பரிசுத்த ஆவியும், நானும் நிறைந்து.
பரிசுத்த ஆவியும், நானும் நிறைந்து.
பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிறைந்து, அதில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான நற்சாட்சி பெற்றவர்களாய் அந்த ஏழு பேர் இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் கூறினார்கள்.
விசுவாசிகளில் பலர் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பூரணமாய்ப் பெறவில்லை என்று அப்போஸ்தலர்கள் கருதினார்கள். பரிசுத்த ஆவியிக்கு உண்மையாக வாழாதவர்கள், (கலா 5:16-22), பரிசுத்த ஆவியின் நிறைவை இழந்து விடுவார்கள். பரிசுத்த ஆவியினால் நிறைந்து"அல்லது"பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு"என்னும் சொற்றொடர்கள் குறித்து கீழ்க்கண்ட காரியங்களைக் கவனிக்க வேண்டும்.
1)"பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு"இந்தச் சொற்றொடர் மூன்று வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
அ) பரிசுத்த ஆவியில் ஒருவர் ஞானஸ்நானம் பெறுவதைக் குறிக்கிறது (அப்1:5;2:4;9:17;11:16)
ஆ) ஒரு விசுவாசி அல்லது விசுவாசிகள் ஒரு இடத்தில் பேச பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் முன் வரும்போது வல்லமையினால் நிரப்பப்படுவதை காட்டுகிறது. (அப் 4:8;13:19;லூக் 1:41-45;67-79)
இ) பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் அல்லது அபிஷேகத்தால் ஒரு தீர்க்கதரிசன ஊழியம் நடத்த வேண்டுமென்று, அந்த ஊழியம் எவ்வளவு நேரம் நடைபெறும் என்பது திட்டமாகக் கூறப்படாமல் குறிப்பிடுவது.(அப் 4:31-33;13:52; லூக் 1:15).
3) பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற பின்னர், உண்மையாக ஆவியின் வழியில் நடக்கும் நபர்கள், தங்கள் சரீரத்தின் பாவ செயல்களை முற்றிலும் அழித்து விட்டவர்கள்,(ரோம 8:13,14;)"பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள்"என்று சொல்லப்படலாம். அதாவது இவர்கள் ஆவியின் நிறைவைத் தங்கள் வாழ்க்கையில் காத்துக் கொண்டவர்கள்.(உதாரணமாக அந்த ஏழு பேர். அவர்களில் சிறப்பாக ஸ்தேவான் 4:3,5; 7:55. அல்லது பர்னபா 11:24). மேலும் பரிசுத்த ஆவியின் நிறைவை காத்துக் கொள்ளுகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக மீண்டும் பரிசுத்த ஆவினால் நிரப்பப்படுவார்கள். சிறப்பாக ஒரு தெய்வீக வரத்துடன் பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் பேசுவதற்காக ஒரு புது அபிஷேகத்துடன் நிரப்பப்படுவார்கள்.
மறுபடியும் மறுபடியும் நீங்கள் தேவ ஆவியினால் நிரப்பப்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.
அந்தந்த காலகட்டத்தில் உங்களுடைய வாழ்க்கையில் தேவனுக்காக பேசுவதற்கு ஒரு புது அபிஷேகத்துடன் நிரப்பப்படுவீர்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Comments