மோசே கர்த்தரை நோக்கி

 மோசே கர்த்தரை நோக்கி வேண்டினான்.

(யாத் 32:11).

யாத் 32:11-14 வரை உள்ள, மோசேயின் மன்றாட்டிற்கு தேவன் இறங்கி செவி கொடுக்கும் நிகழ்ச்சி, தேவன் தமது உண்மை உள்ள ஊழியரின் விண்ணப்பங்களுக்கு செவி கொடுக்கிறார் என்பதையும், அவருடைய மீட்பின் திட்டத்திலும், தீர்மானத்திலும் அவர்கள் பங்கு கொள்ள அனுமதிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. 


1) தேவன் திட்டவட்டமாக கலகம் செய்யும் மக்களை அழிக்கத் திட்டமிட்டார்.

(யாத் 32:10) எனினும் மோசே ஒரு மத்தியஸ்தனாகச் செயல்பட்டு, தேவனுக்கும் மக்களுக்கு மத்தியில் செயலாற்றி தேவன் தமது கோபத்தை மக்களிடமிருந்து விலக்கிக் கொண்டு அவர் செய்ய நினைத்ததை செய்யாதிருக்கும்படி வேண்டிக் கொண்டார்.


2) மோசேயின் இடைவிடாத ஊக்கமான ஜெபத்தால், தேவன் மனம் இரங்கினார்.

(யாத் 32:14;யாக் 5:16).


3) இங்கு வலியுறுத்தப்படும் முக்கியக் கருத்து என்னவெனில், 

தேவன் தமது ஊழியர்களைத் தம்மோடு இணைத்து செயலாற்றும் உடன் ஊழியர்களாக ஆக்கிக் கொள்கிறார் என்பதே.

(1 கொரி 3:9) அவர் அவர்களை மத்தியஸ்தர்களாகவும், வழி தவறிச் செல்கிறவர்களுக்காக இடைவிடாது மன்றாட்டு ஏறெடுப்பவர்களாகவும் ஏற்படுத்தினார். (ரோம 9:2)

ஓரளவுக்கு அழிந்து போகிறவர்களின் தலைவிதி இவர்களின் கையில் இருக்கிறது.(மத் 9:38)

இவ்விதமாக ஒரு உண்மை ஊழியனின் மன்றாட்டு, தேவனுடைய உள்ளத்தை மாற்றி, அவர் கொடுக்க நினைத்திருக்கும் நியாயத்தீர்ப்புக்குப் பதிலாக மீட்பைக் கொண்டு வரும்.

(எசே 22:30) 

ஜெபம் நிச்சயமாக காரியங்களை மாற்றி விடுகிறது. 

(சங் 106:44,45; எரோ 18:8; 26:3,13,19; ஆமோ 7:2-6; யோனா 3:10).


4) மீட்பின் நம்பிக்கை இருக்கும் வரை தேவன் ஒரு உண்மையும் விசுவாசமும் உள்ள ஊழியனின் மன்றாட்டைப் புறக்கணிப்பதில்லை.

பாவம் தன் உச்சக்கட்டத்தை அடையும்போது மட்டுமே மன்றாட்டை தேவன் கேட்பதில்லை. 

(எரோ 15:1; எசே 14:14,16).


5) தேவன் தமது கோபத்திலிருந்து விலகித் தமது மக்கள் மீது கோபத்திற்குப் பதிலாக இரக்கத்தை காட்ட, தவறு செய்யக் கூடிய மனிதரின் விண்ணப்பத்தை கேட்டு மனம் மாறுகிறார் என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு இரகசியமே.

தேவன் ஒரு மன்னிக்கும் குணமில்லாத தெய்வம் அல்ல அல்லது மாற்ற முடியாத விதிக்குக் காரணமான ஒரு தேவன் அல்ல.

விசுவாசம், அன்பு இவற்றுடன் ஏறெடுக்கப்படும் தமது உண்மை உள்ள மக்களில் விண்ணப்பத்தைக் கேட்டு, மகிழ்ந்து செயல்படும் தனிப்பட்ட மனிதரின் அன்பின் தேவன் அவர்.


இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக கன்று குட்டியை செய்து வழிபட்டு பாவம் செய்தது மாத்திரமல்ல, அதைவிட கொடிய பாவம் ஆகிய ஆபாசமான நடனமாடவும், முறையற்ற உடலுறவு கொள்ளவும் தொடங்கினார்கள்.(யாத் 32:25) தேவனுடைய கற்பனை மீறி விட்டார்கள். (யாத் 32:10ல் இவர்களை அழித்து போடவும் தேவன் தன் நோக்கத்தை மோசேக்கு தெரியப்படுத்தினார்.

அதன் விளைவாக ஏறெடுக்கப்பட்ட ஜெபம் தான் இந்த மோசேயின் ஜெபம்.


இன்றைக்கும் விசுவாசிகள் நீங்கள் யாருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சற்று கவனித்து பாருங்கள். 

உங்கள் ஊழியர்களை நினைத்துப் பாருங்கள். உங்களோடு கூட சபைக்கு வரும் சக மக்களை நினைத்து பாருங்கள். அவருடைய பரிசுத்த வாழ்வுக்காக தேவனை நோக்கி ஜெபியுங்கள். இதைத்தான் வேதம் நமக்கு வலியுறுத்துகிறது. 

ஆனால் பிசாசு சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிய இடத்தில் ஜெபத்தையும் ஜெபம் பண்ண வேண்டிய இடத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படியாக செய்துவிட்டான்.

என்னுடைய குறுஞ்செய்திகளை அனுதினமும் வாசிக்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 




Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை