யூகித்தல்
யூகித்தல் (கணிப்பு)
*********************
ஒரு சில வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன். +2 தேர்வு எழுதிய மாணவன் exam result வரும் முன்னால் fail ஆகி விடுவோமோ என்று தற்கொலை செய்து கொண்டான். Result வந்த போது 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து pass ஆகி இருந்தான். அவன் தற்கொலை செய்ய காரணம் தவறாக யூகித்த (நினைத்த) காரியம் ஆகும்.
இதே போல் வேதத்தில் அநேகர் தவறாக யூகித்து நஷ்டம் அடைந்தார்கள். அதில் சில பேரை நாம் இங்கு காண்போம்.
1) சிறைசாலைக்காரன்: அப்.16:27,28. பவுலும், சிலாவும் ஒடிப் போனார்கள் என்று *எண்ணி* ( யூகித்து) பட்டயத்தை உருவி தன்னை கொலை செய்து கொள்ள போனான். பவுலும் சிலாவும் சிறையில்தான் இருந்தார்கள். பாருங்கள்! தவறுதலாக யூகித்தல் சிறைசாலைக்காரனை தற்கொலைக்கு நேராக வழி நடத்தியது.
2) மரியாள்: மரியாள் இயேசுவை தோட்டக்கார்ர் என்று *எண்ணினாள்* ( யூகித்தாள்) (யோ 20-15). அதன் விளைவு கண்ணீர்.
3) ஏலி: 1 சாமு 1-13. அன்னாள் குடித்து வெறித்திருக்கிறாள் என்று ஏலி *நினைத்தான்* ( யூகித்தான்). அதன் விளைவு ஏலி அறியாமைக்குள் நடத்தப்பட்டான்.
4) சிஷர்கள்: சிஷர்கள் கடலில் நடக்கிற இயேசுவை ஆவேசம் ( பேய்) என்று *எண்ணினார்கள்*
( யூகித்தார்கள்). (மாற்கு 6-49). அதன் விளைவு கலக்கமடைந்தார்கள் அலறினார்கள்.
5) இயேசுவின் தாயும், தகப்பன் யோசேப்பும்
(லூக் 2-44.) இயேசு பிரயாணக்கார்ரின் கூட்டத்தில் இருப்பார்கள் என்று *நினைத்தார்கள்* ( யூகித்தார்கள்). இதனால் துன்பம் அடைந்தார்கள்.
6) சிம்சோன் மாமனார்: சிம்சோன் இடம் "நீ அவளை பகைத்து விட்டாய் என்று *எண்ணி,*( யூகித்து) அவளை உன் சிநேகிதனுக்கு கொடுத்து விட்டேன்"
(நியாதி 15-2) என்றான். இதன் விளைவு? கோபம் அடைந்த சிம்சோன் 300 நரிகளை பிடித்து அதன் வாலில் தீ பந்தங்களை கட்டி பெலிஸ்தர் வெள்ளாண்மையில் ஒட விட்டு நஷ்டத்தை ஏற்படுத்தினான். சிம்சோன் மாமனார் தவறாக எண்ணியதன் விளைவை பார்த்திர்களா?
7) உயிர்த்தெழுந்த இயேசு சிஷர்கள் நடுவே நின்ற போது ஒரு ஆவியை ( பிசாசை) காண்பதாக *நினைத்தார்கள*் ( லூக் 24-37). அதன் விளைவு சிஷர்கள் கலங்கினார்கள், பயந்தார்கள்.
8) ஆதி 26-7 ஆபிரகாம் தன் மனைவியின் நிமித்தம் தன்னை கொலை செய்வார்கள் என்று *எண்ணினான்*. அதனால் பயம் உண்டானது.
9) மோசேக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை என்று யூகித்து தங்களுக்கு முன்பாக செல்லக்கூடிய கன்று குட்டி தெய்வத்தை உண்டாக்கினார்கள்.
(யாத் 32:1 - 5)
இதனால் அநேகர் அழிக்கப்பட்டார்கள்.
(யாத் 32:35)
ஆகையால் தேவனுடைய ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் யூகித்தல் மற்றும் கணித்தல் தவறான காரியங்களில் முடியும் என்பதை புரிந்து கொள்ள சில சம்பவங்களை மேற்கோள்களாக காட்டியுள்ளேன்.
சிலர் யூகித்து அல்லது கணித்து தன்னை தீர்க்கதரிசியாக காட்டுகிறவர்களும் உண்டு.
சிலரிடம் நாம் நெருங்கி வரும் போதே அவர்கள் நம்மை கணித்து விடுவார்கள். அதில் தவறாக கணிப்பதும் உண்டு. அது பேராபத்தில் முடியும்.
சில விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா
Comments