இரவலாக வாங்கப்பட்ட கோடாரி.

இரவலாக வாங்கப்பட்ட கோடாரி.

தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.

நாங்கள் யோர்தான்மட்டும்போய் அவ்விடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.

அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,

அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.

ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.

தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ​​ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,
அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.

(2 இராஜாக்கள் 6:1-7 வரை வாசிக்கவும்.)

இந்த வசனங்களை பார்க்கும் போது ஒருவன் இரவலாக வாங்கப்பட்ட கோடரியை
அருகாமையிலிருந்து யோர்தான் நதியில் தொலைத்தான்.

கோடரி என்பது தேவன் நமக்கு கொடுத்த அற்புதமான வாழ்க்கையாகும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவதற்கு முன்பு நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை அற்புதமானது ஆச்சரியமானது அது திரும்ப பெற முடியாத வாழ்க்கை.

அதில் குழந்தை பருவம், சிறுவர் பருவம், வாலிப பருவம், இப்படிப்பட்ட வாலிப பருவங்களில் அல்லது நடுத்தர பருவங்களில்
மதுபானம்,சிற்றின்பம், கொலை,கொள்ளை, காதல், களவு, பொய், விபச்சாரம், மோகம், பண ஆசை, பொருளாசை, மண்ணாசை, இப்படி பல பாவங்களில் விழுந்து நமக்கு கொடுத்த அற்புதமான வாழ்வை இழந்து விட்டோம்.
ஆதாம், சிம்சோன் போல....

பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை இயேசுகிறிஸ்து மூலமாக பாவத்தினால் இழந்துபோன வாழ்வை திரும்பவும் நமக்கு இரவலாகக் கொடுத்தார்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
(ரோமர் 5:8)

தொலைத்த பொருள் திரும்ப கிடைக்கும் போது மிகுந்த சந்தோஷம்.
இயேசு கிறிஸ்துவுக்குள்
புதிதாக பெற்ற வாழ்வில் என்ன ஒரு ஆனந்தம் என்றால் ஒரு சந்தோஷம்.

அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை அநேகர் பாதுகாப்பதில்லை அதையும் சிலர் தொலைத்து விடுகிறார்கள். அது இரவலாக வாங்கப்பட்டதே அதை ஒரு நாள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் போய் விடும் நிலைக்கு தள்ளப்படுவது எத்தனை பயங்கரம்.
(ஏபி 2:4 10:29)

ஏற்கனவே பாவத்தினால் தான் நமது வாழ்க்கையை தொலைத்து விட்டோம்.

திரும்பவும் அது இரவலாக நமக்கு கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால்

கேயாசி என்பவன் பணத்திற்கு ஆசைப்பட்டு தன் சரீர சுகத்தை தொலைத்து விட்டான்.

யூதாஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு அப்போஸ்தல ஊழியத்தையும் இயேசு கிறிஸ்துவின் ஐக்கியத்தையும் தொலைத்து விட்டான்.

தேமா என்பவன் இப்பிரம்பஞ்சத்தின் மேல் ஆசை வைத்து பரிசுத்தவானின் ஐக்கியத்தை தொலைத்தான்.

தீனாள் உலகை சுற்ற ஆசைப்பட்டு கற்ப்பை தொலைத்தாள்.

அதுபோல இந்த தீர்க்கதரிசியின் புத்திரனும் இரவலாக வாங்கப்பட்ட கோடரியை தொலைத்து விட்டான்.

இவர்களோடு கூட தீர்க்கதரிசி எலிசாவும் வந்திருந்தான். உங்களை அவரிடம் முறையிட்டான்.

தீர்க்கதரிசி எலிசா எந்த இடத்தில் தொலைத்தாய் அதை எனக்கு காண்பி என்று சொன்னார்.
அவன் காண்பித்தான் அவன் ஒரு கொம்பு மூலமாக அதை மிதக்க பண்ணி அவனிடம் ஒப்படைத்தார்.

நாம் எந்த இடத்தில் தொலைத்தோமோ அதே இடத்தில் தேடினால் தான் தொலைத்தது கிடைக்கும்.

இன்று தொலைகிறது ஒரு இடம்
தேடுகிறது இன்னொரு இடம். எப்படி கிடைக்கும், "நீ எங்கே தொலைத்தாயோ அங்கே தேடு."*

அன்றைக்கு அவர்களோடு தீர்க்கதரிசி எலிசா இருந்ததுபோல இன்றைக்கு நம்மோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூட இருக்கிறார். நாம் தொலைத்த இடத்தை அவரிடம் காண்பிக்கும்போது அதை திரும்பப் பெற்றுக்கொள்ள நூற்றுக்கு நூறு வாய்ப்புள்ளது.
தேவனுடைய ஊழியரே அல்லது தேவனுடைய பிள்ளையே தேவன் உனக்கு அபிஷேகத்தை இரவலாகக் கொடுத்தார்,

நல்ல கிருபைகளை உனக்கு கொடுத்திருக்கிறார்,

நல்ல திறமைகளை உனக்கு கொடுத்திருக்கிறார்,

நல்ல ஐக்கியத்தை உனக்கு கொடுத்திருக்கிறார்,

நல்ல பரிசுத்தவான்களை உனக்கு கொடுத்திருக்கிறார்.

நல்ல விசுவாச குடும்பங்களை உனக்கு தந்திருக்கிறார்,

இப்படி அநேக காரியங்களை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார்.

ஒரு வேளை இப்படிப்பட்ட நற் பொருளை நீங்கள் தொலைத்து விட்டீர்களா?

அது பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாக இரவலாக நமக்கு கொடுக்கப்பட்டது என்பதை மறந்து போனீர்களா?

எந்த இடத்தில் தொலைத்தீர்கள் ?
அந்த இடத்தில் தேடுங்கள். அப்போது கண்டடைவீர்கள். ஆமென் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை