திறப்பின் வாசல்

தேசத்திற்காக திறப்பின் வாசலிலே நிற்கிறவர்கள் கவனிக்க வேண்டியது.


அதிகாலையில் ஒவ்வொரு விசுவாசியும் தேவனை தேட வேண்டும். தனிப்பட்ட விதத்திலோ அல்லது குடும்பமாகவோ ஜெபிக்க வேண்டும்  அதை தேவன் ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கிறார். 

(நீதி  8:17; மாற் 1:35)


அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திலும் இரவு தேவ சமூகத்தில் குடும்பமாக ஜெபிக்க வேண்டும். வேத வசனத்தை தியானிக்க வேண்டும்.

ஆனால் ஜெபிக்கலாம் வாங்க, திறப்பிலே நிற்க வாங்க என அழைத்தால் அவர்களுடைய குடும்பத்தில் காணப்படுகிற ஜெப ஜீவியமும் சீக்கிரமாய் அழிந்து போகும் அபாயம் உள்ளது.

என்பதை கருத்தில் கொள்ளாதது ஏனோ !,?.


1) தேசம் , மாநிலங்கள், மாவட்டம், பட்டணம், கிராமம், என்று சொல்லுகிறீர்களே, இவைகளுக்கு என்ன நடக்கப் போகிறது விவரமாக சொல்லுங்கள்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுகிறதாக இருந்தால் (மத் 28:19-20; ரோம

10:14,15;1கொரி 9:16) இதைச்  செய்ய முயற்சி செய்யவில்லை. 


2) தேசம் அழியப் போகிறதா 

அல்லது திருச்சபைகள் அழிய போகிறதா ?

சபையில் உள்ளவர்கள் இரட்சிப்பின் அனுபவம் இல்லாமல், பாவத்தை குறித்த அறிவு இல்லாமல், தேவன் செய்த அற்புத அடையாளங்களை குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கும் போது.....

*முதலாவது ஜெபம் யாருக்கு தேவை ?*


*ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனுக்கு உண்மையாக இருந்தாலே தேசம் சேஷமமாக மாறிவிடும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன ?.


கர்த்தருடைய வார்த்தையை கவனிப்போம். 

1)*என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்.*


 2)*தங்களைத் தாழ்த்தி,* 


3)*ஜெபம்பண்ணி,*


4)*என் முகத்தைத் தேடி,*


5) *தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால்,* 


6)*அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு,*


7) *அவர்கள் பாவத்தை மன்னித்து,* 


*அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.*


ஒவ்வொரு திருச்சபை போதகர் முதல் விசுவாசிகள் வரை இந்த வசனத்தின் படி தங்களை சரி படுத்திக் கொண்டாலே இந்த தேசம் சேஷமமாக மாறிவிடும்.


ஆகையால் மாற்றம் என்பது சபைக்கே தேவை. 

இயேசு கிறிஸ்து ஆலயத்தை(சபையை) சுத்திகரித்தார்.

மாற்றத்தை விரும்புகிற ஒவ்வொருவரும் உங்களுக்கு திருச்சபையை கவனித்து பாருங்கள். சரி செய்ய வேண்டியதை சரி செய்யும் முயற்சி செய்யுங்கள். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 








Comments

Anonymous said…
Super

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை