திராட்சை ரசம்

 அவர்களுக்கு திராட்சை ரசம் இல்லை. (யோவான் 2:3)

இந்த விளக்கம் தரும் வேதாகமம் கூறுவதற்கு மாறாக சிலர், திருமண வீட்டில் கொடுக்கப்பட்ட திராட்சரசமும், இயேசு கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட திராட்சரசமும், அதிக அளவில் அருந்தப்படும் போதை தரும் மதுபானமே என்கின்றனர். 

இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுமானால் பின்வரும் காரியங்களை ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வரும். 

1) திருமண வீட்டிற்கு வந்த விருந்தினர் குடித்து வெறித்திருக்க வேண்டும்.

2) இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாள், மதுபானம் குறைந்துவிட்டதென்று வருந்தி, ஏற்கனவே குடித்து வெறித்த களியாட்டக்காரருக்கு இந்த மது பானம் தருமாறு கேட்டிருக்க வேண்டும். 

3) இயேசு கிறிஸ்துவும் தன் தாயின் விருப்பத்துக்கு இணங்கி 120 முதல் 180 காலன்கள் வரை தேவைக்கு அதிகமான மதுபானத்தை உண்டாக்கி (யோவா 2:6-9) எல்லா விருந்தினரையும் குடித்து வெறிக்கச் செய்திருக்க வேண்டும். 

4) அவர் "தான் மகிமையை வெளிப்படுத்தும் படி" யாக செய்த முதல் "அற்புதத்தில்" போதை கொடுக்கும் திராட்ச ரசத்தைக் கொடுத்து (யோவான் 2:11), பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனின் குமாரன் என்று மனிதர்கள் நம்பும்படி செய்திருக்க வேண்டும். 

மேற்சொல்லப்பட்ட கருத்துக்களை நாம் நிராகரிக்க முடியாது. இயேசு கிறிஸ்து மதுபானமான திராட்சரசத்தை வழங்கினார் என்று குற்றஞ்சாட்டுவது வேத ஆராய்ச்சிக்கான உரிமையின் வரம்பை மீறுவது அல்ல. வாக்கியங்கள் முழுவதும் சாட்சியாகக் கூறப்படும் ஒழுக்க நெறிகளுக்கு மாறானது.

தேவனுடைய குணாதிசயங்கள், கிறிஸ்துவின் நேர்மை, மனிதர்மேல் அவருக்குள்ள அன்பு, மரியாளின் நல் நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, கானா ஊரில் வழங்கப்பட்ட திராட்சரசம், மதுபானம் என்று கூறுவது திட்டவட்டமான தேவ தூதஷனம் என்பது புரியும். அப்படி வலியுறுத்தும் கருத்துக்களையும், அதன் மாறுபாடுகளையும் கொண்ட விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, உண்மையும், நம்பத் தகுந்ததுமான விளக்கம் அதாவது தம் மகிமையை வெளிப்படுத்தும் வகையில் இயேசு கிறிஸ்து முலமாக கொடுக்கப்பட்ட திராட்சரசம், போதை கொடுக்காத பிழிந்த சுத்தமான திராட்சரசம் என்பதாகும். 

இன்றைய உயர்ந்த முத்துக்கள்.

வேதம் நமக்கு என்ன சொல்கிறதோ அதை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்வோம். வேதம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக எழுதப்பட்டது என்பதை விசுவாசிக்கிற யாவரும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் விசுவாசத்தின் நிலைத்திருப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக மேலும் உங்கள் சந்தேகங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் கூடுமான அளவு வேதத்திலிருந்து தெளிவுபடுத்த முயற்சிப்போம் ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.


Comments

Anne Faithlyn said…
அருமையான பதிவு

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை