அவர்களை அனுப்பினார்கள்

 அவர்களை அனுப்பினார்கள். 

(அப். 13:3)

இந்த பகுதியில் இருந்து 

"பூமியின் கடைசி பிரியந்தமும்" நற்செய்தி அறிவிக்கும் பணி தொடங்குகிறது. (அப் 1:8)

நற்செய்தி பணி பற்றி அப்போஸ்தலர் 13 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் மிஷனரிகளை அனுப்பும் திருச்சபைகளுக்கு ஒரு மாதிரியாக இருக்க வேண்டும். 

1) ஜெபத்துடன், உபவாசத்துடனும் கர்த்தரைத் தேடிக் கொண்டு, ஆண்டவருக்கு தங்களை முழுவதுமாய் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஆவிக்குரிய தலைவர்கள் மூலமாகப் பரிசுத்த ஆவியானவரால் ஆரம்பிக்கப்படுவது நற்செய்தி பணியாகும்.

(அப். 13:2)


2) திருச்சபையானது பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதல், தீர்க்கதரிசன ஊழியம் மற்றும் பரிசுத்த ஆவியின் செயல்பாடுகளை உணர்ந்து கொள்ள வேண்டும். (அப் 13:2)


3) ஊழியம் செய்ய புறப்பட்டுச் செல்லும் நற்பணியாளர்கள் பரிசுத்த ஆவியானவரின் அழைப்பு, சித்தம் இவற்றின் அடிப்படையில் செல்ல வேண்டும். (அப் 13:2)


4) உபவாசித்து ஜெபிப்பதாலும், பரிசுத்த ஆவியின் சித்தத்துக்கு இசைந்து எப்போதும் செயல்படுவது நாடுவதாலும் 

(அப் 13:3,4,) தேவன் இவர்களைத் தம் நற்செய்திப் பணிக்கு அழைத்துள்ளார் என்று திருச்சபையானது உறுதி செய்து கொள்ள முடியும். பரிசுத்த ஆவியானவர் விரும்பும் நபர்களை மட்டுமே திருச்சபைகள் நற்செய்திப் பணியாளர்களாக அனுப்ப வேண்டும். 


5) திருச்சபையில் இருந்து நற்செய்தி பணியாளர்கள் மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்து ஊழியத்திற்கு அனுப்பி வைப்பதால், அவர்களுக்குத் திருச்சபை அளிக்கப்படும் ஆதரவும், ஊக்கமும் காட்டப்படுகிறது. திருச்சபைகள் ஊழியர்களை அனுப்பும் போது அன்புடனும், தேவனுக்குப் பிரியமான முறையில் அனுப்ப வேண்டியது அவர்களின் பொறுப்பு (3யோவா 6)

அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் (அப் 13:3;யோவா 6:18,19) அவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும். 

(லூக்10:7; 3யோவா 6-8), அவர்களுக்குத் தேவையான அன்பு காணிக்கைகளை அனுப்ப வேண்டும். (பிலி 4:10,14-18).

மிஷனரிகளை அனுப்பும் திருச்சபைகளின் தங்கள் பணி, கரிசனை நோக்கம் ஆகியவற்றின் விரிவாக்கமே நற்செய்திப் பணியாளர்களை 

ஊழியத்துக்கு அனுப்புவதாகவும். "சத்தியத்திற்கு உடன் வேலையாட்களாய் இருக்கும்படி"திருச்சபையானது இவ்விதமாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறது.

 (3யோவா 8;பிலி1:5).


6) நற்செய்திப் பணியாளர்களாக ஊழியத்துக்குச் செல்பவர்கள் 

இயேசு கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரையும் இழக்க தயாராக இருக்க வேண்டும். 

(அப் 15:26).


தற்போது சுவிசேஷத்தை அறிவிப்பது ஒரு பெரிய சவால்தான். ஆனாலும் தேவன் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற கிருபைகளை, வல்லமைகளை, ஞானத்தை, அறிவை, புத்தியை நமக்கு தந்து கொண்டே இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்

ஆகையால் நாம் எந்த மிரட்டலுக்கும் பயப்பட வேண்டாம், அன்றைக்கும் சீஷர்களை மிரட்டினார்கள், அடித்தார்கள், காவலியில் வைத்தார்கள், அந்த நாமத்தை குறித்து பேசக்கூடாது என்று கட்டளை போட்டார்கள். (அப் 4)

அதைக் கண்டு அப்போஸ்தலர்கள் பயந்து போகவில்லை பரிசுத்த ஆவி நிறைந்து ஜெபித்தார்கள் அந்த இடம் அசைந்தது தேவன் பெரிய காரியங்களை செய்தார் இன்றைக்கும் நம் மூலமாக அதிபயங்கரமான காரியங்களை செய்வார், என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு போங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.



Comments

Anonymous said…
அருமை வாழ்த்துகள்

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை