இயேசுவின் உயிர்த்தெழுதல்
நம்பிக்கை தரும் நற்செய்தியின் முக்கியமான உண்மைகளில் ஒன்று.
(1 கொரிந்தியர் 15:1-8).
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அவருடைய உயிர்தெழுதலின் முக்கியத்துவம் என்ன ?
1) இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நிரூபிக்கிறது.
(யோவா 10:17,18; ரோமர் 1:4)
2) அவருடைய மீட்புக்கான மரணத்தினால் கிடைக்கும் பலனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.(ரோமர் 6:4; 1கொரி 15:17).
3) பரிசுத்த வேதாகமத்தின் சத்தியத்தை உறுதி செய்கிறது. (சங் 16:10; லூக் 24:44-47; அப் 2:31).
4) அக்கிரமக்காரர் மீது நியாயத்தீர்ப்பு உண்டு என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது.
(அப் 17:30,31).
5) கிறிஸ்துவின் ஈவாகிய பரிசுத்த ஆவிக்கும், அவருடைய மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அடித்தளமாய் இருக்கிறது.
(யோவா 20:22; ரோமர் 5:10; 1கொரி 15:45). பரலோகத்தில் விசுவாசிகளுக்காகப் பரிந்து பேசி வேண்டுதல் செய்வதற்கும் இதுவே அடிப்படை. (எபி 7:23-28).
6) விசுவாசிகளுக்குப் பரலோகத்தில் சுதந்திரம் உண்டு என்பதை உறுதி செய்கிறது.(1பேதுரு 1:3,4)
மேலும், ஆண்டவரின் வருகையின் போது அவர்கள் உயிர்த்தெழுவார்கள் அல்லது மறுரூபமடைவார்கள் நம்பிக்கையைத் தருகிறார்கள்.
(யோவா 14:3;1தெச 4:14)
(மறுபடியும் வருவேன்,
உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன், என்ற நம்பிக்கை தருகிறது)
7) நமது அன்றாட வாழ்க்கை அனுபவத்தில், கிறிஸ்துவின் பிரசன்னத்தையும், பாவங்களின் மீது வல்லமையையும் தருகின்றது. ( கலா 2:20; எபே 1:18,20.)
கிறிஸ்தவர்களுக்கு மிகவும் நம்பிக்கை ஊட்டும் செய்தி இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார். அவர் நம்முடன் இருக்கிறார். என்கிற நம்பிக்கையே. நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் அஸ்திபாரமாகும்.
தொடர்ந்து ஜெபித்து நம்பிக்கையிலே உறுதியாய் இருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
Comments