உலகத்தை கண்டித்து உணர்த்துவார். (யோவா 16:8)



பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வரும்பொழுது (அப் 2:4).

சுவிசேஷத்தை அறிவிக்கையில் கண்டித்து உணர்த்துவதே முக்கிய வேலை ஆகும். கண்டித்து உணர்த்துதல் என்ற (எலஸ்கோ என்பது கிரேக்கபதம்) பதத்திற்கு அர்த்தம் *குற்றத்தை அறிவுறுத்தல், வெளிப்படுத்துதல், தவறு என நிரூபித்தல், நம்பச் செய்தல், என்பதாகும்.*


1) ஆவியானவரின் ஊழியமாகிய குற்றத்தை அறிவுறுத்தல் மூன்று பகுதிகளில் நடைபெறுகின்றன. 


அ) பாவம். பரிசுத்த ஆவியானவர் குற்ற மனசாட்சியையும் அதற்குப் பரிகாரமாக மன்னிப்பையும் பெறத் தூண்டும் படி பாவத்தையும், அவிசுவாசத்தையும் வெளிப்படுத்தி, கண்டித்து உணர்த்துவார். குற்றவாளி தவறு செய்வதைத் தொடர்ந்தால் குற்றத்தை அறிவுறுத்தும் பரிசுத்த ஆவி, குற்றவாளிகளுக்கு நேரிடும் பயங்கரமான பின் விளைவுகள் பற்றி தெளிவுபடுத்துகிறது. அதன்பிறகு அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக அது உண்மையான மனந் திரும்புதலுக்கும், இயேசுவை ஆண்டவரும், இரட்சகரமாக ஏற்றுக் கொள்ளவும் வழி நடத்தும். (அப் 2:37-38).


ஆ)நீதி. ஆவியானவர் இயேசுவை தேவனுடைய நீதியின் குமாரன் என்றும், உயிர்த்தெழுந்து, ஜெயம் பெற்றவர் என்றும் எல்லோருக்கும் இப்போது ஆண்டவரென்றும் மக்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்கிறார்கள். அவர் கிறிஸ்துவிலுள்ள தேவ நீதியின் நிலையை மக்கள் உணரவும், பாவம் எது என்பதைக் காண்பிக்கவும் செய்கிறார். 

உலகத்தை மேற்கொள்ள வல்லமையை தருகிறார். 

(அப் 3:12-16; 7:51-60; 17:31; 1பேது 3:18).


இ) நியாயத் தீர்ப்பு. ஆவியானவர் சிலுவையில் சாத்தான் தோல்வி அடைந்ததையும்(யோவா 12:31; 16:11). உலகத்துக்கு இப்போது தேவன் கொடுக்கும் நியாயத் தீர்ப்பையும் (ரோம 1:18-32).

முழு மனித குலத்துக்கும் பின்வரும் நியாயத்தீர்ப்பையும் பற்றி கூறி மனிதருக்குத் தெளிவுபடுத்துகிறார்.

(மத் 16:27; அப் 17:31; 24:25; ரோம 14:10; 1கொரி 6:2;

2கொரி 5:10; யூதா 14).


2) பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவது ஆவியானவருடைய வேலை.

பரிசுத்தாவியால் ஞானஸ்நானம் பெற்று, உண்மையாக ஆவியால் நிறைந்த மக்களிடம் அது கிரியை செய்யும். இயேசு ஆவியினால் நிறைந்து 

(லூக் 4:1).

உலகத்துக்கு அந்த "கிரியைகள் பொல்லாதவைகளென்று சாட்சியாகக் கூறினார் (யோவா 7:7;15:18). ஜனங்களை மனந் திரும்பும் படி அழைத்தார்.

(மத் 4:17)

யோவான் ஸ்நாகன் பிறப்பிலேயே ஆவினால் நிறைந்து"(லூக் 1:15)

யூத மக்களின் பாவங்களை வெளிப்படையாகக் கூறி, அவர்கள் தங்கள் வழிகளை விட்டுத் திரும்பவும் மாறு கட்டளையிட்டனர்.(மத் 11:7;லூக் 3:1-20)

பேதுரு, பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு"

(அப் 2:4) 3000 பாவிகளின் இதயத்தில் குற்றவுணர்வை உண்டாக்கி, மனம் திரும்பி

பாவ மன்னிப்பைப் பெறுமாறு அழைப்பு கொடுத்தான்.

(அப் 2:37-47).


3) இந்த பகுதியிலிருந்து, இந்த ஊழியக்காரரோ, சபையோ வெளிப்படையாக பாவத்தைக் கண்டித்துணர்த்தி, மனந் திரும்புதலுக்கும், பரிசுத்த வேதாகம நீதிக்கும் கீழ்படிய அழைப்பு கொடாவிட்டால் அவர்கள் பரிசுத்த ஆவினால் ஆட்கொள்ளப்பட்டவர்களல்ல என்பது தெளிவாகிறது. அவி விசுவாசியின் பாவம் உணர்த்தப்பட்டு (அவன் இருதயத்தின் ரகசியம்) அதனால் அவன் பாவ உணர்வடைந்து இரட்சிப்பை அடைவதன் மூலம் தேவனுடைய பிரசன்னம் உணரப்படுகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. 

(1கொரி 14:24-25)


முதலாவது தேவ ஆவியானவர் நாம் அறிந்து செய்கிற, அறியாமல் செய்கிற, எல்லாவற்றையும் கண்டித்து உணர்த்துவார். சரியான பாதையில் நடத்துவார். 

சிலர் ஆவியானவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை எனவே சில சபைகளில் பாவம் தொடர்ந்து கிரியை செய்கிறது.

அவர்களும் விடுதலை பெற முடியவில்லை மற்றவர்களையும் விடுதலை செய்ய முடியவில்லை.


இப்போதெல்லாம் தேவ ஆவினால் நீங்கள் குற்றத்தை உணர்த்தினாலும் சிலர் அவர்கள் திருந்த மாட்டார்கள், அவர்கள் உணரவல்லவர்கள், அவர்கள் சத்தியத்தை புரிந்து கொள்ளாதவர்கள், பேசி பிரயோஜனம் இல்லை என்கிறார்கள். 

வேதம் சொல்கிறது அவர்கள் கேட்டாலும் சரி, கேட்கவிட்டாலும் சரி, நீ தொடர்ந்து என் வார்த்தையை உரைத்துக் கொண்டே இரு இதை வணங்கா கழுத்துள்ள ஜனம் என்றார் தீர்க்கன் மூலமாக. நீ அவர்கடைய இரத்த பழிகளுக்கு நீங்கலாய் இருப்பாய்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 


Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை