விசுவாசத்தில் விடாமுயற்சியோடு இருந்து கடைசியில் பரலோகத்தில் கிறிஸ்துவோடிருக்கவும் 

(யோவா 17:24)


8) அவர்கள் எப்போதும் தேவனுடைய அன்பிலும், பிரசன்னத்திலும் நிலைத்திருக்கும் படியாகவும், 

(யோவா 17:26) ஜெபிக்க வேண்டும். 

ஒவ்வொறு திருச்சபை போதகர்களும் இவ்வாறு செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். அதை நிறைவேற்றி முடிக்க பிரயாசப்படுங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை