கைகளை வைத்தார்கள்

 அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள். 

(அப் 6:6)


புதிய ஏற்பாட்டில் "கைகளை வைத்தல்"ஐந்து வகையாகச் செய்யப்பட்டது‌.

1) குணமாக்கும் சந்தர்ப்பங்களில் பிணியாளிகள் அல்லது ஊனமுற்றவர்  மேல் (அப் 28:8;மத் 9:18; மாற் 5:23; 6:5)


2) மற்றவர்களை ஆசிர்வதிக்கும் போது 

(மத்19:13,15)


3) பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறும் போது 

(அப் 8:17,19; 19:16)


4) ஒரு குறிப்பிட்ட வேலைக்காக ஒருவனை அபிஷேகம் செய்யும்போது 

(அப் 6:6;13:3)


5) மூப்பர்கள் ஆவிக்குரிய வரங்கள் ஒருவருக்கு அருளப்படும்போது (1தீமோ4:14)

ஆதித்திருச்சபையில் கைகளை வைத்தல் ஒரு அடிப்படை கொள்கை ஆயிற்று. தேவன் மற்றவர்களுக்கு ஆசிர்வாதங்களையும், வரங்களையும் கொடுப்பதற்குக் கையாளும் பல வழிகளிலொன்று மத்தியஸ்தமாக இருந்து மக்கள் மேல் கைகளை வைப்பதாகும். (ஏபி 6:2) இது ஜெபத்திலிருந்து பிரிக்கப்படக்கூடாது. ஏனெனில் ஜெபத்தினாலாவது கிருபை வரங்களும், குணமாக்குதலும், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானமும் எல்லாம் தேவனிடமிருந்து வருகின்றன என்பதையும் அவற்றிற்காகத் தலைமேல் கைகளை வைக்கும் ஊழியர்களிடமிருந்தல்ல என்பதையும் காட்டும்.


ஏழு மனிதர்களைப் பரிசுத்தப்படுத்தி, அபிஷேகம் செய்தல் இரண்டு காரியங்களைக் காட்டின.

1) திருச்சபை கொடுத்த ஒரு வெளிப்படையான சாட்சி இந்த ஏழு மனிதர்களும் தேவ பக்தி, உண்மை, விசுவாசம், ஆவியின் வழிநடத்தல், ஆகியவற்றைப் பெற்றவர்களாக இருந்தார்கள்.(1தீமோ 3:1-10)


2) தேவனுடைய பனிக்கென்று அவர்கள் அர்ப்பணிக்கும் ஒரு மேலும், தேவனுடைய அழைப்பை ஏற்று, முழு விருப்பத்துடன் அந்த ஏழு பேரும் ஒப்புக் கொண்டதற்கு ஒரு சாட்சியாகும்.


இதில் நாம் ஒருசத்தியத்தை கற்றுக் கொள்கிறோம்.

நம் மீது கைகளை வைக்கும் போது தேவனுடைய ஊழியக்காரனிடத்திலிருந்து நமக்கு வரங்கள், வல்லமைகள், அபிஷேகம், கொடுக்கப்படவில்லை. என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

இன்னைக்கு வரங்கள் உள்ள ஊழியர்களை தேடி ஓடி அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வரும் புரிந்து கொள்ள வேண்டும். 

எல்லாமே தேவனால் நமக்கு இவர்கள் மூலமாக கொடுக்கப்படுகிறதே அன்றி வேறொன்றுமல்ல 

ஆகையால் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை