அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு... (அப் 2:4)



பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட்டதன் முக்கியத்துவம் என்ன ?


1) யோவேல் 2:28,29 இல் "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்"

என்று தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறுதலின் ஆரம்பமாயிருந்தது.

(அப் 1:4-5; மத் 3:11; லூக் 24:49;யோவா 2:28-29)


2) கடைசிக் காலம் ஆரம்பித்துவிட்டபடியால்

(அப் 2:17; எபி 1:2; 1பேது 1:20) இப்போது, ​​ஒவ்வொருவரும் மனந்திரும்பிக் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாகத் தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. 

(அப் 3:19; மத் 3:2; லூக் 13:3;அப் 2:17)


3) சீஷர்கள் யாவரும் உன்னதத்திலிருந்து வல்லமை பெற்றிருந்தார்கள். 

(லூக் 24:49; அப் 1:8), அதனால் அவர்கள் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருக்க வேண்டும், அவர்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், தேவனுடைய நியாயத் தீர்ப்பைக் குறித்தும் 

கண்டித்துணர்த்தவும் வழி விலகியவர்களைத் திருப்பிக் கிறிஸ்துவின் இரட்சிப்பை அடைய வழி காட்டவும் முடிந்தது. (அப் 1:8;4:13,33; 6:8;

ரோமர் 15:19; யோவா 16:8).


4) பரிசுத்த ஆவியானவர் எல்லா தேசங்களின் மக்களையும் இரட்சிக்க விரும்பி அதற்காக முயற்சிக்கும் ஒரு ஆவியாகத் தம்மை வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரிடமும் தேசங்களின் ஆத்துமாக்களை மீட்க வேண்டும் இதே ஆசை நிரம்பியிருந்தது.

(அப் 2:38-40; 4:12,33; ரோமா 9:1-3; 10:1). 

இவ்விதமாக "உலக நற்செய்திப் பணியின் ஆரம்பமே பெந்தேகோஸ்தே" என்று அறிகிறோம். 

(அப் 2:6-11,39, 1:8).


5) சீஷர்கள் ஆவியானால் நிறைந்த ஊழியர்களானார்கள். அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவைப் பற்றிப் பிரசிங்கத்தார்கள். மற்றவர்களை மனந்திரும்பச் செய்து, கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ளச் செய்தனர் ,

செய்தது மட்டுமின்றி பெந்தேகோஸ்தே நாளில் தாங்கள் பெற்ற அதே ஆவியை மனந்திரும்பிய புது விசுவாசிகள் பெற்றுக்கொள்ள வழி காட்டினார்கள். (அப் 2:38,39) இவ்வாறு பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற ஆத்மாக்களை வழிநடத்துவதே புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களின் ஊழியத்தின் திறவுகோலாய் இருந்தது.

(அப் 8:17; 9:17,18; 10:44-46;19:6)


6) பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் மூலமாகக் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார்கள். இயேசு கிறிஸ்து உலகில் செய்ய, போதிக்க ஆரம்பித்த அனைத்தையும் சீஷர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தொடர்ந்து செய்தார்கள். 

(அப் 1:1;யோவா 14:12).


நமது ஜெப வாழ்க்கையில் தொடர்ந்து பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக ஜெபம் பண்ணுங்கள். நிச்சயமாக தேவன் நம்முடைய அக்கினி நாவுகளால் நம் சிரசின் மேல் இறங்குவார்.

நிச்சயமாக நம்மை பயன்படுத்துவார். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென். 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை