ஸ்திரீயானவள் ..

ஸ்திரீயானவள் பிள்ளைப் பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

(தீமோ 2:15)


பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலமாக கூறுவது பொதுவாக, பெண்கள் தேவனிடத்திலுள்ள விசுவாசத்தினாலும், தங்கள் சிருஷ்டிகரால் தங்களுக்கு கொடுக்கப்பட்டது செயல் திட்டங்களை ஏற்றுக்கொண்டாலும் இரட்சிக்கப்படுவார்கள்.


1) வீட்டில் தெய்வ பக்தியுள்ள மனைவியாகவும், தாயாகவும் இருப்பதே பெண்களுக்குரிய மிக உயர்ந்த பதவியும், உண்மையான கனமுமாகும்.

கிறிஸ்துவ மனைவியாகவும், தாயாகவும் இருந்து பிள்ளைகளைப் பெறுங்கள் 

(1தீமோ 5:14) அவர்களை நேசித்து (தீத் 2:4) அவர்களை தேவனுக்கு மகிமையாக, கிறிஸ்துவைப் போல வாழும்படி வளர்த்து, தன் இரட்சகரிடம் தொடர்ந்து எப்போதும் உண்மையானவர் விசுவாசத்தோடு இருப்பதை விட (1தீமோ 2:15) மேலான சந்தோஷம், உள்ளான மகிழ்ச்சி, ஆசீர்வாதம் அல்லது மேன்மை அவளுக்கு வேறெதுவும் இருக்க முடியாது.(2தீமோ 1:5; 3:14-15;)


2) பிள்ளை பெறுதனாலுண்டாகும் கணமும் மேன்மையும் கிறிஸ்தவரால் அற்பமாக எண்ணப்படக்கூடாது.

மரியாளின் பிள்ளை பேறுதான் உலகத்துக்கு இரட்சிப்பு கிடைக்கும் வாய்க்காலாக மாறினது.

(ஆதி 3:15; மத் 1:18-25)


3) பெண்களுக்கான தேவனுடைய நோக்கத்தை விட்டுக் கொடுத்து அல்லது புறக்கணித்து அவ்வாறு கிறிஸ்தவ குடும்பம், வீடு, தாய்மையை, அற்பமாயென்னும் சமுதாயம், கலாச்சாரம், திருச்சபைகள், நாளடைவில் தங்கள் திருமணங்கள், குடும்பங்கள் சமுதாயத்தில் பிரிவினைகளை அனுபவிக்கும். (2தீமோ3:3)

(கடைசி நாட்களில் மிக அதிக அளவில் வெல்லம் போல் வரும் தெய்வ பக்தியற்ற தன்மையை எதிர் நோக்க விசுவாசிகள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

அ) சாத்தான் குடும்பத்திலே பெரிய அழிவை கொண்டு வருவான் என்று ஆவியானவர் பவுல் மூலமாக தீர்க்கமாக உரைக்கிறார்.

"பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும்"

(2தீமோ 3:2) ஆண்களும் பெண்களும் "அன்பற்றவர்களாகவும்" இருப்பார்கள்.(கிரே. அஸ்டர்காய்)

இது "குடும்பத்தில் அன்பு இல்லாமல்" என்று மொழிபெயர்க்கலாம். இயற்கையாகவே உள்ள மேன்மை, அன்பு ஆகிய உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது. தன் பிள்ளைகளைப் புறக்கணிக்கும் அல்லது தன் குழந்தையைக் கொலை செய்யும் தாய், தன் குடும்பத்தைக் கைவிட்டு விடும் தகப்பன் அல்லது தங்கள் வயதான பெற்றோரை கவனிப்பதில் அசட்டையாக இருக்கும் பிள்ளைகளின் செயல் முறைகளிலிருந்து இது தெரிய வருகிறது. 

(லூக் 1:17)


4) கிறிஸ்தவ பெண்களுக்கு ஆவியானவரால் அளிக்கும் போதனை, திருமணம் செய்து கொள்ளாத அல்லது பிள்ளைகள் பெற முடியாத பெண்களை சிறுமைப்படுத்துவதற்காகக் கூறப்பட்டதல்ல. அப்படிப்பட்ட பெண்களின் விசுவாசம், அன்பு, பரிசுத்தம் குடும்பப் பெண்களுடையது போலவே பெரிதாயிருக்கும்.

(1கொரி 7:34).


அன்பான சகோதரிகள். இந்த சத்தியங்களை தெளிவாக வேதத்தின் துணை கொண்டு

வாசித்து புரிந்து கொண்டு ஞானமாய் செயல்படுவோம். 

கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக. ஆமென். 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை