பேதுருவின் பெந்தேகோஸ்தே நாளின் பிரசங்கம். (அப் 2:14-40)
பெந்தேகோஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம், அதிகாரம் 3 வசனங்கள் 11 முதல் 26 வரை உள்ளதைப் போல் நற்செய்தியை அறிவிக்கிறது. கொண்டுள்ளது.
1) இயேசுவே ஆண்டவரும், கிறிஸ்துவும் ஆனவர் . சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, மேன்மையாக உயர்த்தப்பட்டார்.
(அப் 2:22-36; 3:13-15).
2) இப்பொழுது தம் பிதாவின் வலது பரிசத்தில் இருக்கிறார். இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றும் அனைவரின் மீதும் பரிசுத்த ஆவியை ஊற்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.
(அப் 2:16-18,32-33; 3:19).
3) இயேசுவே ஆண்டவர் என்று எல்லோரும் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, பாவ
மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற வேண்டும்.(அப் 2:36-38; 3:19).
4) விசுவாசிகள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் வரம் அல்லது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுதல் ஆகியவை கிடைப்பதற்கு தாங்கள் மனந்திரும்பி, விசுவாசத்தில் உறுதிப்பட்டபின் எதிர்பார்க்க வேண்டும்.
5) விசுவாசத்தோடு சத்தியத்தை கேட்பவர்கள் இந்த உலகத்தின் ஆசாபாசங்களுக்கு விலகி, இந்த பொல்லாத அக்கிரம சந்ததியில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.(அப் 2:40; 3:26)
6) தேவனுடைய இராஜ்ஜியத்தை முழுவதுமாகக் கொண்டு வரும்படி இயேசு திரும்ப வருவார்.(அப் 3:20,21)
தொடர்ந்து வேத வசனத்தின் சத்தத்தை கேட்டுக் கொண்டிருக்கும் போது நமக்குள் மாற்றங்கள் ஏற்படும் தேவனுடைய செயல்களை நாம் செய்வதற்கு ஏதுவாக மாறும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்
Comments