நான் அழைத்த ஊழியத்திற்காக

நான் ஊழியத்துக்காக அழைத்தேன்...

(அப். 13:2)

பவுலையும், பர்னபாவையும் அந்தியோகியா திருச்சபையால் நற்செய்தி பணி செய்வதற்காக அழைத்து, அபிஷேகம் செய்தார்கள். அவர்களுடைய வேலையின் தன்மை கீழ்க்கண்ட வசனங்களில் தெரிய வருகிறது. 

(அப் 9:15; 13:5; 22:14,15,21; 26:16-18).


1) பவலும் பர்னபாவும் : நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கவும் மக்களை கிறிஸ்துவிடம் இரட்சிக்கும் விசுவாசத்திற்கு அழைத்து வருதல் ஆகியவற்றைச் செய்ய அழைக்கப்பட்டார்கள்.

அரசியல் சம்பந்தமான அல்லது சமுதாய முன்னேற்றப் பணிகளைச் செய்வதற்கு அப்போஸ்தலர்கள் அனுப்பப்பட்டதாகப் புதிய ஏற்பாட்டில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதாவது ரோமப்பேரரசின் குடிமக்களின் நன்மைக்காக சமுதாயம், அரசியல் பணிகளை ஊக்குவித்து அதே வேலையில் நற்செய்தியையும் கூறி, விசுவாசிகளைச் சேர்த்துச் சபையை அமைப்பது அவர்களது பணியல்ல. அவர்களின் நோக்கம் மக்களைக் கிறிஸ்துவிடம் அழைத்து வருவது 

(அப் 16:31; 20:21),

மக்களை சாத்தானின் வல்லமையிலிருந்து விடுவித்தல் (அப்26:18),

அவர்கள் மேல் பரிசுத்த ஆவியை வரவழைத்தல் 

(அப்19:6), அவர்களை ஒரு சபையில் சேர்த்து, நிலைப்படுத்துதல் ஆகியவையாகும். இந்தப் புதிய விசுவாசிகளிடம் பரிசுத்த ஆவியானவர் வந்து, அவர்களில் வசிக்கவும், அன்பின் மூலம் தம்மை வெளிப்படுத்தவும், அவர்களுக்கு ஆவிக்குரியவர் வரங்களைக் கொடுக்கவும் செய்தார்.(1கொரி 12-13) அவர்களுக்குள் வாசமாயிருந்து அவருடைய வாழ்க்கையை மறுரூபமாக்கி, அவர்களுடைய வாழ்க்கை, ஜீவனுள்ள இரட்சகருக்கு, மகிமை உண்டாகும்படிச் செய்தார்.


2) இந்த நற்செய்தியை அறிவிக்கும் ஊழியர்கள், பணிகளைச் செய்ய வேண்டும். மற்றவர்களைச் சாத்தானின் ஆளுகையிலிருந்து விடுதலையாக்கிக் கிறிஸ்துவிடம் சேர்த்து,(அப் 26:18) அவர்களை சீஷராக்கி, அவர்கள் பரிசுத்த ஆவியையும், ஆவியின் வரங்களையும் பெறும்படி உற்சாகப்படுத்துங்கள் (அப் 2:38; 8:17) கிறிஸ்து கட்டளையிட்ட யாவற்றையும் அவர்களுக்கு கீழ்படியச் செய்ய வேண்டும்.

(மத்28:19,20), இவற்றின் அடையாளங்களும், அற்புதங்களும், வியாதியஸ்தர்களைக் குணமாக்குதலும், அசுத்த ஆவியின் பிடியில் இருப்பவர்களை விடுதலையாக்குவது 

(அப் 2:43; 4:30; 8:7;10:38;மாற் 16:17,18;) பின் தொடர வேண்டும். நற்செய்தி அறிவிக்கும் உன்னதமான பணியுடன், தேவையில் இருப்பவர்களுக்கு அன்பும், இரக்கமும் காட்டி உதவி செய்யும் செயல்களும் சேர்ந்திருக்க வேண்டும்.

(கலா 2:10) இவ்விதமாக நற்செய்திக்கு சாட்சி கூறும்படி அழைக்கப்பட்டு இருக்கும் அனைவருக்கும், தங்கள் ஊழியத்தைக் கிறிஸ்துவின் ஊழியத்தை முன்மாதிரியாகக் கொண்டு செய்ய வேண்டும்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை