நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். (அப் 1:8)

 *

தேவன் மீது விசுவாசம் வைத்திருக்கிற ஒவ்வொருவரும் நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள் என்பதை கருத்தில் கொண்டு உங்களோடு நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அப்போஸ்தலர் நடப்பு புத்தகத்தில் திறவுகோல் வசனம் இதுவே.

பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறுவதன் முக்கிய நோக்கம் வல்லமையைப் பெற்றுக் கொள்வதே. இந்த வல்லமையினால் இழந்து போன மக்களை மீட்டு, இரட்சித்து, அவர்கள் அனைவரும் கிறிஸ்து கற்பித்த கட்டளைகளை அனைத்துக்கும் கீழ்படியச் செய்ய முடியும். இதன் பலன், இயேசு கிறிஸ்து எல்லோராலும் அறியப்பட்ட, நேசிக்கப்பட்ட, புகழப்பட்டவராகவும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களின் ஆண்டவராகவும் இருப்பார்.

(மத் 28:18-20;லூக் 24:49;யோவா 5:23;15:26,27;).


1) 'வல்லமை '(கிரே.டுனாமிஸ்) என்பது திறமை அல்லது பலம் காட்டிலும் உயர்ந்தது. இது ஒரு கிரியை அல்லது செயல் நடந்து கொண்டிருக்கும்போது செயல்படுகிறது. டாக்டர் லூக்கா தான் எழுதிய இரண்டு புத்தகங்களிலும் 

(லூக்கா, அப்போஸ்தலர் நடபடிகள்) பரிசுத்த ஆவியின் வல்லமையினால், அசுத்த ஆவிகளை துரத்தும் வல்லமை, பினியாளிகளை குணமாக்கும் வல்லமையாகிய இரண்டும் முக்கிய வல்லமைகளும் அடங்கும். 

தேவனுடைய இராஜ்ஜியம் அறிவிக்கப்படும் போது இவை இரண்டும் செயல்படும்.

(உதாரணமாக, லூக் 4:14,18,36;

5:17;6:19; 9:12; அப் 6:8; 8:4-8, 12-13; 10:38;14:3; 19:8-12)

தேவ ஊழியர்கள் மற்றும் விசுவாசியின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் வல்லமையை அருளுவதே

 "பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறுதலில்"தேவன் வைத்திருக்கும் நோக்கமாகும்.


2) ஒரு தனி நபரின் இரட்சிப்பு, மறுபிறப்பு என்பவற்றுடன் லூக்கா "பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம்" பெறுவதை இணைத்துப் பேசவில்லை. ஆனால் விசுவாசியின் உள்ளத்திலிருக்கும் வல்லமை அதிக ஆற்றலுடன் சாட்சி கூற அவனுக்கு திறனளிக்கிறது என்று கூறினான்.


3) சாட்சியாயிருப்பதிலும், நற்செய்தி அறிவிப்பிலுள்ள பரிசுத்த ஆவியின் முக்கிய கிரியையானது, வல்லமையோடு விசுவாசி மீது வந்திறங்கி கிறிஸ்துவின் இரட்சிக்கும் பணிக்கும், உயிர்த்தெழுதலுக்கும் சாட்சியளிப்பதாகும்.

(அப் 2:14-42) பரிசுத்த ஆவியானவர் சாட்சியளிப்பது எப்படி என்றும், நமது வாழ்வில் அதன் அர்த்தம் என்றும் அறியவும் தொடர்ந்து ஜெப நிலையில் வாசிப்போம்.


(2)எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

இயேசுவே ஆண்டவரென்றும், இரட்சகரென்றும், பிரசிங்கத்தக்க வல்லமையைப் பரிசுத்த ஆவியில் பெறும் ஞானஸ்நானம் தருவதோடு அந்தச் சாட்சியின் வல்லமையைப் பலப்படுத்துகிறது. ஏனெனில் இந்த ஞானஸ்நானத்தினால் பிதாவாகிய தேவனோடும், குமாரனாகிய இயேசுவோடும், பரிசுத்த ஆவியோடும் ஆழமான, உறுதியான தொடர்பு ஏற்படுகிறது.

(யோவா 14:26; 15:26,27).


1) நம்மோடு இயேசு கிறிஸ்துவின் சமூகம் இருப்பதைப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தி, அதை உண்மையாக்குகிறார்.

(யோவா 14:16-18)

இயேசு கிறிஸ்துவோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் நம்மிடம் நம்முடைய இரட்சகரை பிரியப்படுத்தவும், அவரை கனம் பண்ணவும், நேசிக்கவும் ஆசை உண்டாகும்.


2) பரிசுத்த ஆவியானவர் நீதிக்கும் (யோவா 16:18-10) உண்மைக்கும் (யோவா 16:13)

சாட்சியளிக்கிறார். இது கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டு வருகிறது.

(யோவா 16:14)

வார்த்தைகளால் மட்டுமல்ல, கிரியைகளாலும் கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாகிறது. இவ்வாறு கிறிஸ்துவின் மீட்புப் பணிக்குச் சாட்சியளிக்கும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற நாம் கிறிஸ்துவைப் போற்றுதல், அன்பு கூறுதல், சத்தியத்தைக் கடைப்பிடித்தல், நீதியை நிலைநாட்டுதல் போன்ற பண்புகளை நம்மில் வெளிப்படுத்த வேண்டும். 

(1கொரி 13அதிகாரம்).


3) பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறுதல், ஆவினால் நிறைந்த விசுவாசிகளின் வாழ்வில் ஆரம்ப நிலையாகும். இதன் மூலம் அவர்கள் கிறிஸ்துவுக்காக சாட்சியளிக்கவும், வழி இழந்து போனோரின் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்துணர்த்தவும் வல்லமை பெறுகின்றனர். 

(யோவா 16:8)

உண்மையாக நற்செய்தியை அறிவிப்பவர்களிடமும், அதை ஏற்றுக்கொள்கிறவர்களிடமும் இந்த விதமான உணர்த்துதலின் பலன் வெளிப்படையாகத் தெரியும்.(2:39,40).


4) தங்கள் தீய வழிகளிலிருந்து மனந்திரும்பி தேவனிடம் திரும்பியவர்களுக்கு மட்டுமே பரிசுத்த ஆவியானால் ஞானஸ்நானத்தைக் கொடுக்க முடியும்.(அப் 2:38; 3:26).

கிறிஸ்துவோடு கூடிய உண்மையான அர்ப்பணிப்பினால் இது நிலையான அனுபவமாகும். 

(அப் 5:32)....


5) பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறுதல், பரிசுத்தமாயிருக்கும் ஒரு ஆவியில் பெறும் ஞானஸ்நானம் ஆகும்.

(பரிசுத்தமான ஆவி) 

(ரோமர் 1:4). இவ்விதமாக பரிசுத்த ஆவியானவர் முழு நிறைவுடன் நம்மில் கிரியை செய்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்திற்கு முற்றிலும் இசைந்தவர்களாயிருப்போம்.


இவ்வாறான வேத சத்தியங்களினால் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற நாம் ஒவ்வொருவரும், எப்படியாவது கிறிஸ்துவைப் பிரியப்படுத்தவேண்டுமென்ற    ஆசையுடையவர்களாக இருப்போம்.

அதாவது ஆவியின் பரிபூரணம் நமது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் இரட்சிக்கும், பரிசுத்தப்படுத்தும் பணியை நிறைவு செய்கிறது. 

(நிறைக்கிறது, பூர்த்தி செய்கிறது) பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுள்ளோம் என்று கூறுபவர்கள், ஆவியானவரின் பரிசுத்தத்துக்கு மாறாக வாழ்ந்து வருகின்றனர். கொண்டிருந்தால் அவர்கள் உண்மையற்றவர்களாகவும், ஏமாற்றுகிறவர்களாகவும், இருப்பார்கள். ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்துபவர்கள், அற்புதம் செய்கிறவர்கள், வெளிப்படையான அடையாளங்களை செய்து காட்டுபவர்கள், ஆவியானவர்கள் தூண்டுதல் பெற்றுச் பிரசங்கம் செய்கிறவர்கள், இவர்கள் விசுவாசக் குறைவு, அன்புத் தாழ்ச்சி, நீதியின்மை போன்றவற்றை உடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானால் நடத்தப்படுகிறவர்களல்ல.

அசுத்த ஆவினால் வழிநடத்தப் படுகிறவர்களாகும்.

(மத் 7:21-23; 24:24; 2கொரி 11:13-15;)

தொடர்ந்து சில முக்கியமான "ஆவியில் ஞானஸ்நானம் பெறுதல்" தொடர்ச்சியாக பதிவு செய்கிறேன்.

முழுமையாக வாசிக்கும் போது தான் இந்த கட்டுரை புரியும். எல்லாவற்றிலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை