ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்

அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்.

(அப் 4:31)

இங்கே பல முக்கியமான உண்மைகள் வெளிப்படுகின்றன.

1) பரிசுத்த ஆவியில் அல்லது பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுதல். 

அப் 1:5) என்னும் சொற்றொடர், கிறிஸ்துவைப் பற்றி விசுவாசிக்கும்படி சாட்சி கூறுவதற்க்காக அவனைத் தெய்வீக வல்லமைக்குள் வழி நடத்தும் படி அவனைப் பரிசுத்தப்படுத்தும் வேலையைக் குறிக்கிறது.

நிரப்பப்படுதல், மூடப்படுதல், வல்லமை கொடுக்கப்படுதல் என்பவை ஊழியத்துக்காக அவர்களை ஆயத்தப்படுத்துவதைக் குறிக்கின்றன.

(அப் 2:4; 4:8,31; 9:17; 13:9,52) தேவைப்படும்போது மீண்டும்

"நிரப்பப்படுதல்"நடைபெறும்.


2)"ஆவியை ஊற்றுதல்" என்னும் சொற்றொடர்

(அப் 2:17,18;10:45) "பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றுக் கொள்ளுதல்"(அப் 2:38:8:15)

"அவர்கள் மேல் பரிசுத்த ஆவி வருதல்"(அப் 8:16;10:44;11:15;19:6) இவையெல்லாம் விசுவாசிகள் "பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுதலை" க் குறிக்கும் 

பல்வேறு சொற்றொடர்களாகும்.

(அப் 2:4; 4:31; 9:17;)


3) ஏற்கனவே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட சீஷர்கள்.(அப் 2:4) உட்பட எல்லா விசுவாசிகளும் யூதர்களின் எதிர்ப்பைப் பேசுவதற்காக இப்பொழுது புதிதாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்.(அப் 4:29)

பரிசுத்த ஆவியில் ஞான ஸ்நானம் பெற்றவர்கள் மீண்டும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுதல் தேவனுடைய சித்தம். அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிலாக்கியம். (அப் 4:8,31;13:52)

இவ்விதமாக ஆவியினால் நிரப்பப்படுவதை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் நாட வேண்டும்.


4) பரிசுத்த ஆவியானவர் இங்கு ஒரு முழு திருச்சபையையும் சந்திக்கிறார். திருச்சபைக்குறிய தேவ சித்தத்தை நிறைவேற்ற தனிநபர்கள் ஆவியினால் நிரப்பப்படுவது மட்டுமல்லாமல் (அப் 4:8;9:17;13:9), திருச்சபை முழுவதுமே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும்.

(அப் 2:4;4:31; 15:33) புதிய சவால்களும், பிரச்சனைகளும் தோன்றும்போது அவற்றை ஊக்கத்துடன் சந்திக்க முழு திருச்சபையும் அடிக்கடி ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். 


5) பரிசுத்த ஆவி சபை மக்கள் எல்லோரிடத்திலும் புது அபிஷேகத்தோடு அசைவாடும் போது கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி கூறுவதில் தைரியமும், வல்லமையும் உண்டாகும். ஒருவரோடொருவர் அன்பும் கூறுவார்கள். நிறைவான தேவ கிருபை எல்லாருக்கும் கிடைக்கும். 


6) பரிசுத்த ஆவியானவரால் விசுவாசி நிரப்பப்பட்டிருப்பதால் தேவ சமூகம் அவனுடன் தங்கியிருப்பது, அவனது உள்ளத்தில் ஆவியின் வல்லமை விளங்குவது, அவனது உள்ளத்திலிருந்து மற்றவர்களைக் குறித்த பயத்தைப் போக்கி, தேவ வசனத்தை அல்லது தேவ செய்தியைத் தைரியமாக அறிவிக்கிறது.(அப் 4:31)


7) மிகுந்த பலமாய் சாட்சி கொடுத்தார்கள். 'மிகுந்த பலம்'என்பது அப்போஸ்தல பிரசங்கம், சாட்சி கொடுத்தல், இவற்றின் தனிப் பண்பு ஆகும்.(அப் 1:18) இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. 


அ) அப்போஸ்தலர்கள் கொடுத்த சாட்சி தேவனுடைய வார்த்தைகளை ஆதாரமாகக் கொண்டது. (அப் 4:29) அது பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டது என்ற திட்டவட்டமான நம்பிக்கையையும் கொண்டுள்ளது.


ஆ) உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே தங்களை நியமித்து இப்பணிக்காக அனுப்பியுள்ளார் என்பது சீஷர்களின் நினைவில் எப்போதும் இருந்தது.


இ) சீஷர்கள் மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் (அப் 4:31) தனி நபர்களின் பாவங்களைக் குறித்தும், கிறிஸ்துவின் நீதியைப் பற்றியும், தேவனுடைய நியாயத் தீர்ப்பை பற்றியும் நற்செய்தியை கேட்டவர்களிடம் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. (யோவா 16:8)


தேவனுடைய ஊழியர்கள் தேவனுடைய சபை ஒவ்வொரு நாளும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும். பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். 

தேவன் என்னை தன்னுடைய வேலைக்காக அழைத்துள்ளார் என்கிற நினைவு எப்பொழுதும் இருக்க வேண்டும். 

ஒரு ஊழியனைப் பற்றி பேசுவதற்கு....

நாம் போகும் சபையை பற்றி பேசுவதற்கு...

நாம் அழைக்கப்படவில்லை. 

நான் கிறிஸ்துவைப் பற்றி பேசுவதற்கு அழைக்கப்பட்டு இருக்கிறோம் .

அவர் உயிர்த்தெழுந்தார் அவர் இன்றும் உயிரோடு இருக்கிறார் என்பதை பேசுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம். என்பதை மறவாமல் இருப்போம்.

இன்றைக்கு அநேக விசுவாசிகள் தங்கள் ஊழியர்களை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள். 

தங்கள் சபைகளைக் குறித்து பெரிதாகப் பேசி வருகிறார்கள். 

இது கிறிஸ்துவின் சுவிசேஷம் அல்ல இது வேறொரு சுவிசேஷம் இது வேறொரு இயேசு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவனுக்கு உண்மையாக வாழ முடியும். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை